சிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்! அஹோபிலம் 2மரபு விக்கி இருந்துசிங்கங்களைத் தேடிக் காட்டுக்குச் சென்றோம்- அஹோபிலம் 2திருமங்கை ஆழ்வார் காலத்திலே இருந்தே இந்தச் சிங்கவேள் குன்றம் என்னும் அஹோபிலம் செல்ல முடியாத ஓர் இடமாகவே இருந்து வந்துள்ளது.
அங்கண்ஞாலமஞ்ச அங்கோரளரியாய் அவுணன் அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர்க்களரியாய், அவுணன்
ஒன்பது நரசிம்மர்களில் முதலாவது ஜ்வாலா நரசிம்மர் எனச் சொல்கின்றனர். ஆனால் பயண வசதிக்காக நாங்கள் முதல் நாள் பயணத்தில் ஜீப் என்று பெயரளவில் சொல்லப் படும் வாகனம் செல்லுமிடத்தில் உள்ள நரசிம்மர்களையே தரிசித்தோம். டிராக்டர் போன்ற வாகனங்கள் மட்டுமே செல்லக் கூடிய கரடு, முரடான மலைப்பாதை. பாதைனு சும்மாச் சொல்றேன். உண்மையில் அந்த வண்டிகள் சென்று, சென்று ஏற்பட்டதொரு அடையாளமே அவை. அவற்றில் தான் செல்லவேண்டும். என்றாலும் இந்தப் பாதை கொஞ்சம் பரவாயில்லை எனலாம். இதுக்கு அப்புறம் வரும் பாருங்க ஒரு பாதை. உடம்பையே உலுக்கி எடுக்கும். தூசி பறக்கும். வட மாநிலங்களில் வரும் புழுதிய்புயல் தான் ஏற்பட்டுவிட்டதோ என்ற ஐயம் வரும். இத்தகையதொரு கடினமான பயணங்களிலே முதலில் நாம் தரிசிப்பது சத்ரவடநரசிம்மர் ஆகும். இந்த ஒன்பது நரசிம்மர்களிலேயே மிக மிக அழகானவர் இவரே. குடையைப் போலக் கவிந்த ஆலமரத்தடியில் வீற்றிருப்பதால் இவர் சத்ரவட நரசிம்மர் எனப்படுகின்றார். சுந்தர புருஷனாக, ஆடை, அலங்காரங்கள், ஆபரணங்கள் தரித்து நரசிம்மர் நம்மைப் பார்த்து "எங்கே வந்தே?" என்று கேட்கும் நம் தாத்தாவைப் போல் சிரித்துக் கொண்டு காட்சி அளிக்கின்றார். தேவ சபையில் உள்ள ஆஹா, ஊஹூ என்னும் இரு கந்தர்வர்களும் கோபத்தினால் கொந்தளித்துக் கொண்டிருந்த நரசிம்மத்தின் கோபத்தைத் தம் இசையால் போக்கியதாகவும், அவர்கள் இசையைக் கேட்டு மகிழ்ந்த வண்ணம் இவர் காட்சி அளிப்பதாகவும் ஐதீகம். சங்கு, சக்கரங்களைத் தரித்துக் கொண்டு. வலதுகீழ்க்கரம் அபய முத்திரையும், இடது கீழ்க்கரம் தொடையில் பதிந்து தாளம் போட்டுக் கொண்டிருக்கும் வண்ணமாகவும் காட்சி அளிக்கின்றது. ஆலயத்தின் நுழைவாயிலில் ஆஹா, ஊஹூ இருவரின் உருவங்களும் அமையப் பெற்றிருக்கின்றன.
பட்டாசாரியார் அனைவருக்கும் தீர்த்தம், சடாரி போன்றவை சாதிக்கின்றார். இந்தச் சத்ரவட நரசிம்மர் சூரியனால் ஏற்படும் சகல தோஷங்களையும் போக்கும் வல்லமை கொண்டவர் எனச் சொல்கின்றார்கள். நாட்டின் தலைமைப் பதவி, மற்றவர்களுக்கு ஆணையிடும் அதிகாரம், நீதிபரிபாலனம் போன்றவற்றைத் தவறாமல் செய்யும் வல்லமை போன்ற சிறப்புகளை வழங்கும் பெருமை கொண்டவர். பத்மாசனக் கோலத்துடனேயே பேரழகுக் கோலத்தோடு, இதழ்களில் சிரிப்போடு காட்சி தருகின்றார். அடுத்ததாய்த் தான் மிக, மிகக் கஷ்டமான பயணம் என்னதான் ஜீப்பிலே சென்றாலும் பயணம் மிகக் கடினம். ஒரு ஜீப்பிற்கு ஒன்பது பேர் என ஐந்து ஜீப்புகளில் சென்றோம். அவை எப்படி அந்தத் தடங்களில் ஓடுகின்றன என்பதே ஒரு ஆச்சரியம் தான். ஒரு இடத்தில் மேட்டிலிருந்து பள்ளத்தில் குதிக்கும் ஜீப் மற்றொரு இடத்தில் முன் பக்கத்துச் சக்கரங்கள் இரண்டின் உதவியோடு மட்டுமே செல்லுகின்றது. அனைவரும் முன்னால் வளைகின்றோம். பின்னர் செங்குத்தான மேடு வருகின்றது. ஜீப் இப்போது மேட்டில் ஏறுகின்றது. அனைவரும் பின்னால் சரிகின்றோம். இன்னும் ஒரு இடத்தில் இடது பக்கச் சக்கரங்கள் உதவியோடு மட்டுமே செல்லவேண்டி உள்ளது. இந்த அழகில் இரு பக்கமும் காடாக வளர்ந்திருக்கும் மரங்களின் கிளைகள், இலைகள் போன்றவை உரசி ஜன்னல் பக்கம் உட்கார்ந்திருக்கும் நபர்களுக்குச் சிரமத்தை உண்டாக்குகின்றது. ஜீப்பில் ஏறும்போது டிரைவர் பக்கத்து சீட்டோ, அல்லது நடுவிலோ இடம் கிடைக்கவில்லை எங்களுக்கு. பின்னால் நாலு பேர் அமரும் சீட்டில் தான் கிடைத்தது. கொஞ்சம் வருத்தமாய் இருந்தது. ஆனால் அது எவ்வளவு வசதியாப் போச்சு என்று பிரயாணத்தின் போதே புரிந்தது.
இதோ தெரியுது பாருங்க, புழுதி பறக்கிறது. இது நாங்க எடுத்த படம் இல்லைனாலும் பாவன நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் வழியில் இப்படித் தான் புழுதி பறக்கும் வண்டியிலே போகும்போது. நடக்கவே முடியாத அடர்ந்த காட்டுப் பகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் இந்த சிங்கராஜா. ஏன் தெரியுமா? அவர் கல்யாண மாப்பிள்ளையாக்கும். மனைவியோடு தனிமையாகக் கொஞ்சிட்டு இருப்பார். தொந்திரவு வேண்டாம்னு தான். ஆனால் மனைவி வழி சொந்தங்கள் அங்கேயே இருக்கிறவங்களும் இருக்காங்க. கீழேயும் இருக்காங்க. அப்படி ஒருத்தர் தான் எங்களுக்கு வழிகாட்டியாக வந்த சுப்பராயுடு. மிக மிக அற்புதமான மனிதர். இவரைப் பற்றிக் கடைசியில் பார்க்கலாம். இப்போ பாவன நரசிம்மர் பற்றி.
இந்த மேடு ஏறி மேலே சென்றால் கோயில் தான். கிருத யுகத்தில் இந்த மலைத் தொடர்களில் இருந்த வேடர்கள் செஞ்சு என அழைக்கப் பட்டனர். மலைவாழ் மக்கள் ஆன இவர்கள் மிகவும் ஏழ்மையானவர்கள். காட்டில் வேட்டை ஆடுவது மட்டுமே தொழில் இவர்களுக்கு. வெளி உலகுடன் அவ்வளவு தொடர்பு இல்லை. அந்தக் குடும்பங்களில் ஒன்றில் தோன்றியவள் தான் செஞ்சுலட்சுமி என்னும் இளம்பெண். இவளைத் திருமகளின் அவதாரம் என்றே கூறுகின்றனர். திருமகளின் அம்சங்கள் அனைத்தும் நிரம்பப் பெற்ற இவள் அழகைப் பார்த்து மயங்கி இவளைத் திருமணம் செய்யத் துடித்த ஆண்கள் அனைவரையும் இவள் மறுத்தாள். தன் இயல்புக்கு ஏற்ப அவள் மனம் அந்த நாராயணனையே மணக்க எண்ணியது. ஆனால் காட்டுவாசியும், வேடர் குலத்தில் பிறந்த இயல்புக்கும் ஏற்ப நரசிம்மத்தையே விரும்பியது இவள் மனம். பிரஹலாதனைக் கொன்று கோபத்துடன் அலைந்து கொண்டிருந்த நரசிம்மம் இவளைப் பார்க்க, அனைவரும் கண்டு பயந்த நரசிம்மம் இவள் மனத்தை ஈர்க்க, அங்கே தோன்றியது தெய்வீகக் காதல்.
பவன நதிக்கரையில் கை, கால்கள் சுத்தம் செய்து கொண்டு மேலே ஏறினோம். நரசிம்மர் ஆதிசேஷன் குடையின் கீழ், தன் மனைவியான செஞ்சு லட்சுமியை இடது தொடையில் இருத்திய வண்ணம் காட்சி அளிக்கின்றார். சங்கு, சக்ர,தாரியாய், சாந்த சொரூபத்தில் சுக ஆசனத்தில் வலது காலைத் தொங்க விட்டு, இடக்காலை மடித்துக் காட்சி அளிக்கின்றார். வலக்கீழ்க்கரம் நாடி வந்த நமக்கு அபயம் அளிக்க, இடக் கீழ்க் கையால் மனைவியைக் கட்டி அணைத்திருக்கின்றார். இந்தப் பாவன நரசிம்மரைத் தரிசித்தால் ராகுவால் ஏற்படும் தோஷங்கள் விலகுகின்றன. தேவையற்ற கற்பனைகள், கெட்டஎண்ணங்கள், கொடுங்கோலாட்சி மற்றும் இஷ்டத்துக்கு நடப்பது போன்ற கெட்ட குணங்களைப் போக்கும் வல்லமை கொண்டவர். அடுத்து நாம் தரிசிக்கப் போவது மாலோல நரசிம்மர்.
மென்றபேழ்வாய் வாளெயிற்றோர்க்கோளரியாய், அவுணன் முனைத்தசீற்றம்விண்சுடப்போய் மூவுலகும்பிறவும், வழக்கம்போலப் பாசுரங்கள் கிடைத்த வண்ணம் போட்டிருக்கேன். நன்றி.
--Geetha Sambasivam 15:42, 10 பெப்ரவரி 2011 (UTC) |



