வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

ஸ்ரீ அரவிந்தர் - இரக்கமின்றி ஆராய்ந்து பார்!

From மரபு விக்கி

Jump to: navigation, search

 

இரக்கமின்றி ஆராய்ந்து பார்!

                                                              
SriAurobindo.jpg
                   
  • முதலில் நீ யார் என்பதை உன்னுள் உணர்ந்து கொள். பின்னர் செயலாற்று. காலமும், உயிரும், உலகும் நல்ல செயல் புரிவதற்குரிய களங்களாக நமக்களிக்கப்பட்டுள்ளன. மனத்திட்பமும், சிந்தனையும், உழைப்பும் நம் மிகச் சக்தி வாய்ந்த சாதனங்களாகும்.


  • இறையின்பம் காலவரையறைக்கு உட்பட்டதன்று. அது ஆதி அந்தமற்றது. ஓர் உருவிலிருந்து வெளிவருவதானது மற்றுமோர் உருவத்தில் புகுதற்கேயாகும்.


உன்னை நீயே ஆய்வு செய்!


 செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.


  ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.


எண்ணம் தூய்மை ஆகட்டும்


  • ஆன்மிகப் பொருளுடைய கனவு ஒன்றைக் கண்டால் அது அனுபவம். அதன் பொருளை உணர்ந்தால் ஞானம்.
  • ஆண்டவனின் அருளாட்சியில் தீமை
    என்பது இல்லை. நலத்தையோ அல்லது நலத்தை உண்டாகுகின்ற முயற்சியையோ நாம் செயகிறோம்.
  • வாழ்க்கை நடத்த கருத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். அதனுடைய தளைகளைக் கொண்டு உங்களது ஆன்மாவைச் சிறைப்படுத்தி விடக்கூடாது.

மண்ணுலகில் விண்ணுலகம்


வெறுப்பு இருபுறமும் வெட்டுகின்ற வாளினைப் போன்றது. உன் எதிரியை தாக்கத் தவறினால் சீற்றத்துடன் திரும்பி வந்து தன்னை அனுப்பியவனையே அழிக்கும் தன்மையுடையது. சூனியக்காரர்களின் மந்திர சக்தியைப் போன்றது. அதனால், வெறுப்பினை மறந்து விருப்பமாகிய அன்பினை வளர்த்துக் கொள்ளுங்கள். பகைவனை தாக்கும் போது அவனுள்ளிருக்கும் இறைவன் மீது அன்பு செலுத்துங்கள். அப்போது உங்கள் இருவருக்கும் இடையே நரகம் கிடையாது.மன்னிக்க முடியாத குற்றங்களாக இருப்பவை கொடுமையும், அற்பத்தனமும் தான்.

இவை இரண்டும் எங்கும் பரவி குற்றங்களை உண்டுபண்ணுகின்றன. பிறரை வெறுக்கும் குணமுடையவர்கள், முதலில் தங்களிடமுள்ள இத்தீய குணங்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்ய வேண்டும். பெருந்தன்மையையும், தாராளமனப் பான்மையையும் வளர்த்துக் கொண்டால் மனிதன் விண்ணுலகத்தையே மண்ணுலகிற்கு கொண்டுவர இயலும்.* வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தோல்வியடைந்தேன் என்று யாரும் குறைபட்டுக்கொள்ளத் தேவையில்லை. வெற்றிக்கான பாதையில் தான் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றி சிலருக்கு கொஞ்சம் தாமதமாக கிடைக்கிறது, சிலர் வெற்றியை நோக்கி சுற்றிவளைத்து செல்வதால் தாமதமாகிறது.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:33, 24 ஏப்ரல் 2011 (UTC)

நன்றி - தின மலர்.

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 24 August 2011, at 02:56. This page has been accessed 3,067 times.