லிவர் சூப்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 வசந்தா குகேசன்


தேவையான பொருட்கள்


ஈரல்- 50 கிராம்

தக்காளி – 2

பூண்டு- 4 பல்

மிளகு- 1/4 ஸ்பூன்

வெங்காயம்- 1/4

மஞ்சள்தூள்-சிட்டிகை

தனியா- 1/4 டீஸ்பூன்

கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – தேவையான அளவு


செய்முறை


ஈரலைச் சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

தக்காளி பூண்டு மிளகு வெங்காயம் நான்கையும் மிக்ஸியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

அரைத்து வைத்திருக்கும் கலவையை இதில் கொட்டி வதக்குங்கள்.

சிறிது நேரம் வதக்கியதும் வெட்டி வைத்திருக்கும் ஈரல், மஞ்சள்தூள், தனியாத் தூள்

உப்பு சேர்த்து வதக்குங்கள்.

ஓரளவு வெந்தவுடன் சூப்பிற்குத் தேவையான தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும்.

கொத்தமல்லித் தழை போட்டுச் சூடாகப் பரிமாறவும்.









--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:04, 27 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=லிவர்_சூப்&oldid=8899" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2011, 10:04 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,729 முறைகள் அணுகப்பட்டது.