வழிகாட்டி
உபகரணங்கள்
மொழி

அன்றொரு நாள்: ஸெப்டம்பர் 9:2

From மரபு விக்கி

Jump to: navigation, search

இன்னம்பூரான் 


இது கண்ணன் ஸ்பெஷல்.


தினையனைத்தே யாயினும் செய்தநன் றுண்டால்
பனையனைத்தா உள்ளுவர் சான்றோர்; - பனையனைத்து
என்றும் செயினும் இலங்கருவி நன்னாட!
நன்றில நன்றறியார் மாட்டு.

~நாலடியார்


நன்றி நவிலல் நற்பண்புகளில் ஒன்று. மேல்நாடுகளில் இயல்பாகவே சொல்லப்படும் நற்சொல், இது. நுண்ணிய தினையாயினும், ஓங்கியுயர்ந்த பனை அளவில் உதவியை போற்றுக என்று மென்மையாக அறிவுறுத்துகிறது, இந்த செய்யுள். திருவள்ளுவரோ,


செய்யாமற் செய்த வுதவிக்கு வையகமும்
வானகமு மாற்ற லரிது.

என்று அவ்வுதவிக்கு வையகமும் வானகமும் சமமாகுமோ என்கிறார்.

                                                                                                                  
KoreanStamp-1900-2chon-EmpireofKorea.jpg

இன்று அன்றைய தினமல்ல. என்றைய தினமே. கொரியாவில் இன்றைய தினம் தொடங்கி, அநேக வணிக மையங்கள் மூன்று நாட்கள் விடுமுறை, விழா எடுக்க: நன்றி நவிலும் விழா. எனக்கு தெரிந்த உச்சரிப்பில் ‘சுசியோக்’/‘ஹங்கவி’ என்கிறேன். மண் வாசனை நுகர, மக்கள் முன்னோர்களின் வாழ்விடம் சென்று அவர்களுக்கு நன்றி நவில்வதில் ஆர்வம், விருந்து, ‘ஹன்போக்’புத்தாடைகள், தொழுகை எல்லாம். சமாதிகளுக்கு சென்று, அங்கு ‘புல்சோ’ என்ற உழவாரப்பணி செய்து,முன்னோர்கள்க்கு ‘சார்யெ’ என்ற சடங்கு செய்து, ‘கங்கங்ஸுலெ’ நடனமாடி, தொழுகை, பிறகு விருந்து.‘ஸாங்ப்யோஞ்’ இல்லாத விருந்து விருந்தல்ல. நாம் திதி சடங்கு செய்யும்போது முக்கனிகளும், முன்னோருக்கு பிடிக்கும் உணவு படையல் வைப்பது போல, மீன், சாதம், சூப்பு, ஜப்செ, பழங்கள் எல்லாம் படையல். கொள்ளுத்தாத்தாவின் படத்தை வைத்து, அவரது, மற்ற முன்னோர்கள் அருமை சாற்றி, அளவளாவுவோம்.


‘சுசியோக்’ விழாவின் முன்னாளும், பின்னாளும் விடுமுறை, மண் வாசனை யாத்திரைக்காக. கலித்தொகையில் மஞ்சு விரட்டு என்றால், இங்கு வில்வித்தை, பெண்கள் ஊஞ்சல், இழுபறி, மல்யுத்தம், யூக் நூரி, வகையறா.

பழம்பெருமையை உணர்த்தும் தபால் தலை கீழே. உசாத்துணைகள், அபாரம்.





--பவள சங்கரி திருநாவுக்கரசு. 13:50, 11 செப்டெம்பர் 2011 (UTC)

Contributors

Coralsri.blogspot.com

This page was last modified on 11 September 2011, at 13:56. This page has been accessed 1,383 times.