ஹோட்டல் சாம்பார் செய்முறை

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
நான்கு பேர்களுக்கான அளவு:


துவரம் பருப்பு – 1 கப் = ஒரு கப்  
வெங்காயம் – 1 = பெரிய வெங்காயம் அல்லது  சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி  
தக்காளி – 1 = ஒரு நடுத்தர அளவுத் தக்காளி
உப்பு – தேவையான அளவு  = உப்புப் போட்டு வேக வைக்க வேண்டாம், , பின்னர் சேர்க்கலாம்.

அரைக்க வேண்டியவை :

தக்காளி – 1   
பொட்டுகடலை – 1 மேஜை கரண்டி அல்லது  இரண்டு டீஸ்பூன் தான்.  ரொம்பப் போட்டால் சாம்பார் ரொம்ப கெட்டியா இருக்கும்.  சாம்பார் கெட்டியா இருந்தால் நல்லா இருக்காது..
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி    
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி அல்லது , அதுக்குப் பதிலா 2 டீஸ்பூன் சாம்பார் பொடி 
சாம்பார்ப்பொடி போட்டால் தனியாப் பொடி தனியாகச் சேர்க்க வேண்டாம்.
தனியா தூள் – 1 தே.கரண்டி  
தேங்காய்த் துருவல் – 2 தே.கரண்டி = இது சரி. 2 டீஸ்பூன் தான் போட்டேன்.
வெங்காயம்= பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்  


கடைசியில் தாளித்துச் சேர்க்க : 

எண்ணெய் – 2 தே.கரண்டி =  ஒரு டீஸ்பூன் போதும். :)
கடுகு – 1/4 தே.கரண்டி   
வெந்தயம் – 1/4 தே.கரண்டி 
சீரகம் – 1/2 தே.கரண்டி * விரும்பினால்
உளுத்தம் பருப்பு – 1 தே.கரண்டி விரும்பினால்
வெங்காயம் – 1  =  . சின்னதா ஒரு வெங்காயத்தை பொடிப் பொடியாக நறுக்கிக் கொண்டு  தாளிப்பில் சேர்க்கவும்
கருவேப்பில்லை – 4 இலை  = போட்டேன்.   .
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2=  , ஒரு வத்தல் மிளகாய்

கடைசியில் தூவ :  பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1/4 கப் = போட்டேன்.


 பச்சை வெங்காயத்தை வேக விட்டால் அதிலே வரும் வாசனை அவ்வளவா நல்லா இருக்காது என்பதால் சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி உரித்துக் கொண்டு அவற்றை நன்கு வதக்கவும்.  பருப்பு, ஒரு தக்காளியோடு வதக்கிய சின்ன வெங்காயத்தையும் சேர்த்துக் குக்கரில் வேக வைக்கவும்..  இதையே பருப்பை நேரடியாக ஒரு அடிகனமான பாத்திரத்தில் வேக வைத்துக் கொண்டு, வெங்காயத்தை வதக்கிச் சேர்த்துத் தக்காளியையும் போட்டு வேக வைத்தால் இன்னும் நன்றாக வரும்.  

அரைக்க வேண்டியவற்றோடு  அதற்குச்  சொன்ன பொருட்களோடு கொஞ்சம் பச்சை வெங்காயமும் சேர்த்து அரைக்கவும்.  குக்கரின் பருப்புக் கலவையோடு சேர்த்து இப்போது உப்பும் சேர்த்துக் கொதிக்க விடவும்.  இதுவே கெட்டியாகத் தோன்றினால்.  கொஞ்சம் தண்ணீர் சேர்த்துத் தளர்த்தவும்.   பின்னர் தாளிக்கும் பொருட்களைப் போட்டு நன்கு வெங்காயத்தை வதக்கிச் சேர்க்கவும்.

உங்கள் இட்லி, மசால் தோசை, அடை, தோசை போன்றவற்றிற்குச் சரியான துணை இந்த சாம்பார்!

--Geetha Sambasivam (பேச்சு) 12:04, 30 செப்டெம்பர் 2015 (GMT).

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 30 செப்டெம்பர் 2015, 12:04 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 10,455 முறைகள் அணுகப்பட்டது.