ஸ்ரீ அரவிந்தர் - இரக்கமின்றி ஆராய்ந்து பார்!மரபு விக்கி இருந்து
இரக்கமின்றி ஆராய்ந்து பார்!
உன்னை நீயே ஆய்வு செய்!
செய்யும் செயல்களை எல்லாம் கடவுளுக்கு செய்யும் செயல்களாகக் கருதி செயல்படுபவர்களின் மனம் கோயில். அங்கு எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.
ஆற்றலைப் பெற வேண்டுமானால், மனதில் எப்போதும் ஆற்றலைப் பற்றிய எண்ணமே இருக்க வேண்டும். எண்ணத்தாலும், சொல்லாலும், செயலாலும் ஆற்றல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.
எண்ணம் தூய்மை ஆகட்டும்
மண்ணுலகில் விண்ணுலகம்
இவை இரண்டும் எங்கும் பரவி குற்றங்களை உண்டுபண்ணுகின்றன. பிறரை வெறுக்கும் குணமுடையவர்கள், முதலில் தங்களிடமுள்ள இத்தீய குணங்களை ஒழித்துக்கட்ட முயற்சி செய்ய வேண்டும். பெருந்தன்மையையும், தாராளமனப் பான்மையையும் வளர்த்துக் கொண்டால் மனிதன் விண்ணுலகத்தையே மண்ணுலகிற்கு கொண்டுவர இயலும்.* வெற்றி தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் தோல்வியடைந்தேன் என்று யாரும் குறைபட்டுக்கொள்ளத் தேவையில்லை. வெற்றிக்கான பாதையில் தான் நாம் அனைவரும் சென்று கொண்டிருக்கிறோம். வெற்றி சிலருக்கு கொஞ்சம் தாமதமாக கிடைக்கிறது, சிலர் வெற்றியை நோக்கி சுற்றிவளைத்து செல்வதால் தாமதமாகிறது.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:33, 24 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர். |
