இறைவனைக் காண்போம்! நீர் வாழ்வன 1From மரபு விக்கிகணவாயும் கடல் நுரையும்
Cuttle fish-2.jpg
விட அதிகம் என்று சொல்வார்கள்.
Octopus2.jpg பெரிய கணவாய் – ஆக்டோபஸ்
‘ squid.jpg ரத்தினங்கள் பதித்த’ ஊசிக் கணவாய் கணவாய் என்பது ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் (cuttlefish) என்றழைக்கப் படுவது.
‘டபிள்யூ’ (W) வடிவிலான கரு விழிகள் கணவாய்கள் முதுகெலும்பற்ற பிராணிகள்.
இதற்கு முதுகெலும்பு போல அமைந்திருப்பது முற்றிலும் சுண்ணாம்புச் சத்தாலான, நுண்ணிய துவாரங்கள் பல கொண்ட, வெண்மை நிறமான ஒரு உறுப்புதான். இதை ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் போன் என்றும் தமிழில் கடல் நுரை என்றும் சொல்லுவார்கள்.
கடல் நுரை கடல் நுரை நுண்ணிய துவாரங்கள் கொண்ட சுண்ணாம்பால் ஆனது. இந்தத் துவாரங்களில் காற்று இருப்பதால் அது கணவாயை அதற்குத் தேவையான ஆழத்தில் மிதந்திட உதவுகிறது.
கடல் நுரையய் மிக நுண்ணிய துகள்களாக பொடி செய்திட முடியும். ஆனால் இந்தத் துகள்கள் மாக்கல் மாவு போல (soap stone powder called talcum powder) வழு வழுப்பாக இருக்காது. சொர சொரப்பாக இருக்கும். அதனால் இது உலோகப் பாலிஷ் செய்திடும் மெழுகுகளிலும். பற்பொடி, பற்பசைகளிலும் உபயோகிக்கப் படுகிறது.
பள்ளிகளில் சிலேட்டுப் பலகைகள் உபயோகப் பட்டு வந்த நாட்களில் அவற்றை சுத்தம் செய்திட, முக்கியமாக பரீட்சைக்கு முன் தினம், சிறிது தண்ணீர் தெளித்துக் கடல் நுரையால் தேய்ப்பதுண்டு.
கடல் நுரையில் மிக நுணுக்கமான வடிவங்களைச் செதுக்கிட முடியும். கடல் நுரை தானாக எளிதில் பொடியாகக் கூடியதும் அல்ல. அது கடினமானது. மிக அதிகமான உஷ்ணத்தைத் தாங்கக் கூடியது. ஆகவே தங்க நகை செய்வோர் கடல் நுரையை வார்ப்பு அச்சாக (mould) உபயோகிப்பார்கள்.
கடற்கரயில் துணி விரிப்புகளின் மீது விற்பனைக்காக வைக்கப் பட்டிருக்கும் சங்கு, சோழி போன்றவற்றோடு கடல் நுரையையும் காணலாம்.
இயற்கையில் நாம் காண எத்தனை வினோதங்களை அளித்திடுறான் இறைவன்!
நடராஜன் கல்பட்டு
--Geetha Sambasivam 03:24, 28 ஜூலை 2011 (UTC) |




