பழம்பொரி

மரபு விக்கி இருந்து

Coralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:25, 24 நவம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம்

(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)
தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 உமா சண்முகம்


இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.


தேவையான பொருட்கள்


மைதா- 1/2 கிலோ

நடுத்தரமான நேந்திரம் பழம் -5

சர்க்கரை -4 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள்தூள் – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

தேங்காய் எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு


செய்முறை


பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள்.

பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள்.

சுவையான பழம்பொரி தயார்.













--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:25, 24 நவம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=பழம்பொரி&oldid=8850" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 24 நவம்பர் 2011, 06:25 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 3,114 முறைகள் அணுகப்பட்டது.