பகுப்பு:வைஷ்ணவம்

மரபு விக்கி இருந்து

Dev (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:11, 26 டிசம்பர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

  •                                                                    திவ்வியப் பிரபந்தம்

    பொய்கைமுனி, பூதத்தார், பேயாழ்வார், தண்
    பொருநல்வருங் குருகேசன், விட்டுசித்தன்,
    துய்ய குலசேகரன், நம் பாணநாதன்,
    தொண்டரடிப்பொடி, மழிசைவந்த சோதி,
    வையமெல்லாம் மறைவிளங்க வாள்வேலேந்தும்
    மங்கையர்கோன் என்றிவர்கள் மகிழ்ந்து பாடும்
    செய்ய தமிழ் மாலைகள் நாம் தெளிய வோதித்
    தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே.

    “நிரஞ்ஜநம் பரமம் ஸாம்யம் உபைதி திவ்யம்”-
    பரம வ்யோமத்தில் பரம புருஷனுக்கு நிகராக ஒரு ஜீவன் பெறும் அந்தமில் பேரின்பத்தை ‘திவ்யம்’என வர்ணிக்கிறது முண்டக உபநிஷத். அவனது வடிவுடன் தொடர்புள்ள அனைத்தும் திவ்யம் எனத்தகும்.அவனது நாமம் திவ்ய நாமம், உறைவிடம் திவ்ய தாமம், தாங்கியிருப்பது திவ்ய ஆயுதங்களை, அவன் உகந்தருளிய நிலங்கள் திவ்ய தேசங்கள், அவனுடைய அடியார்கள் திவ்ய ஸூரிகள், அவர்கள் இயற்றிய பனுவல்கள் ’திவ்ய ப்ரபந்தம்’

    மயர்வற்ற மதிநலம் வாய்க்கப் பெற்ற ஆழ்வார்கள் பரமனின் ஸ்வரூப,ரூப,குண,விபூதிகளை உள்ளபடியே இப்பிரபந்தங்களில் அனைவருக்கும் தெரியும்படி கூறியுள்ளனர். இவை அனைவரையும் உய்விக்க வல்லவை; இவற்றை ஓதி உணர்வதில் அனைவரும் தகுதி பெற்றவர்.

    மறைகளுக்கு எம்பெருமானது மிக்குயர் நிலையை, பரத்வத்தை வர்ணிப்பதில் நோக்கம்; ஆகமங்கள் வ்யூஹத்தை வர்ணிக்கின்றன; இதிஹாஸ, புராணங்கள் விபவ அவதாரங்களைப் பரக்கப் பேசுகிறன; யோக நூல்கள் உள்ளுறைபவனான அந்தர்யாமியைச் சுட்டுவன; அருளிச் செயல்களுக்கோ தாழ்வுகளுக்கே கொள்கலமாக நிற்கும் நம்போல்வாரின் கண்ணுக்கும் புலப்படும் வண்ணம் தெரியும் அர்ச்சைகளைப் போற்றுவதில் நோக்கம் -

    செய்ய பரத்துவமாய்ச் சீரார் வியூகமாய்த்
    துய்ய விபவமாய்த் தோன்றியவற்றுள்   - எய்தும் அவர்க்கு
    இன்னிலத்தில் அர்ச்சாவதாரம் எளிது என்றான்
    பன்னுதமிழ் மாறன் பயின்று.

    யோகியரான ஆழ்வார்களும் அர்ச்சைத் திருமேனிகளில் மண்டிக் கிடந்தனர்; திவ்ய தேசங்களின் பெயரைக் கூறுவதிலும்  அவர்கள் சுவை கண்டனர்.

    மறைகளை யோகதசையில் (ரிதம்பரா) உணர்ந்து உலகுக்கு உரைத்தனர் முனிவர்கள்; நாத முனிகள் அருளிச்செயலை யோக தசையில் பெற்றார். ஸாமவேத ஸாரமான திருவாய்மொழியை
    கம்பீரமான நடையில் அவர் போற்றும்விதம் மனம் கவர்வதாக உள்ளது -

    பக்தாம்ருதம் விச்வஜநாநுமோதநம்
    ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோபவாங்மயம் |
    ஸஹஸ்ர சாகோபநிஷத் ஸமாகமம்
    நமாம்யஹம் த்ராவிடவேத ஸாகரம் ||

    தேவ்



"வைஷ்ணவம்" வகையில் உள்ள கட்டுரைகள்

இந்த வகையின் கீழ் உள்ள 27 பக்கங்களில் பின்வரும் 27 பக்கங்களும் உள்ளன.

N

S

ம தொடரும்.

"https://marabuwiki.org/index.php?title=பகுப்பு:வைஷ்ணவம்&oldid=477" இருந்து மீள்விக்கப்பட்டது