Deluge in Sumerian(Tamil)

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 


சுமேருத் தமிழில் பிரளயம்.

Dr K.Loganathan, 2003

அன்பர்களே! உலக சமயங்கள் பெரும்பாலானவற்றில் பிரளயத்தைப் பற்றிய கருத்துக்கள் ஊடுறுவி நிற்கின்றன. "பிரள்-அயம்' என்றாலே 'வெள்ளப்பெருக்கு" என்றுதான் பொருள்படும் என்று நினைக்கின்றேன். இதுவும் சுமேருப் பண்பாட்டிலிருந்து உலகெலாம் பரவிய ஓர் கருத்தாகத் தோன்றுகிறது. கீழே அதனைப் பற்றிய சுமேருத் தமிழ் ஒன்றைத் தருகின்றேன். இது C.J. Gadd என்பாரால் 1924ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஓர் நூலிருந்து (A Sumerian Reading Book) எடுத்து தமிழ் விளக்கக் குறிப்புக்களோடு இங்கு தருகின்றேன். மூலத்தில் கோலெழுத்துப் படிவமும் உண்டு.

இது மிகப் பழமையான ஒன்று. இதன் கரு கி.மு. 3000ற்கு முற்பட்டதாகக் கொள்ளலாம்

டாக்டர் கண்ணன், திரு நாசிர் திரு குமார் திரு பாலாப் பிள்ளை போன்ற அன்பர்களின் ஆய்விற்கு இது பயன்படும் என்ற நோக்கொடு இதனை இன்று மின்பதிப்பாக்குகின்றேன்.இன்னும் பல தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும்

குறிப்பு: இங்கு பயிலும் எழுத்துப்பெயர்ப்பு சற்று பழமையானது. ஆனால் அதனையே பின்பற்றி எந்தவொரு மாற்றமும் இல்லாது தருகின்றேன். மாற்றங்களைப் பற்றிய விவரங்கள் குறிப்பில்

உலகன்


The Deluge

1. u(d)-ba( At that time) zi-u(d)-sud-du (Ziusuddu) lugal-am( being king) AN.SAG-gu(r)-gur ( a mighty ....)

உதிஅப்ப ஜீவசூத்ரன் உளுகள் ஆம் கோரகோர


2. mu-un-di(m)-dim (made) ......nam-bur-na (in humility) ka-si-si-gi (abasing (himself)

முன் இடும் இடும் ............நாஅம் பூர்ண கா சீசிங்கி

3. ni-te-ga .....( reverent [he was] .......u(d)-su-es-e .(The evening) sag-us (slowly) gub-ba(settling down)

நோய் தேக உதி சூன் யிசே சன்னிஸ் குப்ப

4. ......... ma-mu-nu-me-a ( a dream that was not) e-de (coming forth) gu-[mu-un-de].... (spo[ke to him]........

மம்மு நா மெய்ய ஏத்தே கூவ் முந்தே

5. mu-an-ki-bi-ta (the name of heaven and earth) pa(d)-pad-de... (invoking)

மோ வான்கீழ்பித்த பாடுபாடே

6. ki-ur-su (For the city) dingir-ri-e-ne (the gods) gis-sig ............( a brick wall? [had made]

கீழ் ஊருச்சு திங்கிரியினே கிஸ் செங்கி

7. zi-u-sud-du (Ziusuddu) da-bi (by its side) gub-ba(standing) ---------[heard this:---] gis-zi-da (Byt he wall)

ஜீவசூத்ர இடைபி குப்ப கிஸ்சித்த

8. a-gub-bu-mu (at my left side) gub-ba (stand) .............. gis-zi-da (by the wall)

ஆல் குப்பு மோ குப்ப கிஸ்சித்த

9. dug (a word) ga-ra-ab-du(g)-dug (will I speak to thee) ........... na-ri-ga-mu (My pure one)

தூக்கு ஙான்ற அவ் தூக்தூக்கு நெறி ஙான் மோ

10. gestu-[tuk-a-mu] ( my wise one) su-me-a (by our hand) a-ma-ru .............

கெஸ்த்து தொகுவ மோ சூ மேய அமரு

11. numun-nam-galu ( the seed of mankind) ha-lam-e-de (to destroy)............. di-til-la ( is the judgement)

நுன்முன் காலுநம் அல்லமிடே விதிதீர்வ

12. dug-pu-uh-ru-[um-dingir-ri-e-ne-ka] (the word of the assembly [of the gods]

தூக்கு பொரூஉம் திங்கிரிஇனேயகம்


குறிப்பு

1. u(d)> உதி, உடு> உண்டு; "ஊ" :உயர்தல் எனும் வேர்சொல்லிருந்து பிறந்துள்ளது. ba> அப்ப: அகரச் சுட்டு வெளிபடாது இருக்கின்றது' ziu-sud-du> ziu-sud-ra> ஜீவ சூத்திரன் : நீண்ட ஆயுளை உடையவன்; நெடுங்காலம் வாழ்பவன். இப்பெயரே அக்காடிய மொழியில் 'napistu" என்று மொழிபெயர்க்கப்பட்டு முடிவில் 'நோவா' ' என்றும் நூஹ்' என்றும் ஆகிவிட்டது. இசுலாமியர் இவனை ஓர் நபியாயும் ஆக்கிவிட்டனர்.

2. nam-bur-na> நாஅம் பூர்ண> பூர்ணநம்? : முடிப்பது? ka-si-si-gi> கசி சிங்கி: கசிந்த இளகிய மனத்தோடு?

3. ni-te-ga> நோய் தேக" உடம்பில் அச்சத்தோடு? u(d)-su-us-e> உதி சூனுச்சே : உதியனாகிய சூரியன் சூனியமாகுதல், இல்லாதுபோதல்? sag-us> சன்னிஸ்: சன்னஞ் சன்னமாக; gub-ba> குப்பு : கூடுதல்

4. ma-mu> மம்மர்> மப்பு : மயக்க நிலை: இங்கு கனவு நிலை; ma-mu-nu-me-a> மம்முனே மெய்ய: "கனவில் மெய்யாக " என்று கொள்வதே பொருந்துவது; gu-mu-un-de> கூவ் முந்தே: கூவு முந்துதல்: ஓர் அழைப்பு வெளிப்படுவது


5. mu> மோ : இங்கு பெயர்; காண்க "பேர்": ஒருவன் என்பதோடு ' பெயர்" என்றும் பொருள் படுகின்றது. mu-an-ki-bi-ta> மோ வான் கீழ்பித்த: விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ; pad-pad-de> பாடுபாடே: இங்கு அனைவரையும் கூவி அழைத்தல்

6. dingir> dim-me-er> Ak. diwer> தெய்வர், தேவர். e-ne> இஇனம்: கூட்டம்; gis-sig> கிஸ் சிங்கி> கிஸ் செங்கல்

7. da-bi> இடபி : அவன் இடப்பக்கம்?

8. a-gub-bu-mu> ஆல் குப்புமோ; ஆல்> வலப்பக்கம்?

9. dug> தூக்கு, தூங்கு: இசைத்தல்; na-ri> நெறி: நன்நெறி?

10. gestu> அகஸ்த்து> அகத்தியம்: அறிவு, ஞானம்; gestu-tuk-a> அகஸ்த்து தகு? அகஸ்த்து தொகு? a-ma-ru> அமரு: இங்கு பெரு வெள்ளம்

11. numun> நுன்முன்: மேலே வந்து முன்னுவது, முளைப்பது? nam-galu> காலுநம், ஞாலுநம் : கால் யாத்து நிற்பது;
ha-lam-e-de> அல்லமிடே" இல்லாதாக்கல்; di-til-la> விதி தீர: முடிவான தீர்ப்பு; விதி தீர்ப்பு

12. dug-pu-uh-ru-um> தூக்கு பொரூஉம்: கலந்துரையாடும் இடம்; அவை

13. du(g)-dug-ga an [en-lil-la] ..........(the command of Anu and Enlil ..........)

தூக்தூக்க ஆண் ஏண்லீல்ல..............

14. im-hul-im-hul (the storm winds) ni-gu(r)-gur-gal (with exceeding terror) du-a-bi (all of them)

இயம் ஒல் இயம் ஒல் நோய் கோர்கோர கால் எடுவபி

15. ur-bi ( together) i-sug-gi-es (raced along) a-ma-ru (the deluge) u-ka-kab-dug-ga( the mighty tempest?)

ஓர்பி ஈ சுங்கிசே அமரு ஒக்கல் கவ்வு துக்கம்

16. ba-na-da-ab-ur-ur (raged with them) ud-imin-am (when it was seven days) gig-imin-am (and seven nights)

பண்ணிடு அவ் உர் உர் உவா இமின் ஆம் மை இமின் ஆம்

17. a-ma-ru (that the deluge) kalam-ma (in the land) ba-ur-ra-ta (had raged) ma-gu(r)-gur( and the mighty ship

அமரு களம்ம பா உற்றத மா- கூர்-கூரை

18. a-gal-la(over the great waters) im-hul (the storm-wind) bu(l)-bul-a-ta, utu(( then ) the sun)

ஆல் கள்ள இயம் ஒல் புல்புல்லுத உது
19. i-im-ma-ra-e (rose over it) an-ki-a (in heaven and earth) ud ga-ga (making light)

ஈ இம்ம ராவே வான்கீழ்அ உதி கால் கால்

20. zi-u(d)-sud-du (Ziasuddu) ma-gu(r)-gur (in the mighty ship) ka-bur (an opening) mu-un-da-bur(bored)

ஜீவசூத்திரன் மா-கூர்-கூர் வாய்புரை முந்த பூர்

21. sul (the strong one) utu ( the sun) gis-sir-ni (his light) sag-ma-gu(r)-gur-su (into the mighty ship)

சூல் உது கீஸ் சூர்நி சான் மா-கூர்கூர்ச்சு

22. ba-un-tu-ri-en (sent in) zi-u(d)-sud-du( Ziu-suddu) lugal-am (being king)

பா உந்து எரியென் ஜீவசூத்திரன் உளுகள் ஆம்

23. igi-utu-su (before the sun) ka-ki-su-ub-ba-tum( kissed the earth) lugal-e( the king)

இஙி உதுச்சே கா கீழ் சப்புதம் உளுகள்ளே

24. gud (oxen) im-ma-ab-gaz-e (sacrificed) udu (sheep) im-ma-ab-sar-ri

கோடு இம்ம அப் கசியே உடு இம்ம அப் சேரே


குறிப்பு


13. an> ஆண்; ஆண்டகை, எல்லா தெய்வங்களிலும் உயர்ந்த தெய்வம். en-lil> ஏன்லீல் : காற்றின் தெய்வம்: வாலியோன்?

14. im-hul > இயம் ஒல்? 'im' என்பதின் பொருள் முற்றாக விளங்கவில்லை. பிற இடங்களில் 'மண்' என்றும் வருகின்றது. ni> நோய், அச்சம் பயம் du-a-bi> எடுவபி: இங்கு "தோன்றின" என்ற பொருளே செவ்விதாகப் படுகின்றது.

15. ur-bi> ஓர்பி: ஒன்றுபட்டு; sug-gi-es> seg-ge-es> சூங்கி, செங்கி> கெங்கி> கங்கை: வேகமாக ஒடும் வெள்ளம்;

u-ka-kab-dug-ga> ஒக்கல் கவ்வு துக்கம்: "மக்களை துக்கம் கவ்வியது" என்று கொள்தலே பொருந்துவது

16. ba-an-da-ab-ur-ur> பண்ணிடு அவ் உர் உர்: இங்கு பண்ணிடு என்பது துணை வினை; அவ்: அது என்னும் சுட்டு; உர் உர்: உரறு என்னும் சூறாவளி காற்றின் ஓலம்; ud> உதி: இங்கு வெளிச்சம் ; gi(g)= mi> மை: இருள்; 'இமின்' இறந்துவிட்ட ஓர் சொல்.

17 ma-gur> மா கூர்: மா> மரம்: இங்கு மரத்தால் ஆகிய படகு; மா கூர்> கூரை உடைய படகு? மாகூர்கூர்> பல கூரைகள் உடைய படகு, பெருங்கப்பல்? கூரை: சேலை என்றும் படும்

18. a-gal-la> ஆல் கள்ள: பெரும் வெள்ளம்; bul-bul-a-ta>புல்புல்லுத: பெரும் வெள்ளம் சூறாவளிக் காற்றொடு புல்லி, அதாவது இணைந்து

19. i-im-ma-ra-e> ஈ இம்ம ராவே: 'ரா'> வருதல், எழுதல்; இம்ம: உடன்

20. ka-bur> வாய் புரை> புரை வாய்

21. sul utu> சூர் உது: சுடரும் ஆதவன்; gis-sir-ni> கீஸு சூர்நீ: கிஸு> நீண்ட; சூர்: சுடர் கதிர்கள்

22. ba-un-tu-ri-en> (அ) ப உந்தி எரியென்: உட்புகுந்து எரி தரல்?

23. igi-utu-su> இமை உதுச்சே : ஆதவன் கண் முன்னே; ka-ki-su-ub-ba-tum> வாய் (கொண்டு) கீழ் சப்புதம் ; தரையை வாய்கொண்டு முத்தமிடல்

24. gaz-e> கசியே, கழியே: கசித்தல்: கொல்லல்? காண்க 'கசை அடி" "கசக்கு" போன்ற சொற்களை. sar-ri> சேரே: கூட்டுவித்தல்

இதனோடு இந்த ஏடு முடிகின்றது. ஆய்வுரை தொடரும்.


அன்பர்களே,

இந்த இலக்கியம் மிகப் பழைமையானது, இதன் காலம் ஏறக்குறைய கி.மு 2500-கி.மு. 3000 என்று கொள்ளலாம். ஆயினும் இதன் உட்கரு இன்னும் பழைமையானதாக இருக்கலாம். இந்த பிரளயக் கதை உலக சமயங்கள் அனைத்திலும் ஓர் வலுவான இடத்தை பிடித்துகொண்டிருக்கிறது. ஏன் இப்படி என்பதை இனியே ஆராய்ந்து பார்க்க வேண்டும். இந்த ஏடு ஏன் இந்த பிரளயம் என்ற கேள்வியையும் உள்ளடக்கி அதற்கு ஓர் விளக்கத்தையும் கொண்டுள்ளதாகத் திகழ்கிறது. அதுவே தெய்வங்களின் முடிவு என்ற வகையில் மனுக்குலத்தை அழிக்க எழுந்தது என்பதோடு அதன் விளக்கம் முடிகிறதையும் காண்கின்றோம்.

மேலும் இன்னும் பல விசயங்களை தெளியும் பொருட்டு மொழிபெயர்ப்பாளர் செய்துள்ள சில பிழைகளையும் நீக்கி கதையின் கருவினை மீண்டும் பார்ப்போம்.

பண்டொரு காலத்தில் (உதி அப்ப) ஜீவசூத்திரன் எனும் ஓர் அரசன் ( உளுகள் ஆம்) ஓர் பெரிய கோயில் (?) ஒன்றை எழுப்பினான் ( முன் எடும் எடும்மே) . பெரும் அடக்கத்துடன் இறைவனை போற்றியவாறும் ( கா(=வாய்) சீர் சீங்கி) இறையச்சத்துடனும் ( நோய் தேக) அதனை முடிக்க (நாஅம் பூர்ண) முயன்றான் . அது பொழுது மாலைப் பொழுது வந்தமைய ஓர் கனவு அவனுக்கு வந்து எதிர்காலத்தில் நடக்க விருக்கும் ஒன்றை அவனுக்கு தெரிவித்தது ( மம்மர் நீ மெய்ய ஏயிடே, கூவ் முன் இடே). அவன் எழுப்பிக் கொண்டிருக்கும் கோயில் செங்கல் சுவர் ஓரம் அவன் நின்றுகொண்டிருக்க அவனுக்கு தெய்வங்கள் தோன்றி இதனை உரைத்தன ( தூக்கு ஙான்ற அவ் தூதூக்கு). " ஞானம் உள்ளவனே! ( கெஸ்த்து தொகு மோ) , இந்த மக்கள் சமுதாயத்தின் மூல வித்துக்களை அழித்து இல்லாது போக்க நாங்கள் ஓர் பெரும் பிரளயத்தை உண்டாக்க இருக்கின்றோம்( அமரு நுன்முள் நாஅம்கால்லு அல்லம்மிடே ) எல்லா தேவர்களும் பொது மன்றில் ஒன்று கூடிப்பேசி ஆண், ஏண்லில் தலைமையில் இந்த முடிவிற்கு வந்துள்ளோம்( விதி தீர்ர திங்கிர் இனம் தூக்கு பொரூஉம் அகம்)

அதன் பின் நாட்டில் அவ்வாறே பெரும் புயல் சூறாவளிக் காற்றோடு அடிக்கத் தொடங்கியது. காற்றும் மழையும் இணைந்து கடுஞ் சீற்றதோடு எழுந்து இந்த அழிவினை மேற்கொண்டன, மக்கள் உள்ளத்தை பெரும் துக்கங்கள் கவ்வின. ( ஓர்பி ஈ செங்கீசு அமரு , ஒக்கல் கவ்வு துக்கம்)

ஜீவ சூத்திரன் ஓர் பற்கூரை கப்பலில் கடலில் ஆடு மாடுகளோடும் பல மக்களோடும் பயணம் செய்து தெய்வங்களின் உதவியால் தப்பிக்க முயன்றான். ஏழு நாட்களும் ஏழு இரவுகளுமாக இந்தப் புயல் கடுஞ் சீற்றத்தோடு தொடர்ந்தது. ( அமரு களம் பா உற்றத). கடலில் அந்த கப்பலும் அலைகளால் தாக்குண்டு தூக்கித் தூக்கி வீசப்பட்டது ( மா கூரை கூரை ஆல் கள்ள இயம் ஒல் புல்புல்லுத) அதன் பின் புயலும் தணிய மழையும் நிற்க, ஆதவன் தோன்றினான், மண்ணிலும் விண்ணிலும் ஒளிக் கதிர்களைப் பாய்ச்சினான். ( உது ஈ இம்ம ராவே, வான் கீழ உதி கால் கால்). இதை உணர்ந்து ஜீவசூத்திரன் கப்பலின் கூரையில் ஓர் புரை, துளை யிட்டு சூரியக் கதிர்கள் கப்பலில் உள்ளே பாயுமாறு செய்தான். ஒருவாறு புயல் அடங்க கப்பலும் தரைதட்ட, ஜீவ சூத்திரன் தன் மக்களோடு இறங்கி வந்து , ஓர் அரசனாதலின் தரையை முத்தமிட்டு ஆடு மாடுகளை வெளியே விட்டு அவை பல்கி வளரும்படி செய்தான் ( இமை உதிசே வாய் கீழ் சப்புதும், கோடு இம்ம அப் கசியே, உடு இம்ம அப் சேரே)

இதுதான் கதை . இதில் விளங்கும் சில வரலாற்றுக் குறிப்புகளை இனி காண்பம்.

1. கப்பல் தொழில் நுட்பம்


ஓட்டை போட்டே ஒளி பாய்ச்சினான் என்று வர இந்தக் கப்பல் காப்பந்து (நன்றி திரு ஆம்ப்ரோஸ் : காப்பந்து ; காற்றடைத்த பலூன்) போன்று ஆனால் கணத்தின் காரணமாக நீரில் மிதக்கும் ஒன்றாக விளங்கி இருக்கின்றது. முற்றிலும் காற்றும் நீரும் உட்புகா வகையில் யாதோவோர் பொருளைக் கொண்டு கூரை வேயப்பட, கடுஞ் சீற்றத்தின் புயலின் போது கூட, நீரில் மூழ்காது இருந்திருக்கின்றது. 100 அடிகளுக்கு மேற்சென்றுள்ள ஓர் பெருங்கப்பலாக இருந்திருக்க வேண்டும். இல்லையெனில் ஆடு மாடுகளையும் மக்கள் பலரையும் உள்ளே அடைத்திருக்க முடியாது.

2. ஏன் இப்படிப்பட்ட கப்பல்?


பெரும்வெள்ளத்திருந்து அது எட்டாத மலைபக்கங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் தான் இப்படி காப்பந்து கப்பல்கள் வழி தப்பிக்கும் உபாயம் தோன்றும். ஆக இந்த வெள்ளப் பெருக்கு சாதாரண ஒன்றாக இருந்திருக்க முடியாது. நாட்டின் குன்றுகளையும் அழித்த மிகக் கொடுரமான ஒன்றாக இருந்திருக்க வேண்டும், தப்பித்தவர்கள் ஒரு சிலரேயாகவும் இருந்திருக்கவேண்டும்.

3. பொருதும் மன்று


தெய்வங்கள் ஒன்றாகக் கூடி 'தூக்கு பொரூஉம் அகம்" ஆண் ஏண்லில் ஆகிய பெருந்தெய்வங்களின் தலைமையில் ஒன்றாகக் கலந்து பேசி ஓர் முடிவிற்கு வந்தன என்றும் குறிப்பு ஓர் நுதிப்பாகப் (projection) சமுதாயத்தில் விளங்கிய ஒன்றையே தெய்வங்கள் மேல் ஏற்றிக் கூறப்படுவதைக் காண்கிறோம். ஆக அக்காலத்தில் இப்பொழுது நிலவும் ஊர் பொது மன்றங்கள் போன்று இருந்ததையும் மக்கள் ஒன்றாகக் கூடி கலந்து பேசி ஓர் முடிவிற்கு வந்தனர் என்பதையும் அப்படிப்பட்ட 'பொரூஉம் அகங்களுக்கு" தலைவர்களாக சிலர் இருந்தனர் என்பதையும் நாம் அறியவருகின்றோம்.

4. கனவின் வழி முன்னறிவிப்பு


உண்மையான அன்போடும் இறையச்சதோடும் தெய்வத்திற்கு கோயில் எழுப்பிக் கொண்டிருக்கும்போது, ஜீவ சூத்திரனின் அகச் சுத்தத்தைக் கண்டு தெய்வங்கள் வரப்போவதை அவனுக்கு முன்னமேயே உணர்த்தி தக்க ஏற்பாடுகளைச் செய்து அழிவிலிருந்து தப்பிக்க வழி காட்டியுள்ளன தெய்வங்கள். கனவின் வழி இவ்வாறான முன்னுணர்வு பெறுதலை சுமேரு இலக்கியங்களில் மிக பரவலாகக் காணலாம். இதுவே செமித்திய சமயங்கள் போற்றும் 'prophesy" ஆகும் என்றும் சித்தர்கள் போற்றும் ஆரூடக் கலை என்றும் தெரிகின்றது.

5. நூஹ் நபியின் ஆகமீயமும் பல தெய்வ வழிபாடும்


இக்கதை செமித்திய சமயங்கள் அனைத்திலும் சில திரிபுகளோடு ஊடுறுவி நிற்கின்றன. "ஜிவ சூத்திரன்" எனும் இப்பெயரே 'நாபிஸ்த்து" என்று அக்காடிய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டு பிறகு 'நோவா' என்றும் 'நூஹ்' என்றும் குறிக்கப்பட்டது என்றும் அறிகின்றோம். ஆக நூஹ் நபி என்பார் தமிழர் என்பதோடு ஆகமீயர் என்பதும் ஆண்"டவன்" ஏண்லீலாகிய வாலியோன்(?) ஆகிய தெய்வங்களை வழிபட்டவன் என்பதொடு இன்றைய ஆகிமீயர்களைப் போல தெய்வங்களுக்கு கோயில் எழுப்பியவனும் அதனால் தெய்வங்களின் அருளிற்கு பாத்திரமானவனும் ஆகின்றான்.

அன்பர்களின் சிந்தனைக்கு இவை எல்லாம்.


முற்றும்


பங்களிப்பாளர்கள்

Ulagankmy

"https://marabuwiki.org/index.php?title=Deluge_in_Sumerian(Tamil)&oldid=11787" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 29 அக்டோபர் 2012, 02:44 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,797 முறைகள் அணுகப்பட்டது.