வெறும் அரிசி அடை முருங்கைக்கீரையுடன்!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 வெறும் அரிசி அடை(வித் முருங்கைக் கீரை)


இது தென் மாவட்டங்களில் செய்யப் படும் ஒன்று. அதிகம் மதுரை தாண்டிப் பார்க்க முடியாது.


இதற்குத் தேவையான பொருட்கள்:


புழுங்கலரிசி ஒரு கிண்ணம் அல்லது கால் கிலோ, ஒரு மூடித் தேங்காய்த் துருவல், உப்பு. ஒரு கட்டு முருங்கைக் கீரை நன்கு ஆய்ந்து அலசி நறுக்கிக் கொள்ளவும். பெருங்காயம் தேவையானால், கருகப்பிலை, கொ.மல்லி தேவையானால். எண்ணெய் அடை வார்க்க. தேங்காய் போட்டு அரைப்பதால் அதிக எண்ணெய் தேவைப்படாது. நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் நன்றாய் இருக்கும். பிடிக்காதவர்கள் சமையல் எண்ணெய் ஏதேனும் அவரவர் வழக்கம் போல்


புழுங்கலரிசியை நான்கு மணி நேரமாவது ஊற வைக்கவும். தேங்காய்த் துருவல் சேர்த்து அரைத்துக் கொண்டு உப்புச் சேர்த்து, நறுக்கி வைத்த முருங்கைக் கீரையையும் சேர்த்துக் கொள்ளவும். நன்கு கலக்கி அரைமணி நேரம் வைக்கவும். பின்னர் தோசைக்கல்லில் மாவை லேசாக நீர் விட்டுக் கரைத்துக் கொண்டு அடை போல் கனமாக வார்க்கவும். தொட்டுக்கொள்ள ஏதேனும் சாம்பார் தான் நல்ல காம்பினேஷன் என்றாலும் தக்காளி, வெங்காயச் சட்னியும் நன்றாக இருக்கும்.



இதையே காரம் வேண்டும் என்பவர்கள் கொஞ்சம் பச்சை மிளகாய், இஞ்சி, மிளகு சேர்த்து அரைத்துக் கொண்டும் முருங்கைக் கீரை போட்டுப் பண்ணலாம்.


--Geetha Sambasivam 06:39, 7 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 ஜனவரி 2013, 06:39 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 902 முறைகள் அணுகப்பட்டது.