வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

லிவர் சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்


ஈரல்- 50 கிராம்

தக்காளி – 2

பூண்டு- 4 பல்

மிளகு- 1/4 ஸ்பூன்

வெங்காயம்- 1/4

மஞ்சள்தூள்-சிட்டிகை

தனியா- 1/4 டீஸ்பூன்

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை


ஈரலைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளி பூண்டு மிளகு வெங்காயம் நான்கையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் கொட்டி வதக்குங்கள்.

சிறிது நேரம் வதக்கியதும் வெட்டி வைத்திருக்கும் ஈரல், மஞ்சள்தூள், தனியாத் தூள்

உப்பு சேர்த்து வதக்குங்கள்.

ஓரளவு வெந்தவுடன் சூப்பிற்குத் தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

கொத்தமல்லித் தழை போட்டுச் சூடாகப் பரிமாறவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:04, 27 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 27 November 2011, at 10:04. This page has been accessed 1,733 times.