சோழ நாட்டுத் திருப்பதிகள்

மரபு விக்கி இருந்து

Ksubashini (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 16:05, 5 டிசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

1.திருவரங்கம்

1.வண்டார்க்கும் சோலை வரிமதில்சூழ் திருவரங்கம்

 கண்டார்கள்  உய்திபெற  அரவணைமேல் கண்வளர்வான்
கொண்டேத்தும் அடியவர்தம் குலங்காக்கும் நலமுடையான்
விண்தோயும் கோபுரம்சூழ் வித்தகனை வணங்குதுமே.

2.ஏழ்மதிலும் ஏழுலகாய் எண்திசையும் விரிந்திருக்கப்

  பாழ்நரகில்  அழுந்தாமல்  காக்கின்ற பரம்பொருளாய்
வாழ்கின்ற பேரரங்கன் வளவயலும் பூங்காவும்
சூழ்கின்ற திருவரங்கச் சோதியினை வணங்குதுமே.

பங்களிப்பாளர்கள்

Ksubashini