இறைவனைக் காண்போம்! நீர் வாழ்வன 1

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கணவாயும் கடல் நுரையும்


கணவாய் என்றவுடன் நம் அனைவர் நினைவுக்கும் வருவது தமிழ் நாட்டில் இருந்து கேரளா செல்லும் மலை வழிப் பாதையான பாலக்காட்டுக் கணவாயும், பாகிஸ்தானில் இருந்து ஆஃப்கனிஸ்தான் சென்றிட உள்ள மலைப் பாதையான கைபர் கணவாயுந்தான்.


ஆனால் ஒரு மீனவரிடம், அல்லது கடல் வாழ் உயிரினங்கள் காட்சியகத்திலோ, “கணவாய் பார்த்திட வேண்டும்” என்று கேட்டுப் பாருங்கள். உடனே அவர் உங்களுக்குக் காட்டிடுவார் ஒரு கடல் வாழ் உயிரினத்தை அது தான் ஆங்கிலத்தில் ‘கட்டில் ஃபிஷ்’ (cuttlefish) என்றழைக்கப் படும் கணவாய்.


Cuttle fish-2.jpg
Cuttle fish-2.jpg


கணவாய்


கணவாய்கள் என்னும் கடல் வாழ் பிராணிகள் தலையிலே கால் முளைத்த, ‘மண்டை பெருத்த மகாதேவன்கள் (cephalapodes meaning legs on heads) இவற்றின் மூளையின் அளவிற்கும் உடல் அளவிற்குமான விகிதாசாரம் மற்ற எல்லா உயிரினங்களையும்

விட அதிகம் என்று சொல்வார்கள்.


கணவாய்களில் மூன்று வகைகள் உண்டு. பெரிய கணவாய், கணவாய், ஊசிக் கணவாய் என்பவை அவை.


கணவாய்களை கடல் வாழ் பச்சோந்தி என்று சொல்வதும் உண்டு. காரணம் இவை எதிரிகளிடம் இருந்து தப்பிக்க தங்கள் உடல் மீதுள்ள கோலங்களையும் வண்ணங்களையும் சுற்றுப் புறத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் சக்தி படைத்தவை.


கணவாய்களை எதிரிகள் (டால்ஃபின், சுறா மீன் போன்றவை) துரத்தும் போது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவை நிறம் கொண்ட திரவத்தினை கடலில் பாய்ச்சும். பெரிய கணவாய் கருப்பு நிற திரவத்தினையும், ஊசிக் கணவாய் நீல நிற திரவத்தினையும். கணவாய் பழுப்பு நிற திரவத்தினையும்,வெளி விடும்


ஆறு உலகக் கால்பந்து ஆட்டதின் முடிவுகள் பற்றியும் சரியான ஆரூடம் சொல்லி உலகப் புகழ் பெற்றதே ‘பால் என்ற “ஆக்டொபஸ்” அது ‘பெரிய கணவாய்’. (அபார மூளை தான்!)


Octopus2.jpg
Octopus2.jpg

பெரிய கணவாய் – ஆக்டோபஸ்


ஊசிக் கணவாய் என்பது ஆங்கிலத்தில் “ஸ்க்விட்” (squid) என்றழைக்கப் படும் கடல் வாழ் பிராணி.

squid.jpg

ரத்தினங்கள் பதித்த’ ஊசிக் கணவாய்

Squid.jpg

கணவாய் என்பது ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் (cuttlefish) என்றழைக்கப் படுவது.


கணவாயின் கண்ணில் உள்ள கருவிழி சற்று வினோதமானது. பல உயிரினங்களின் கண்ணில் கரு விழிகள் வட்ட வடிவில் இருக்கும். ஆனால் கணவாயின் கரு விழி டபிள்யூ (W) என்னும் ஆங்கில எழுத்தின் வடிவில் இருக்கும்.


cuttle fish iris.jpg

Cuttle fish iris.jpg

‘டபிள்யூ’ (W) வடிவிலான கரு விழிகள்

கணவாய்கள் முதுகெலும்பற்ற பிராணிகள்.


இதற்கு முதுகெலும்பு போல அமைந்திருப்பது முற்றிலும் சுண்ணாம்புச் சத்தாலான, நுண்ணிய துவாரங்கள் பல கொண்ட, வெண்மை நிறமான ஒரு உறுப்புதான். இதை ஆங்கிலத்தில் கட்டில் ஃபிஷ் போன் என்றும் தமிழில் கடல் நுரை என்றும் சொல்லுவார்கள்.


Cuttlebone.jpg

கடல் நுரை

Cuttlebone.jpg

கடல் நுரை நுண்ணிய துவாரங்கள் கொண்ட சுண்ணாம்பால் ஆனது. இந்தத் துவாரங்களில் காற்று இருப்பதால் அது கணவாயை அதற்குத் தேவையான ஆழத்தில் மிதந்திட உதவுகிறது.


கடல் நுரையய் மிக நுண்ணிய துகள்களாக பொடி செய்திட முடியும். ஆனால் இந்தத் துகள்கள் மாக்கல் மாவு போல (soap stone powder called talcum powder) வழு வழுப்பாக இருக்காது. சொர சொரப்பாக இருக்கும். அதனால் இது உலோகப் பாலிஷ் செய்திடும் மெழுகுகளிலும். பற்பொடி, பற்பசைகளிலும் உபயோகிக்கப் படுகிறது.


பள்ளிகளில் சிலேட்டுப் பலகைகள் உபயோகப் பட்டு வந்த நாட்களில் அவற்றை சுத்தம் செய்திட, முக்கியமாக பரீட்சைக்கு முன் தினம், சிறிது தண்ணீர் தெளித்துக் கடல் நுரையால் தேய்ப்பதுண்டு.


கடல் நுரையில் மிக நுணுக்கமான வடிவங்களைச் செதுக்கிட முடியும். கடல் நுரை தானாக எளிதில் பொடியாகக் கூடியதும் அல்ல. அது கடினமானது. மிக அதிகமான உஷ்ணத்தைத் தாங்கக் கூடியது. ஆகவே தங்க நகை செய்வோர் கடல் நுரையை வார்ப்பு அச்சாக (mould) உபயோகிப்பார்கள்.


கடற்கரயில் துணி விரிப்புகளின் மீது விற்பனைக்காக வைக்கப் பட்டிருக்கும் சங்கு, சோழி போன்றவற்றோடு கடல் நுரையையும் காணலாம்.


இயற்கையில் நாம் காண எத்தனை வினோதங்களை அளித்திடுறான் இறைவன்!



நடராஜன் கல்பட்டு


--Geetha Sambasivam 03:24, 28 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 28 ஜூலை 2011, 03:35 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,779 முறைகள் அணுகப்பட்டது.