வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

கீரை மிளகூட்டல்

From மரபு விக்கி

Jump to: navigation, search

எழுதியவர்: ஸ்வர்ணா



கீரை மிளகூட்டல்  - நான்கு பேர்களுக்கானது

  • நன்றாக அலம்பி பொடிப்பொடியாக நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - 3 கப்
  • மிளகு - 1/2 தேக்கரண்டி (காரமாக வேண்டும் என்றால் இன்னும் 1/2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம்)
  • உளுத்தம்பருப்பு - 2 1/2 தேக்கரண்டி
  • பாசிப்பருப்பு - 1/2 கப்
  • காய்ந்த மிளகாய் - 2
  • தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
  • உப்பு - தேவையான அளவு (அதிக உப்பு இதற்கு தேவையில்லை) (கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி)
  • எண்ணெய் - 2 தேக்கரண்டி


1. கீரையை இலுப்பச்சட்டியிலோ (கடாய்) microwave- லோ நன்றாக வதக்கி வேகவைத்துக்கொள்ளவும். கொஞ்சம் ஆற வைத்து மசித்துக்கொள்ளவும்.
2. பாசிப்பருப்பை அலம்பி cooker-ல் வேகவைத்துக்கொள்ளவும்.
3. இலுப்பச்சட்டியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும் (வாசனை வரும் வரை). வறுத்ததை ஆற வைத்து, தேங்காயோடு 2 தேக்கரண்டி பச்சரிசி சேர்த்து மிக்ஸியில் 1/2 கப் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
4. இலுப்பச்சட்டியில் மிகுந்த எண்ணெயை விட்டு, கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு வதக்கி, பின், கீரை, அரைத்த விழுது, வேகவைத்த பாசிப்பருப்பு எல்லாவற்றையும் போட்டு கொதிக்கவைக்கவும்.
5. இதை கூட்டாக பயன்படுத்தலாம்.

Contributors

Ksubashini

This page was last modified on 31 January 2010, at 18:19. This page has been accessed 2,744 times.