கடைப் பிள்ளை சித்தரின் உட்கிரக மார்க்கம்மரபு விக்கி இருந்துUlagankmy (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:42, 21 ஜனவரி 2013 அன்றிருந்தவாரான திருத்தம் கடைப் பிள்ளையின் உட்கிரக மார்க்கம்
அன்பர்களே, தொகுத்து வைத்துள்ள சித்தர்களின் நூற்களைப் பார்க்க பார்க்க இப்படியெல்லாம் சிந்தித்திருக்கின்றார்களா நம் தமிழ மக்கள், அவர்களெல்லாம் எங்கே போய்விட்டார்கள்? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகின்றது. இன்று அன்பர்களுக்கு அதிகம் கேள்விப் படாத ஓர் சித்தரை அறிமுகம் செய்து வைக்கலாம் என்றிருக்கின்றேன். இவர் தான் கடைப் பிள்ளை என்பவர். கொங்கணர் யாகோபு என்ற ராமத்தேவர் ஆகவே அவர் வழி புலத்தியர் ஆகியோரை குருவாகக் கொண்டு தானும் சுதந்திரமாக எண்ணி பல புதுமைகளைச் செய்தவர். இவர் எழுதிய நூற்களாக "ஞான சைத்தன்யம்-7" " ஞான சமாதி தீட்சை-17" "ஞானத் தண்டகம்-50" "ஞானக் கக்கிஷம்-80" "சிவயோக ஞானம்-100" "கலைக்கியானம்-120" என்ற நூற்கள் அழகிய செந்தமிழில் தாமரை நூலகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள "யோகஞான சாஸ்த்திரத் திரட்டு" மூன்றாம் பாகத்தில் கிடைக்கின்றன. பல புகழ்பெற்ற சித்தர்களை ஆங்காங்கே வழிமொழிந்து செல்வதால் இவர் காலம் 16 அல்லது 17ஆவது நூற்றாண்டாக இருக்கலாம். கொங்கணர் வழிச் சென்று அவர் அருளாலே உட்கிரக மார்க்கம் என்ற ஓர் புதிய மார்க்கத்தைக் கண்டு பிடித்து அதன்வழி தான் ஊய்ந்ததாக அவரே கலைக்கியானம் என்ற நூலில் கூறுகின்றார். வசனித்து அனுக்கிரக வார்த்தைபெற்று ங்கு அவர் குறிப்பிடும் உட்கிரகமார்க்கம் நவக்கிரகங்கள் என்பன மூளைப்பகுதியில் நின்று ஐம்பொறிகளையும் ஆன்மாவையும் இயக்கும் எந்திரங்களே என்று அவர் புதிதாகக் கண்டு பிடித்துக் கூறியதாகும். ங்கு குறிக்கப்படும் கொங்கணவர் என்பார் போகருடைய சிறந்த மாணாக்கர்களில் ஒருவராக போற்றப்படுகின்றார்.இவரது கடைகாண்டம் எனும் நூல் பிரசித்திப் பெற்ற ஓர் நூலாகும். வைத்திய காவியம் 3000 எனும் பெருநூல் உரையோடு தாமரை நூலகத்தாரால் வெளியிடப்பட்டுளது. ங்கு வசனித்தல் என்பது உரையாடுதல். ஆகவே கொங்கணரோடு உரையாடி அவரது அருளைப்பெற்று இந்த உட்கிரக மார்க்கத்தை தான் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றார். நிசனித்தல் என்பது உண்மை எது பொய் எது என்று நிச்சயம் செய்வது. ஆதாரங்களாவன மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்றவாறு செல்லும் கற்றளிகளாகும். ஓர் ஆன்மாவின் இச்சாபோக்குகளை நிருத்தும் மந்திரத்தலங்கள். இக்கருத்து தொல்காப்பியரின் அகத்திணை புறத்திணை போன்ற கருத்துக்களிலிருந்து வளர்ந்தவை என வேறோரிடத்தில் விளக்கி இருக்கின்றேன். நிலைத்தவறாக் கலை என்பன சந்திரக் கலை சூரியக்கலை அக்னி கலை என்பன. சந்திரனாக தோன்றும் விந்து, சூரியனாகத் தோன்றும் நாதம், இவை இரண்டும் இணைந்து தோன்றும் போது எழுகின்ற ஞானத் தீ என்பவை ஆனமாவின் அகத்திலே தோன்றும் படிநிலைகளே கலைகள் எனப்படுவன.சந்திரகலை பதினாறு என்றும் சூரியககலை பனிரெண்டும் என்றும் கூறுவர். இந்த கலை அகத்தே அதிகரிக்கை பிரசாத யோகம் எனவும் படும். இந்த யோகத்தை விளக்கும் தனி நூல்கள் பலவுண்டு. ங்கு தியானம் எனும் திசனம் அகத்திருளைக்கடியும் ஆழச் சிந்தனை என்ற பொருளில் பயில்வதை காண்க. இதுவே குண்டலினி யோகம் என்று சித்தப்பெருமக்களால் போற்றப்படுகின்றது. இதனை வேறொரு விளக்க இருக்கின்றேன். சிவயோகஞானத்தில் இது தொடர்பாக ஓர் அழகியப் பாடல்: விண்ணொளியில் கதிர்மதிதான் கண்ணேயாகும் தன் பொருள் கண்கள் அருட்கண்களாகி விடயங்களை பார்க்கும்போதுதான் பொய்களைக் காணாது மெய்களையே கண்டு இனிதே வாழமுடியும் என்பது. இதுவும் மெய்கண்டார் வற்புறுத்தும் ஒன்றுமாகும். ஆனால் இவர் நவக்கிரகங்களோடு பார்வையியல் கூறுவது வேறு இடத்தில் காண வரா(எனக்குத் தெரிந்தவரை) ஓர் புதுமையாகும். வர் கூறும் "உட்கிரக மார்க்கம் " தான் என்ன? ஞான கக்கிஷம் எனும் நூலில் இதைத் தெளிவாகவே விளக்குகின்றார். முதலில் இவர் வாசியோகத்தை Hemisphereic Functioning என்று இன்று வெள்ளையர்களால் போற்றப்படும் அத்துறையோடு ஒத்து வரும் வகையில் கூறும் சில விசயங்களைப் பார்ப்போம். கருவான இடகலைதான் சந்திரன் வீடு பாரப்பா வலதுபுர நாசிதன்னில் டதுபுற நாசி வலதுப்பகுதி (Right Hemisphere) மூளையோடும், வலதுபுற நாசி இடப்பகுதி மூளையொடும் (Left Hemisphere)தொடர்புடையது. இடதுபுற நாசி என்றாலும்இடது கலை என்றாலும் ஒன்றே, இது விந்துவின் ஓர் வடிவாகிய சந்திரனின் ஆட்சியில் இருப்பது. இதேப்போன்று இடப்பக்க மூளை நாதத்தின் வடிவாகிய சூரியனின் ஆட்சியில் உள்ளது என்கின்றார். வாசியோகம் செய்து, விந்துவும் நாதமும் இணைந்து மூளையில் செயல்படும்படி செய்தால் அறிவு நன்றாக வளர்வதோடு மனநலம் உடல்நலம் ஆகிய இரண்டையும் பெற்று வாழலாம் என்கின்றார். அதற்குரிய ஓர் சாதனத்தையும் விளக்குகிறார் அடுத்துவரும் பாட்டில்: பண்ணுவது எந்தவிதம் என்றால் மைந்தா நுதல்விழிப் பார்வையும் ஐம்பொறிகளால் வருகின்ற பொறிலியப்பார்வையும் விரோதமில்லாது ஒன்றாகிடும் போது தேகம் சுத்தாமாகி தெய்வீகமான ஓர் உடம்பாய்ச் சுடரும் என்கின்றார். இனி பார்வையைப் பற்றி விரிவாகக் விளக்கப் புகுகையில் தனது உட்கிரக மார்க்கத்தை தெளிபடுத்துகின்றார். பூசை செய்யும் நவகிரகந் தன்னைக் கேளு கிரகங்களாகிய சந்திரனும் சூரியனும் இடது கண் வலது கண் என்றவாறு நிற்கின்றன; அதனால் இவ்விரண்டும் இணைந்து செயல் படும் சுழிமுனை நாடியில் நாட்டத்தை நிறுத்தினால் வரக்கூடிய தோசங்களெல்லாம் விட்டு நீங்கும் என்கின்றார். உண்மையுள்ள செவ்வாயும் புதனும் ரெண்டு முத்தியுள்ள வியாழன் வெள்ளி ரெண்டு பரிபூரண அகத்தியர் என்பார் சனியினை முதுகந்தண்டில் நிற்கும் ஆணவமலம் என்று கூற இவரோ அதை நாவினோடு தொடர்பு படுத்தி அதனின் வாக்கிற்கு உரியதாக்கி அதன் வழி சனி தோசத்தை நீக்குவதற்கு புதியதோர் சாதனத்யும் வழிமொழிகின்றார். ஆமப்பா சனியதுவும் வாக்கேயாகும் வ்வாறு ஐம்பொறிகளுடன் நவகிரகங்களை தொடர்பு படுத்தும் இவர், ராகு கேது என்ற கிரகங்கள் வரும் போது ஞானகற்ப சாதனம் நவின்ற புலத்தியரைச் சார்ந்தே செல்கின்றார். பதிவான ராகுவுட கிரகமேது பாம்பு வடிவத்து ராகு உண்மையில் இலிங்கத்தின் இன்னொரு வடிவமாகும். இதுவே வீரியத்தையும் தருவது, அதன் வழி காம இன்பத்தை நுகர்ந்து குண்டலினி ஈட்டி மகிழ உதவுவது என்கின்றார். னி கேதுவைப்பற்றியும் பிறர் சொல்லாவகையில் ஒன்றை சொல்கின்றார். எல்லா ஆதாரச் சக்கரங்களும் தோன்றுதற்கு இடமாகிய மூலாதாரமே அதுவென்கின்றார். தானான கேதுவுட கிரகமேது மூலாதாரத் தலமேக் கேது, குடிலமாகிய பலவகைப் பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கும்படி செய்து பாச பந்தங்களில் வீழ்த்திக் கொண்டே இருப்பது. அதன் பிடியினின்று விடுபட ஓங்கார மந்திர செபத்தியானமே வழி என்கின்றார். அன்பன் கி.லோகநாதன் |