வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

மிளகு குழம்பு

From மரபு விக்கி

Jump to: navigation, search

சாப்பிடும் முன் மிளகின் நன்மையைப் பற்றியும் சற்று அறிவோமா!!

http://en.wikipedia.org/wiki/Black_pepper
http://www.ayurvedictalk.com/health-benefits-of-black-pepper-piper-nigrum/477/
http://www.figuretoning.com/healthyfood/blackpepper.php

ஆயுர்வேதத்தில் இருந்து இன்றைய விஞ்ஞானிகள் வரை கொண்டாடுகிற கரு மிளகு இருக்கிறதே - அதன் வாஸனை முகர்ந்தாலே சில பேருக்கு, பசி பறந்து வந்து விடும். இன்னும் சில பேரோ பெயரைச் சொன்னாலே ஒரு காத தூரம் பறந்து விடுவர். எனக்கு கூட முன்பெல்லாம் மிளகு ரசம் என்றால் வாழ்க்கையின் ரசமே போனது போலிருக்கும் - இந்த குழம்பை சுவைக்கும் வரை.

இது மிகப் பழமையான தமிழ் உணவு. நீங்கள் முன்பே பலமுறை சுவைத்திருக்கலாம். இதை நான் கற்றுக்கொண்டது, லக்ஷ்மியம்மாள் என்ற முன் தலைமுறை சமையல் எழுத்தாளரிடமிருந்து (அவர் புத்தகத்தைப் பார்த்துத்தான்) - கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.

இதற்கு சரியான பக்கவாத்யம், சேப்பங்கிழங்கு கறி தான். அதனால், அதுவும் இங்கே...

மிளகு குழம்பு

  1. 2 spoon நல்லெண்ணெய் விட்டு ஒரு துண்டு கட்டி பெருங்காயம், 1 spoon சீரகம், 2 spoon மிளகு, 1 spoon கடலைப்பருப்பு, 1 spoon உளுத்தம்பருப்பு, 1 spoon தனியா, 6-7 சிவப்பு மிளகாய், 3 spoon பச்சரிசி ஆகியவற்றை லேசான சிவப்பாக வறுத்துக்கொள்ளவும்.
  2. இதனை ஆற வைத்துவிட்டு, 2 கைப்பிடி நல்ல கறிவேப்பிலையை நன்றாக அலம்பி வறுக்கவும். நன்றாக வாசனை வரும் போது மற்ற பொருள்களோடு சேர்த்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.
  3. இரு எலுமிச்சைபழ அளவு புளியை வெந்நீரில் ஊற வைத்து சாறெடுத்துக் கொள்ளவும்.
  4. மேலே சொன்ன பொடியை இந்த சாற்றோடு கலந்து வைத்துக்கொள்ளவும் - கட்டி இருக்கக்கூடாது.
  5. ஒரு கனத்த கடாயில், 2 கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து விட்டு, மேற்சொன்ன கலவையை விட்டு, தேவையான உப்பையும் போட்டு, நிறைய தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். 20 நிமிடங்களாவது ஆக வேண்டும். இப்போது நன்றாக வாசனை வரும் - எல்லாம் சரியாக இருப்பின் :)
  6. நன்றாக கெட்டியானதும், 2-3 spoonகள் வெல்லத்தைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
  7. எண்ணை வெளியேறினால், குழம்பு தயார் என்று அர்த்தம்.
  8. இக்குழம்பை ஆறிய பின் ஈரமில்லாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தினால், ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது. ஊற ஊற சுவை கூடும்.
  9. இதை சூடான சாதத்தோடு (வேண்டுமானால் நல்லெண்ணெய் விட்டுக்) கலந்து உண்ணலாம். குழந்தைகளானால், நெய்யோடு பரிமாறுங்கள். காரமாகவே இருக்கும் என்பதால் கவனத்துடன் இருக்கவும்.

 

-ஸ்வர்ணா  lakshmi_ssri@yahoo.com 

Contributors

Ksubashini

This page was last modified on 26 January 2010, at 21:37. This page has been accessed 4,199 times.