வெறும் அரிசி அடை முருங்கைக்கீரையுடன்!மரபு விக்கி இருந்துவெறும் அரிசி அடை(வித் முருங்கைக் கீரை)
இதற்குத் தேவையான பொருட்கள்:
புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது கால் கிலோ, ஒரு மூடித் தேங்காய்த் துருவல், உப்பு. ஒரு கட்டு முருங்கைக் கீரை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கிக் கொள்ளவும். பெருங்காயம் தேவையானால், கருகப்பிலை, கொ.மல்லி தேவையானால். எண்ணெய் அடை வார்க்க. தேங்காய் போட்டு அரைப்பதால் அதிக எண்ணெய் தேவைப்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் நன்றாய் இருக்கும். பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் ஏதேனும் அவரவர் வழக்கம் போல்
புழுங்கலரிசியை நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்து, நறுக்கி வைத்த முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலக்கி அரைமணி நேரம் வைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் மாவை லேசாக நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு அடை போல் கனமாக வார்க்கவும். தொட்டுக்கொள்ள ஏதேனும் சாம்பார் தான் நல்ல காம்பினேஷன் என்றாலும் தக்காளி, வெங்காயச் சட்னியும் நன்றாக இருக்கும்.
--Geetha Sambasivam 06:39, 7 ஜனவரி 2013 (UTC) |