சாப்பிடும் முன் மிளகின் நன்மையைப் பற்றியும் சற்று அறிவோமா!!
http://en.wikipedia.org/wiki/Black_pepper
http://www.ayurvedictalk.com/health-benefits-of-black-pepper-piper-nigrum/477/
http://www.figuretoning.com/healthyfood/blackpepper.php
ஆயுர்வேதத்தில் இருந்து இன்றைய விஞ்ஞானிகள் வரை கொண்டாடுகிற கரு மிளகு இருக்கிறதே - அதன் வாஸனை முகர்ந்தாலே சில பேருக்கு, பசி பறந்து வந்து விடும். இன்னும் சில பேரோ பெயரைச் சொன்னாலே ஒரு காத தூரம் பறந்து விடுவர். எனக்கு கூட முன்பெல்லாம் மிளகு ரசம் என்றால் வாழ்க்கையின் ரசமே போனது போலிருக்கும் - இந்த குழம்பை சுவைக்கும் வரை.
இது மிகப் பழமையான தமிழ் உணவு. நீங்கள் முன்பே பலமுறை சுவைத்திருக்கலாம். இதை நான் கற்றுக்கொண்டது, லக்ஷ்மியம்மாள் என்ற முன் தலைமுறை சமையல் எழுத்தாளரிடமிருந்து (அவர் புத்தகத்தைப் பார்த்துத்தான்) - கொஞ்சம் மாற்றியிருக்கிறேன்.
இதற்கு சரியான பக்கவாத்யம், சேப்பங்கிழங்கு கறி தான். அதனால், அதுவும் இங்கே...
மிளகு குழம்பு
- 2 spoon நல்லெண்ணெய் விட்டு ஒரு துண்டு கட்டி பெருங்காயம், 1 spoon சீரகம், 2 spoon மிளகு, 1 spoon கடலைப்பருப்பு, 1 spoon உளுத்தம்பருப்பு, 1 spoon தனியா, 6-7 சிவப்பு மிளகாய், 3 spoon பச்சரிசி ஆகியவற்றை லேசான சிவப்பாக வறுத்துக்கொள்ளவும்.
- இதனை ஆற வைத்துவிட்டு, 2 கைப்பிடி நல்ல கறிவேப்பிலையை நன்றாக அலம்பி வறுக்கவும். நன்றாக வாசனை வரும் போது மற்ற பொருள்களோடு சேர்த்து ஆற வைத்து பொடித்துக்கொள்ளவும்.
- இரு எலுமிச்சைபழ அளவு புளியை வெந்நீரில் ஊற வைத்து சாறெடுத்துக் கொள்ளவும்.
- மேலே சொன்ன பொடியை இந்த சாற்றோடு கலந்து வைத்துக்கொள்ளவும் - கட்டி இருக்கக்கூடாது.
- ஒரு கனத்த கடாயில், 2 கரண்டி நல்லெண்ணெய் விட்டு, சூடானதும் கடுகு தாளித்து விட்டு, மேற்சொன்ன கலவையை விட்டு, தேவையான உப்பையும் போட்டு, நிறைய தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். 20 நிமிடங்களாவது ஆக வேண்டும். இப்போது நன்றாக வாசனை வரும் - எல்லாம் சரியாக இருப்பின் :)
- நன்றாக கெட்டியானதும், 2-3 spoonகள் வெல்லத்தைச் சேர்க்கவும். 5 நிமிடங்கள் கொதிக்க விடவும், மிகவும் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கலாம். இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும்.
- எண்ணை வெளியேறினால், குழம்பு தயார் என்று அர்த்தம்.
- இக்குழம்பை ஆறிய பின் ஈரமில்லாத பாத்திரத்தில் பத்திரப்படுத்தினால், ஒரு வாரம் ஆனாலும் கெட்டுப்போகாது. ஊற ஊற சுவை கூடும்.
- இதை சூடான சாதத்தோடு (வேண்டுமானால் நல்லெண்ணெய் விட்டுக்) கலந்து உண்ணலாம். குழந்தைகளானால், நெய்யோடு பரிமாறுங்கள். காரமாகவே இருக்கும் என்பதால் கவனத்துடன் இருக்கவும்.
-ஸ்வர்ணா lakshmi_ssri@yahoo.com