பூந்தி குழம்பு

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


பெரிய வெங்காயம்-2

தக்காளி -4

பச்சை மிளகாய் -2

இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன்

மல்லி தூள்-3 டீஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன்

பிரியானி இலை ஏலக்காய் -2

சோம்பு -1 ஸ்பூன்

பூண்டு -5 பல்

தேங்காய் – அரைமூடி

பட்டை கிராம்பு -3

பூந்தி -200 கிராம்


செய்முறை


வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளித்து, வெங்காயம் அரிந்து போட்டுப், பச்சை மிளகாய் சேர்த்து வணக்கவும்.


பின் தக்காளி பொடியாக நறுக்கிப் போட்டு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வணக்கி மல்லித்தூள் மிளகாய்த்தூள் போட்டு வணக்கி 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக 5 நிமிடம் கொதிக்க விட்டு அரைத்த தேங்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் பூந்தியைச் சேர்க்கவும்.


இரண்டு நிமிடம் கழித்து இறக்கி மல்லித்தழை கருவேப்பிலை போடவும்.







--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:08, 27 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை மின்னிதழ்

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பூந்தி_குழம்பு&oldid=8900" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2011, 10:08 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,495 முறைகள் அணுகப்பட்டது.