பாசுர மடல் 019 : ஊமையின் கனவு.மரபு விக்கி இருந்துCoralsri.blogspot.com (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:24, 17 நவம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம் ஊமையின் கனவு.
பாசுர மடல்கள் ஆழ்வார் மனதைப் புரிந்து கொள்ளவும், ஆழ்வார்களை நம்மிடம் கிட்டே கொண்டு வரவும்,
பாசுரங்கள் மூலமாக அவர்கள் தமிழுக்கு செய்திருக்கும் சேவைகளை அறிந்து கொள்ளவும் வருகின்றன. ஆழ்வார்களை உயர்ந்த பீடத்தில் வைத்து நம்மிடமிருந்து பிரித்து மரியாதை செய்வதைவிட ஆழ்வார்கள் எப்படி கண்ணனை சகியாக வைத்தார்களோ அதே போல் ஆழ்வார்களை நம் உற்ற தோழர்களாகக் காண்பதே மேல். ஒண்ணு மண்ணா இருப்பதில் உள்ள சுகமே தனி!
நவம்பர் 13 தேதி ஒரு பாடல் இணையத்தில் உலா வந்தது. அது:
இளங்சிறாராய் இன்புற்றுத் துள்ளியோடி
இந்தத் தேடல் பொதுவாய் 40-50ல் இருக்கும் புகலிட தமிழரிடம் ஓங்கி நிற்கும். வாழ்வு வெளியிலும், உள்ளம் தமிழகத்திலும் நிற்கும். என்றாவது ஒருநாள் அங்கு நிரந்தரமாய் போய் நிற்பேன் என்ற ஏக்கம். தாயைப் பிரிந்த சேய் மனது! இந்த உணர்வை நம்மில் பலர் அனுபவித்து இருக்கக்கூடும். துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து வாசிக்கலாம்! யாழும், பெண்ணும் துணைக்கு இல்லாவிடில் நம் துக்கத்தை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம். இவர் ஒரு கதை சொல்ல, அவர் ஒரு கதை சொல்ல கொஞ்ச நேரத்தில் துக்கத்தின் கனம் குறைந்து விடும். இந்த துக்கம் - கவிதை எழுதிய எல்.ஏ.சுவாமிநாதனுக்கு மட்டும் சொந்தமா? இல்லை இத்தகைய மனோநிலை ஆழ்வார்களுக்கும் வந்திருக்கிறதா? ஆழ்வார்களையே கேட்போம்:
வேதநூற் பிராயம் நூறு
இதைவிட இன்னும் உருக்கமாகச் சொல்கிறார் திருமங்கை ஆழ்வார். ஏக்கங்கள் நிறைந்த நம் வாழ்வை ஊமை கண்ட கனவு என்கிறார். ஊமை கானும் கனவை அவனைத் தவிர வேறு யாரிடமும் சொல்லக் கூட முடியாது. இதில் தொனிக்கும் தனிமையும் கழிவிரக்கமும் சொல்லில் வடிக்க முடியாது. தனிமையை அனுபவித்தவர்களுக்குத்தான் புரியும். வெறும் ஊமைக்கனவு என்று சொல்லி விட்டுப் போனாலும் பரவாயில்லை. ஊமை கண்ட கனவும் பழுதானால்? என்ன கொடுமை ஐயா!
சேமமே வேண்டித் தீவினை பெருக்கித்
"உற்றதொரு விலங்காய் வாழவே உதித்தேனோ என்ற எண்ணம்!" இங்குதான் ஆரம்பமாகிறது ஆன்மீகத் தேடல். இந்த முற்றுப் பெறாத தேடலில் பல உணர்ச்சிகரமான கட்டங்கள் உண்டு. ஊர், ஊராய் அலையும் மக்கள் சொல்லலாம் ஊரிலேன் (இது ஈழச் சகோதரர்களுக்கு மிகவும் பொருந்தும்); காணியில்லை - எனக்கென்று சொந்தமாக நிற்பதற்கு இடமில்லை. உறவு என்று கொண்டாடுவதற்கு யாரும் இல்லை. வாழ்வில் பற்றுவதற்கு ஒன்றுமில்லை. காசு, காசு என்ற அலைந்தாலும், பட்டிணத்து அடிகள் சொன்னது போல் காதறந்த ஊசியும் கடைசி வரை வாராதுதான்.
ஊரிலேன் காணியில்லை
கண்ணனே கதறுகிறேன் என்கிறார். என் துயர்களை களைவார் யார் உளர், அம்மா? என்றும் வினவுகிறார்.
இம்மாதிரி சுயவிசாரணை ஆரம்பிக்கும் போது உள்ளத்தின் கசடுகள் பல வெளியே வரும். பாலைக் கடையும் போது வெண்ணய் திரண்டு மேலே வருவது போல். அதன்பின் மனது எளிதாகிவிடும். பின்வரும் ஆழ்வாரின் அனுபவம் போல்:
மனத்திலோர் தூய்மை யில்லை
(திருமாலை 30)
எனக்கு இனி கதி என்ன? என்ற கேள்வி எப்போதாவது வரும் போது ஆழ்வார்களுக்குள் வாருங்கள். அங்கு பதில் இருக்கிறது.
நாகண்ணன். Date: Sun, 16 Nov 1997 20:50:16 +0100 |

