எழுதியவர்: ஸ்வர்ணா
கீரை மிளகூட்டல் - நான்கு பேர்களுக்கானது
- நன்றாக அலம்பி பொடிப்பொடியாக நறுக்கிய பாலக் (பசலைக்கீரை) - 3 கப்
- மிளகு - 1/2 தேக்கரண்டி (காரமாக வேண்டும் என்றால் இன்னும் 1/2 தேக்கரண்டி சேர்த்துக்கொள்ளலாம்)
- உளுத்தம்பருப்பு - 2 1/2 தேக்கரண்டி
- பாசிப்பருப்பு - 1/2 கப்
- காய்ந்த மிளகாய் - 2
- தேங்காய் துருவல் - 4 தேக்கரண்டி
- உப்பு - தேவையான அளவு (அதிக உப்பு இதற்கு தேவையில்லை) (கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி)
- எண்ணெய் - 2 தேக்கரண்டி
1. கீரையை இலுப்பச்சட்டியிலோ (கடாய்) microwave- லோ நன்றாக வதக்கி வேகவைத்துக்கொள்ளவும். கொஞ்சம் ஆற வைத்து மசித்துக்கொள்ளவும்.
2. பாசிப்பருப்பை அலம்பி cooker-ல் வேகவைத்துக்கொள்ளவும்.
3. இலுப்பச்சட்டியில் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு, உளுத்தம்பருப்பு, மிளகாய், மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்துக்கொள்ளவும் (வாசனை வரும் வரை). வறுத்ததை ஆற வைத்து, தேங்காயோடு 2 தேக்கரண்டி பச்சரிசி சேர்த்து மிக்ஸியில் 1/2 கப் தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவும்.
4. இலுப்பச்சட்டியில் மிகுந்த எண்ணெயை விட்டு, கடுகு, கறிவேப்பிலை, மஞ்சள் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு வதக்கி, பின், கீரை, அரைத்த விழுது, வேகவைத்த பாசிப்பருப்பு எல்லாவற்றையும் போட்டு கொதிக்கவைக்கவும்.
5. இதை கூட்டாக பயன்படுத்தலாம்.