ஸப்த விடங்கத் தலங்கள் 6

மரபு விக்கி இருந்து

Geetha Sambasivam (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:26, 2 டிசம்பர் 2010 அன்றிருந்தவாரான திருத்தம்

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஸப்த விடங்கத் தலங்கள் 6

திருநாகைக்காரோணம்

இறைவர் பெயர் காயாரோகணேஸ்வரர், ஆதிபுராணர்

இறைவி பெயர்- நீலாயதாக்ஷி, கருந்தடக்கண்ணி

தலமரம்- மாமரம்

தீர்த்தம்: தேவ தீர்த்தம், புண்டரீகத் தீர்த்தம்

வழிபட்டோர்: ஆதிசேஷன், முருகன், அம்பிகை, அகத்தியர், புண்டரீக முனிவர், விசித்திரகவசன், அரசகேசரி, முசுகுந்த சக்கரவர்த்தி, வசிஷ்டர், திருமால், பாற்கரன், பத்திரசேனன், விரூரகன், மித்திரன், சண்ட தருமன், காளகண்டன் முதலியோர்

தேவாரப் பாடல்கள்: சம்பந்தர்

1.புன்னையும் விரிகொன்றை 1/84
2.கூனல் திங்கட்குறுங்கண்ணி 2/116

அப்பர்: மனைவி தாய் தந்தை 4/71
வடிவுடை மாமலை 4/103
பாணத்தால் மதில் 5/83
பாரார் பரவும் 6/22

சுந்தரர்:
1. பத்தூர்க் கிரந்துண்டு...... 7/


சிறப்புகள்:

இது ஆதிசேஷனால் பூஜிக்கப் பெற்றதால் நாகை எனப் பெயர் பெற்றது.

அறுபத்து நான்கு சக்திபீடங்களில் ஒன்று,.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மீனவர் குலத்தில் உதித்த அதிபத்த நாயன்மாரின் அவதாரத் திருத்தலம்.

புண்டரீக முனிவர் இறைவரைத் தனது தேகத்தில் ஆரோகரணம் செய்து கொண்டமையால் காயாரோகணம் என்று பெயர் பெற்றது. இது மருவிக் காரோணம் என்றாயிற்று.

காரோணம் என்ற பெயருடைய திருக்கோயில்கள் மூன்று.

அவை யாவன, (1) கச்சிக்காரோணம், (2) குடந்தைக் காரோணம், (3) நாகைக்காரோணம்.

ஆதிபுராணம் முதலிய அரவநகரம்-பார்ப்பதீச்சரம்-சிவராசதானி. பெயர்களாலும் இத்தலம் விளங்கியுள்ளது என்று தலபுராணம் கூறுகிறது.

அகத்தியருக்குத் திருமணக் காட்சி நல்கிய தலம்.




பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=ஸப்த_விடங்கத்_தலங்கள்_6&oldid=3717" இருந்து மீள்விக்கப்பட்டது