வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

டயட் சூப்

From மரபு விக்கி

Jump to: navigation, search

 உமா சண்முகம்


தேவையான பொருட்கள்


வாழைத்தண்டு – 1

பார்லி -50 கிராம்

தக்காளி -1(அரிந்தது)

இஞ்சி பூண்டு விழுது -1டேபிள் ஸ்பூன்

காய்ந்த மிளகாய் -2

அரிசி-1 கைப்பிடி

பருப்பு-சிறிதளவு

நெய்-1/2 ஸ்பூன்

மிளகுத்தூள் உப்பு-தேவையான அளவு


செய்முறை


வாழைத் தண்டை நார் எடுத்து சிறிதாக வெட்டிக் கொள்ளுங்கள். வெட்டிய வாழைத்தண்டுடன் அரிசி, பருப்பு, பார்லி தேவையான தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளுங்கள்.

வெந்ததும் தண்ணீரை வடித்துக் கொள்ளுங்கள்.

நெய்யில் காய்ந்த மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கிக் கொள்ளுங்கள்.

இதில் வடித்து வைத்திருக்கும் நீரை விட்டு நன்றாகக் கொதிக்க விடுங்கள். கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி தேவையான உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் பரிமாறுங்கள்.




--பவள சங்கரி திருநாவுக்கரசு. 12:05, 3 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 3 November 2011, at 12:05. This page has been accessed 1,806 times.