பூந்தி குழம்புமரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
பெரிய வெங்காயம்-2 தக்காளி -4 பச்சை மிளகாய் -2 இஞ்சி பூண்டு விழுது- 2 டீஸ்பூன் மல்லி தூள்-3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்- 1/2 டீஸ்பூன் பிரியானி இலை ஏலக்காய் -2 சோம்பு -1 ஸ்பூன் பூண்டு -5 பல் தேங்காய் – அரைமூடி பட்டை கிராம்பு -3 பூந்தி -200 கிராம்
செய்முறை
வாணலியில் எண்ணெய்விட்டு பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய், சோம்பு போட்டுத் தாளித்து, வெங்காயம் அரிந்து போட்டுப், பச்சை மிளகாய் சேர்த்து வணக்கவும்.
பின் தக்காளி பொடியாக நறுக்கிப் போட்டு இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வணக்கி மல்லித்தூள் மிளகாய்த்தூள் போட்டு வணக்கி 2 டம்ளர் தண்ணீர் விட்டு நன்றாக 5 நிமிடம் கொதிக்க விட்டு அரைத்த தேங்காய் சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்க விட்டு பின் பூந்தியைச் சேர்க்கவும்.
இரண்டு நிமிடம் கழித்து இறக்கி மல்லித்தழை கருவேப்பிலை போடவும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 10:08, 27 நவம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை மின்னிதழ் |