கடைப் பிள்ளை சித்தரின் உட்கிரக மார்க்கம்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

கடைப் பிள்ளையின் உட்கிரக மார்க்கம்


முனைவர் கி.லோகநாதன் 2004

அன்பர்களே,

தொகுத்து வைத்துள்ள சித்தர்களின் நூற்களைப் பார்க்க பார்க்க இப்படியெல்லாம் சிந்தித்திருக்கின்றார்களா நம் தமிழ மக்கள், அவர்களெல்லாம் எங்கே போய்விட்டார்கள்? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகின்றது. இன்று அன்பர்களுக்கு அதிகம் கேள்விப் படாத ஓர் சித்தரை அறிமுகம் செய்து வைக்கலாம் என்றிருக்கின்றேன். இவர் தான் கடைப் பிள்ளை என்பவர். கொங்கணர் யாகோபு என்ற ராமத்தேவர் ஆகவே அவர் வழி புலத்தியர் ஆகியோரை குருவாகக் கொண்டு தானும் சுதந்திரமாக எண்ணி பல புதுமைகளைச் செய்தவர். இவர் எழுதிய நூற்களாக "ஞான சைத்தன்யம்-7" " ஞான சமாதி தீட்சை-17" "ஞானத் தண்டகம்-50" "ஞானக் கக்கிஷம்-80" "சிவயோக ஞானம்-100" "கலைக்கியானம்-120" என்ற நூற்கள் அழகிய செந்தமிழில் தாமரை நூலகத்தாரால் வெளியிடப்பட்டுள்ள "யோகஞான சாஸ்த்திரத் திரட்டு" மூன்றாம் பாகத்தில் கிடைக்கின்றன. பல புகழ்பெற்ற சித்தர்களை ஆங்காங்கே வழிமொழிந்து செல்வதால் இவர் காலம் 16 அல்லது 17ஆவது நூற்றாண்டாக இருக்கலாம்.

கொங்கணர் வழிச் சென்று அவர் அருளாலே உட்கிரக மார்க்கம் என்ற ஓர் புதிய மார்க்கத்தைக் கண்டு பிடித்து அதன்வழி தான் ஊய்ந்ததாக அவரே கலைக்கியானம் என்ற நூலில் கூறுகின்றார்.

வசனித்து அனுக்கிரக வார்த்தைபெற்று
மார்க்கமுடன் உட்கிரக மார்க்கங் கண்டு
நிசனித்த ஆதார மூலங் கொண்டு
நிலைத் தவறாக் கலையறிந்து முடிமேற்சென்று
திசனித்த சுழிமுனையில் நிற்கும்போது
திருவாசி வாசியென்ற கலையைக் கண்டேன்
பசனித்த கலையறிந்து மைந்தா நானும்
பாடினேன் பன்னிரண்டு பத்துந்தானே 2

ங்கு அவர் குறிப்பிடும் உட்கிரகமார்க்கம் நவக்கிரகங்கள் என்பன மூளைப்பகுதியில் நின்று ஐம்பொறிகளையும் ஆன்மாவையும் இயக்கும் எந்திரங்களே என்று அவர் புதிதாகக் கண்டு பிடித்துக் கூறியதாகும்.
பசுவாகிய ஆன்மா காட்டு ஒடுங்கக் காணாதே என்கின்றார் மெய்கண்டார். அது தொடங்கி தமிழகத்தில் பார்வையைப்பற்றி ஆய்வுகள் (the pehnomenology of perception) மிகவும் விரிவாக செய்யப்பட்டதில் இவர் தலைசிறந்து நிற்கின்றார், புதிய ஆழமும் காண்கின்றார்.

ங்கு குறிக்கப்படும் கொங்கணவர் என்பார் போகருடைய சிறந்த மாணாக்கர்களில் ஒருவராக போற்றப்படுகின்றார்.இவரது கடைகாண்டம் எனும் நூல் பிரசித்திப் பெற்ற ஓர் நூலாகும். வைத்திய காவியம் 3000 எனும் பெருநூல் உரையோடு தாமரை நூலகத்தாரால் வெளியிடப்பட்டுளது.

ங்கு வசனித்தல் என்பது உரையாடுதல். ஆகவே கொங்கணரோடு உரையாடி அவரது அருளைப்பெற்று இந்த உட்கிரக மார்க்கத்தை தான் கண்டுபிடித்ததாகக் கூறுகின்றார். நிசனித்தல் என்பது உண்மை எது பொய் எது என்று நிச்சயம் செய்வது. ஆதாரங்களாவன மூலாதாரம் தொடங்கி சுவாதிட்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்றவாறு செல்லும் கற்றளிகளாகும். ஓர் ஆன்மாவின் இச்சாபோக்குகளை நிருத்தும் மந்திரத்தலங்கள். இக்கருத்து தொல்காப்பியரின் அகத்திணை புறத்திணை போன்ற கருத்துக்களிலிருந்து வளர்ந்தவை என வேறோரிடத்தில் விளக்கி இருக்கின்றேன்.

நிலைத்தவறாக் கலை என்பன சந்திரக் கலை சூரியக்கலை அக்னி கலை என்பன. சந்திரனாக தோன்றும் விந்து, சூரியனாகத் தோன்றும் நாதம், இவை இரண்டும் இணைந்து தோன்றும் போது எழுகின்ற ஞானத் தீ என்பவை ஆனமாவின் அகத்திலே தோன்றும் படிநிலைகளே கலைகள் எனப்படுவன.சந்திரகலை பதினாறு என்றும் சூரியககலை பனிரெண்டும் என்றும் கூறுவர். இந்த கலை அகத்தே அதிகரிக்கை பிரசாத யோகம் எனவும் படும். இந்த யோகத்தை விளக்கும் தனி நூல்கள் பலவுண்டு.
கலை: a division
திசனித்தல் என்பது தியானித்தல் என்பதின் மூல வடிவு. இதன் அடிப்படையிலேயே யெப்பானிய zen என்ற சொல் உருவாகியது. இது தீய்த்தல் எனும் கருத்துடையது: ஆழமான சிந்தனை வழி ஞானத்தெளிவு பெற்று அதன் வழி அகத்திருளைக் கடிவதே திசனிப்பதாகும். . தீ -சனிப்பது என்பதே திசனிப்பது என்ரு வருவிற்று போலும்.இது ஆன்மா நாதமும் விந்துவும் இணைந்து செயல் படும் சுழிமுனை நாடிச் செலவில் செல்லும் போதே அமையக் கூடியதாகும். அகக் கட்டுபாடு மிகத் தேவையான ஒன்றாகும். திருவாசி என்பது சிதம்பரச் சக்கரமாக இருக்கலாம். எல்லா மந்தரங்களும் உருவாகும் இடமுமாகும். இவ்வாறு மந்திரங்கள் உருவாகி செயல்படவே தான் ஆன்மாக்கள் ஞானத்தெளிவு பெறமுடிகின்றது.
பசனித்தல் என்பது சொல்லப்பட்ட என்ற பொருளது. மேலே கூறப்பட்ட உட்கிரக மார்க்கம் சுட்டப்படுகின்றது. அதனின் பல்வேறு பேதங்களை விருத்திகளைக் கண்டு 120 பாடல்களில் இந்த கலைக்கியானம் என்ற நூலைப் பாடியதாக கூறுகின்றார்.

ங்கு தியானம் எனும் திசனம் அகத்திருளைக்கடியும் ஆழச் சிந்தனை என்ற பொருளில் பயில்வதை காண்க. இதுவே குண்டலினி யோகம் என்று சித்தப்பெருமக்களால் போற்றப்படுகின்றது. இதனை வேறொரு விளக்க இருக்கின்றேன்.

சிவயோகஞானத்தில் இது தொடர்பாக ஓர் அழகியப் பாடல்:

விண்ணொளியில் கதிர்மதிதான் கண்ணேயாகும்
மெய்யதோ பொய்யதோ கண்தான் காணும்
விண்ணொளியில் சூரியன் தான் பகலாய் வந்த
விதமான மதியதுதான் ராவாய் வந்த
கண்ணொளி£யே கண்டதல்லால் வேறொன்றில்லை
கருத்து வைத்தாலுங் கருணைக் கண்ணைக் காணார்
ஒண்ணொளியே வேறுமில்லை கண்ணோவொன்று
ஓகோகோ பொய்யல்ல மெய்யுமாச்சே 10

தன் பொருள் கண்கள் அருட்கண்களாகி விடயங்களை பார்க்கும்போதுதான் பொய்களைக் காணாது மெய்களையே கண்டு இனிதே வாழமுடியும் என்பது. இதுவும் மெய்கண்டார் வற்புறுத்தும் ஒன்றுமாகும். ஆனால் இவர் நவக்கிரகங்களோடு பார்வையியல் கூறுவது வேறு இடத்தில் காண வரா(எனக்குத் தெரிந்தவரை) ஓர் புதுமையாகும்.

வர் கூறும் "உட்கிரக மார்க்கம் " தான் என்ன? ஞான கக்கிஷம் எனும் நூலில் இதைத் தெளிவாகவே விளக்குகின்றார். முதலில் இவர் வாசியோகத்தை Hemisphereic Functioning என்று இன்று வெள்ளையர்களால் போற்றப்படும் அத்துறையோடு ஒத்து வரும் வகையில் கூறும் சில விசயங்களைப் பார்ப்போம்.

கருவான இடகலைதான் சந்திரன் வீடு
கருணையுள்ள வலது கலை சூர்யன் வீடு
உருவாக இருவருமே உகந்து நின்று
உரிமையுடன் சரம் மாறும் உண்மைக் கேளு
திருவான மூலவனல் வாசியேறிச்
சிவசிவா அண்டபதஞ் சுத்திநல்ல
பருவமுடன் இடதுபுற நாசிதன்னில்
பரிகிறது சந்திரக்கலை பரிந்துப்பாரே 43

பாரப்பா வலதுபுர நாசிதன்னில்
பதிவாக ஓடுகிற சரந்தான் மைந்தா
நேரப்பா சூர்யக்கலை என்பார் மேலோர்
நிலையறிந்து இருகலையும் ஒன்றாய்க் கூடி
காரப்பா சுழினையென்ற மையத்தேகிக்
கால்மாறி யாடுகின்ற கருவைக் கேளு
சாரப்பா சந்திரக்கலை தன்னை மைந்தா
சங்கையுடன் சூரியனிற் சாரப்பண்ணே 44.

டதுபுற நாசி வலதுப்பகுதி (Right Hemisphere) மூளையோடும், வலதுபுற நாசி இடப்பகுதி மூளையொடும் (Left Hemisphere)தொடர்புடையது. இடதுபுற நாசி என்றாலும்இடது கலை என்றாலும் ஒன்றே, இது விந்துவின் ஓர் வடிவாகிய சந்திரனின் ஆட்சியில் இருப்பது. இதேப்போன்று இடப்பக்க மூளை நாதத்தின் வடிவாகிய சூரியனின் ஆட்சியில் உள்ளது என்கின்றார். வாசியோகம் செய்து, விந்துவும் நாதமும் இணைந்து மூளையில் செயல்படும்படி செய்தால் அறிவு நன்றாக வளர்வதோடு மனநலம் உடல்நலம் ஆகிய இரண்டையும் பெற்று வாழலாம் என்கின்றார். அதற்குரிய ஓர் சாதனத்தையும் விளக்குகிறார் அடுத்துவரும் பாட்டில்:

பண்ணுவது எந்தவிதம் என்றால் மைந்தா
பதிவான வலதுகால் இடதுகால்மேல்
தண்ணுறவாய்த் தானிருந்து விண்ணைநோக்கச்
சதாபோதை சூரியனே பிரகாசிக்கும்
எண்ணும் அந்தப்படி இருந்து சுழினை மேவி
இன்பமுடன் ஜெபதபங்கள் செய்தாயாகில்
கண்ணும் மனக்கண்ணும் ஒன்றாய்க்கூடி
கயிலாச தேகமதாய் வாழலாமே

நுதல்விழிப் பார்வையும் ஐம்பொறிகளால் வருகின்ற பொறிலியப்பார்வையும் விரோதமில்லாது ஒன்றாகிடும் போது தேகம் சுத்தாமாகி தெய்வீகமான ஓர் உடம்பாய்ச் சுடரும் என்கின்றார்.

இனி பார்வையைப் பற்றி விரிவாகக் விளக்கப் புகுகையில் தனது உட்கிரக மார்க்கத்தை தெளிபடுத்துகின்றார்.

பூசை செய்யும் நவகிரகந் தன்னைக் கேளு
புத்தியுடன் கொங்கணவர் பாதம் போற்றி
நேசமுள்ள சூரியனும் சந்திரன் ரெண்டும்
நேர்மையுள்ள நேத்திரமாய் நின்றுதையா
பாசமுள்ள நேத்திரமாம் பதிவைக் கண்டு
பக்குவமாய்ச் சுழிமுனையிலே பதிவாய்ப் பார்த்தால்
தோசமென்ற சூழ்வினைகள் தானே நீக்கித்
துலங்குமடா கற்பூர தீபந்தானே 48

கிரகங்களாகிய சந்திரனும் சூரியனும் இடது கண் வலது கண் என்றவாறு நிற்கின்றன; அதனால் இவ்விரண்டும் இணைந்து செயல் படும் சுழிமுனை நாடியில் நாட்டத்தை நிறுத்தினால் வரக்கூடிய தோசங்களெல்லாம் விட்டு நீங்கும் என்கின்றார்.
மேலும் இவ்வாறே ஏனைய பொறிகளுக்கும் உரிதாய் ஏனைய கிரகங்களைக் காண்பார்.

உண்மையுள்ள செவ்வாயும் புதனும் ரெண்டு
உற்றகெந்தம் அனுசரிக்கும் மூக்கு மூக்கு 50

முத்தியுள்ள வியாழன் வெள்ளி ரெண்டு
முழங்கி நின்ற ஆகாசங் காது காது 52

பரிபூரண அகத்தியர் என்பார் சனியினை முதுகந்தண்டில் நிற்கும் ஆணவமலம் என்று கூற இவரோ அதை நாவினோடு தொடர்பு படுத்தி அதனின் வாக்கிற்கு உரியதாக்கி அதன் வழி சனி தோசத்தை நீக்குவதற்கு புதியதோர் சாதனத்யும் வழிமொழிகின்றார்.

ஆமப்பா சனியதுவும் வாக்கேயாகும்
அவ்வாக்கில் சரஸ்வதியுங் குடியிருந்தாள்
ஆமப்பா அவள் இருந்த பதியிலேதான்
அருவி சுனை பாய்கிறதோர் நாக்கு நாக்கு
ஆமப்பா அண்ணாக்கு உண்ணாக்கோடே
அப்பனே மனது உறுதியாக நின்று
ஆமப்பா மந்திரங்கள் செபிக்கும்போதில்
அப்பனே சனிதோஷம் விலகிப் போமே 55

வ்வாறு ஐம்பொறிகளுடன் நவகிரகங்களை தொடர்பு படுத்தும் இவர், ராகு கேது என்ற கிரகங்கள் வரும் போது ஞானகற்ப சாதனம் நவின்ற புலத்தியரைச் சார்ந்தே செல்கின்றார்.

பதிவான ராகுவுட கிரகமேது
பாலகனே சொல்லுகிறேன் லிங்கம் லிங்கம்
சேதியான லிங்கமடா பிரமலிங்கம்
கேசரத்தில் பூரணமாம் அமுதலிங்கம்
விதியான விதிவளரும் விந்துலிங்கம்
வேதாந்த அமுதரசம் சொலிக்கும் லிங்கம்
நதியான லிங்கமதில் மனதை நாட்டி
நழுவாமல் மனதிருக்கப் பூசை பண்ணே 57

பாம்பு வடிவத்து ராகு உண்மையில் இலிங்கத்தின் இன்னொரு வடிவமாகும். இதுவே வீரியத்தையும் தருவது, அதன் வழி காம இன்பத்தை நுகர்ந்து குண்டலினி ஈட்டி மகிழ உதவுவது என்கின்றார்.

னி கேதுவைப்பற்றியும் பிறர் சொல்லாவகையில் ஒன்றை சொல்கின்றார். எல்லா ஆதாரச் சக்கரங்களும் தோன்றுதற்கு இடமாகிய மூலாதாரமே அதுவென்கின்றார்.

தானான கேதுவுட கிரகமேது
சங்கையுடன் சொல்லுகிறேன் மூலம் மூலம்
கோனான மூலமடா ஆதாரந்தான்
குருவான அக்னி கொண்டிருந்த வீடு
ஊனான அவ்வீட்டிற் குடிலம்ரெம்ப
உத்தமனே அதையறிந்து மனதை நாட்டித்
தேனான ஓங்காரப் பிரணவத்தைத்
தினந்தோறும் அதில் நிறுத்தி இம்மென்று ஓதே 60

மூலாதாரத் தலமேக் கேது, குடிலமாகிய பலவகைப் பிறப்பெடுத்து வாழ்ந்து கொண்டே இருக்கும்படி செய்து பாச பந்தங்களில் வீழ்த்திக் கொண்டே இருப்பது. அதன் பிடியினின்று விடுபட ஓங்கார மந்திர செபத்தியானமே வழி என்கின்றார்.
ன்னும் எத்தனையோ அற்புதமான விசயங்கள். இவையெல்லாம் ஆழ்நுழைவுத்தேர்வுகள் உறுதி செய்யக் கூடியவையாக தென்படுகின்றன என்று கூறி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

அன்பன் கி.லோகநாதன்


பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 21 ஜனவரி 2013, 10:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,203 முறைகள் அணுகப்பட்டது.