பழம்பொரிமரபு விக்கி இருந்துஉமா சண்முகம்
இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.
தேவையான பொருட்கள்
மைதா- 1/2 கிலோ நடுத்தரமான நேந்திரம் பழம் -5 சர்க்கரை -4 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு- 2 டேபிள் ஸ்பூன் மஞ்சள்தூள் – சிறிதளவு உப்பு – தேவையான அளவு தேங்காய் எண்ணெய்-பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
பஜ்ஜிக்கு வாழைக்காய் வெட்டுவதைப் போல நேந்திரம் பழத்தை நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள். மைதா, அரிசிமாவு, மஞ்சள்தூள், சர்க்கரை, உப்பு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சற்றுக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளுங்கள். பஜ்ஜி மாவுப் பதம் இருக்க வேண்டும். பழத்துண்டை மாவில் நனைத்துத் தேங்காய் எண்ணெயில் சிவக்கப் பொரித்தெடுங்கள். சுவையான பழம்பொரி தயார்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 06:25, 24 நவம்பர் 2011 (UTC) நன்றி - வல்லமை |