மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 1மரபு விக்கி இருந்துமார்கழி திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்! கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாரா யணனே நமக்கே பறைதருவான் பாரோர் புகழப் படிந்தேலோ ரெம்பாவாய்!
அந்தக் கண்ணனின் நிறமோ கார்மேனி. கண்களோ எனில் சிவந்த வரிகளையுடைய செங்கண்கள் அவை மலர்ந்து நம்மைப் பார்க்கும்போது செந்தாமரையோ எனத் தோற்றுகிறது. முகமோ எனில் கோடி சூரியப் பிரகாசத்தை ஒத்திருக்கிறது. இத்தகைய முகத்தை உடைய கண்ணன், நாராயணன் என்ற பெயர் கொண்டவன் அவன் நமக்கு நாம் விரும்புவதைக் கொடுப்பான்; பறை தருவான் என்பது மோக்ஷம் என்பதை நேரடியாகக் குறிக்காமல் விரும்புவதைக் கொடுப்பது என்றே வரும். இங்கே நாம் என்ன விரும்பப் போகிறோம்? முக்தியைத் தானே? இந்தப் பாரெல்லாம் புகழ்ந்து போற்றும் கண்ணனைப் பாடித் துதித்தால் அவன் நமக்கு ஞானமாகிய முக்தியைக் கொடுப்பான்.
திருப்பாவை இரண்டாம் பாடல்
மேலே அவள் கூறுவது எல்லாம் விரத நியமங்கள். விரதம் இருப்பது என்பது வெறும் வயிற்றுக்கு உண்ணாமல் பட்டினி இருப்பது மட்டுமல்ல. உடல் மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் பெறவேண்டும். அதற்கு ஆண்டாள் சொல்லும் விரத நியமங்களைப் பாருங்கள்:
பாற்கடலில் பையத் துயிலுகிறானாம் பரமன்.
பாற்கடலில் அவன் என்ன தூக்கம் தூங்குகிறான்?? அது யோக நித்திரை அல்லவா?? கீழே ஆதிசேஷன் எதுக்கு? குண்டலினி எப்படி உறங்குகிறதோ அதைச் சுட்டத் தானே. ஐந்து இந்திரியங்களையும் ஐந்து முகங்களாய்க் கொண்ட ஆதிசேஷன் மேல் ஆண்டவன் யோகநித்திரை கொண்டிருக்கிறான். ஆக நம் மனம், வாக்கு, காயம் அனைத்துக்கும் அதிபதியான அவன் பைய=மெல்லத் தான் துயிலுகிறானாம். அடியாருக்கெல்லாம் ஓடோடி வந்து அருள் செய்யும் பரமன் மெல்லத் தானே தூங்க முடியும்??
பெண்களாகிய நாம் ஆடை, ஆபரணங்களால் அலங்கரித்துக்கொள்வதில் நாட்டம் உடையவர்கள். ஆனால் இப்போது கண்ணனுக்காக அதையும் நாம் தியாகம் செய்யவேண்டும். காலை சீக்கிரமே எழுந்து குளித்து, கண் மை இட்டு கண்களில் எழுதாமல், மலர்களால் நம்மை அலங்கரித்துக்கொள்ளாமல், நெய், பால் சேர்க்காமல் உணவு அருந்தி அந்தப்பரமனின் திருவடி தரிசனத்தை நினைத்து அவன் புகழ் பாடிக்கொண்டிருப்போம். இப்படி இருக்கும் நாட்களில் நாம் செய்யாதன எதுவும் செய்யோம். அதாவது நற்செயல்களையே செய்யவேண்டும், நல் எண்ணங்களையே சிந்திக்கவேண்டும். நல் வார்த்தைகளையே கூறவேண்டும். தீங்கு நினையாமல் இருக்கவேண்டும். நல் சொற்களைப் பேசவேண்டும், தீய சொற்களைப் பேசக் கூடாது. இதைத் தான் ஆண்டாள் தீக்குறளைச் சென்றோதோம் என்கிறாள். உடல் மட்டும் சுத்தமாய் இருப்பது விரதம் இல்லை, உடலோடு மனமும் சேர்ந்து சுத்தமாக இருக்கவேண்டும். அர்ப்பணிப்பு உணர்வோடு ஆண்டவனிடம் நம்மையே நாம் அர்ப்பணித்தால் அவன் நமக்கு மோக்ஷத்தைக் கொடுப்பான்.
அது மட்டும் போதாது. ஐயமும், பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி என்று மேலும் சொல்கிறாள். ஐயம் என்பது ரிஷிகள், துறவிகள் , பிரமசரிய விரதம் இருக்கும் பிரமசாரிகள் போன்றோருக்குப் போடும் பிக்ஷை என்று கூறலாம். ஐயம் இங்கே சந்தேகம் என்ற பொருளில் வரவில்லை. "ஐயமிட்டு உண்" என்பதும் உயர்ந்ததொரு கருத்தைத் தான் கூறுகிறது. துறவிகள், ரிஷிகள், முனிவர்கள், பிரமசாரிகள் போன்றோருக்கு நாம் தினமும் பிக்ஷை அளிக்கவேண்டும். அவர்களைத் தேடிப் போயாவது அளித்தல் நம் கடமை என்பார்கள். பிரமசாரிகள் பிக்ஷை எடுத்தே உண்ணவேண்டும் என்பது ஒரு காலகட்டத்தில் கட்டாயமாய் இருந்தது. ஒரு முறை பிக்ஷை கேட்ட வீட்டில் மறுமுறை போயும் கேட்கக் கூடாது. அதே போல் ஒரு வீட்டில் கேட்டுக்கொண்டே நிற்கக் கூடாது என அதற்கும் பல நியமங்கள் உண்டு. அத்தகையதொரு உயர்ந்த தருமத்தை நாம் தேடிப் போய்ச் செய்யவேண்டும் என்கிறாள் ஆண்டாள். பொதுவாய் பிக்ஷையையே கேவலமாய் எண்ணும் இந்தக் காலத்தில் இதென்ன ஐயமும், பிச்சையும்னு இரண்டு தரமும் ஒண்ணையே சொல்லி இருக்காளேனு தோணும்.
மேற்கண்டவர்கள் மட்டுமின்றி ஏழைகள் இருப்பார்களே அவங்களுக்கு உணவு அளிப்பதைத் தான் இரண்டாம் முறை சொல்லி இருக்கும் பிச்சை என்ற வார்த்தை குறிக்கும். ஏழைகள், முதியவர்கள் என்று சாப்பிட உணவில்லாமல் பிச்சை கேட்டு வரும் நபர்களுக்கும் நம்மிடம் இருப்பதைக் கொடுக்கவேண்டும் என்கிறாள் ஆண்டாள். இவை எல்லாத்தையும் கொடுத்துவிட்டால் நாம் உய்யுமாறு கண்ணன் அருள் நமக்குக் கிடைக்கும். நாம் அனைவரும் உவப்புடன் இருப்போம் பெண்களே. --Geetha Sambasivam 11:57, 5 ஏப்ரல் 2011 (UTC) |

