Welcome to Tamil Heritage Foundation wiki where anyone interested in Tamil and Tamil Heritage, collaboratively create and share content about subjects they are passionate about.
All articles that are related to Tamil Heritage are welcome, irrespective of the language !
தமிழ் மரபு அறக்கட்டளை எனும் சர்வதேச தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் தமிழ் மரபு விக்கியை உருவாக்கி பொதுப்பயன்பாட்டிற்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. இப்பகுதியில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு துறையைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அதனை பற்றிய மேலதிக விபரங்களை நீங்களே உள்ளீடு செய்யுங்கள். » திட்ட அறிமுகம்
இது இவ்வாறிருக்க, இனி சிரமண சமயங்களான பௌத்த ஜைன மதங்களுக்கு வருவோம். அவை மக்களிடம் புழக்கத்தில் இருந்த பிராகிருத மொழிகளை பிரதானமாக கொண்டே எழுந்தவை. மக்களின் மொழியையே பயன்படுத்தி தம்முடைய கருத்துக்களை பிரச்சாரம் செய்து இம்மதங்கள் பரப்பின. மக்களிடைய செல்வாக்கு பிற இதுவும் ஒரு முக்கிய காரணமாயிற்று (பௌத்த-ஜைன மதங்கள் தோன்றிய காலக்கட்டத்தில் சமஸ்கிருத மொழி சாஸ்த்ர-ராஜ பாஷையாக பரிணமிக்கவில்லை, பிராமணர்களின் மொழியாகத்தான் முடங்கி கிடந்தது ). ஒரு சமயத்தில், புத்த பகவான் தன்னுடைய போதனைகளை சந்தஸில் [வேத மொழி] சேமிக்கப்படகூடாதென்று தடுத்தார். மக்களின் மொழியிலேயே அவை இருக்க வேண்டும் என்று தெரிவித்தார். ஆனால், காலம் செல்ல செல்ல முற்றிலும் முரணாக சிரமண சமயத்தவர்களே கூட தம்மைச்சார்ந்த மொழியையே மூல மொழியாக கருதத்தொடங்கினர்.
பொதுவாக பிராகிருதம் சமஸ்கிருதத்தின் திரிந்த வடிவம் என்ற கருத்துள்ளது. பிராகிருதத்துக்கும் சமஸ்கிருதத்துக்கு உள்ள வேறுபாடு, கிட்டத்தட்ட கொடுந்தமிழுக்கும் (பேச்சுத்தமிழ்) செந்தமிழுக்கும் உள்ள வேறுபாடுதான். [பேச்சுத்தமிழை எழுதினாலே அது இன்னொரு மொழிபோலத்தான் இருக்கும்]. ஆனால், சிரமணர்களோ, இதற்கு மாற்றாக பிராகிருதத்தின் திருத்தப்பட்ட வடிவமே சமஸ்கிருதம் என்ற கருத்தை கொண்டிருந்தனர் (இதே ரீதியில், செந்தமிழ் பேச்சு வழக்கினால் மக்களால் திரிக்கப்பட்டு கொடுந்தமிழ் ஆனதா, அல்லது மக்களிடம் புழங்கிய திருத்தம் பெறாத கொடுந்தமிழ்(கள்) இலக்கணம் சமைக்கப்பெற்று சீர்தரம் செய்யப்பட்டு செந்தமிழ் ஆனதா என்பது விவாதிக்க வேண்டிய விஷயமே ) ....முழுமையான கட்டுரை