ஹூஸ்டன் மீனாக்ஷியை தரிசிக்க வாருங்கள்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
Houston pillaiyar.JPG
ஹூஸ்டனில் கோயில் கட்டுவதற்கான நிர்வாகக் கமிட்டி 1977-ல் ஆரம்பிக்கப்பட்டது கமிட்டி. நிலம் வாங்கப் பட்டது 1978 ஆம் ஆண்டு. முதலில் பிள்ளையார் கோயில் சிறியதாய்க் கட்டினார்கள். 1979ஆம் ஆண்டு பிள்ளையார் சதுர்த்தி அன்று இது தரிசனத்திற்குத்திறக்கப்பட்டது. ஹூஸ்டனில் வசிக்கும் குடும்பத்தினரே தினசரி வழிபாட்டைச் செய்து வந்தனர். ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் இருந்த பேராசிரியர் ரஞ்சித் பானர்ஜியால் இப்போதைய முக்கியக் கோயிலுக்கான திட்டம் போடப்பட்டது. அதைப் பின்னர் திருத்தி அமைத்து மேலும் கொஞ்சம் நிலம் வாங்கப்பட்டு, முக்கியக் கோயிலுக்கு வெளிப்பிரகாரம், அர்ச்சகர்கள் தங்க வீடுகள், கல்யாண மண்டபம், இளைஞர்களுக்கான அரங்கம், விருந்தாளிகள் அரங்கம்போன்றவை கட்டப்பட்டது.
திரு கணபதி ஸ்தபதியால் திட்டமிடப்பட்ட இந்தக் கோயில் பின்னர் முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையோடு கட்டப்பட்டது. திரு அஷோக் முங்காரா என்னும் கட்டிடக் கலை நிபுணர் இதை நன்கு திட்டமிட்டு நிறைவேற்றத் துணை செய்தார். கிட்டத்தட்ட 20 சிற்பிகள் முத்தையா ஸ்தபதி தலைமையில் தமிழ்நாட்டிலிருந்து வந்து கோயிலைக் கட்டினார்கள்.
கீழே மீனாக்ஷி உற்சவக் கோலத்தில் அலங்காரத்துடன் காட்சி தருகிறாள்
Meenakshi.JPG

Sundaresan.JPG




மஹாகும்பாபிஷேஹம் 1982-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது.
ஆகம முறைப்படி யந்திரங்கள் பதிக்கப்பட்டு மீனாக்ஷி அம்மன் சிலை, சுந்தரேஸ்வரர், பெருமாள் போன்றவர் நிர்மாணிக்கப்பட்டனர். நந்தி சுந்தரேசருக்கு நேரே காட்சி அளிக்கும்படி அமைக்கப்பட்டிருக்கிறார். கருடனும் அதேபோல் வெங்கடேஸ்வரர் சந்நிதிக்கு எதிரே காணப்படுவார். ஶ்ரீ எனப்படும் மஹாலக்ஷ்மி பத்மாவதித்தாயார் என்னும் பெயரில் இங்கு பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறாள்.

Koil.JPG

பனிரண்டு வருடங்களுக்குப் பின்னர், 1994 ஜூனில் மீண்டும் அஷ்டபந்தனம் செலுத்தப்பட்டது.. கிழக்கு கோபுரம் ராஜ கோபுரமாகவும் மற்ற மூன்று கோபுரங்களும், நான்கு பக்கமும் பிரகாரங்களும் கட்டப்பட்டு அவற்றில் கோஷ்ட மூர்த்திகளின் பிரதிஷ்டையும் நடைபெற்றது. மஹாகணபதி, ஐயப்பன், சுப்ரமணிய சுவாமி வள்ளிதேவசேனாவுடன், ராமர், சீதை, லக்ஷ்மணன், ஆஞ்சநேயர், ராதா,கிருஷ்ணர், நடராஜர், சிவகாமி, துர்கை, ஜோதி, கன்யாபரமேஸ்வரி, நவகிரஹம், பைரவர், போன்றவர்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறார்கள்.


Iyappanh.JPG
Muruganh.JPG





இந்த வேலைகளெல்லாம் முடிக்கப்பட்டு, 1995-ஆம் வருஷம் மஹாகும்பாபிஷேஹம் நடைபெற்றது. 1998-ஆம் ஆண்டு கல்யாண மண்டபம் கட்டப்பட்டது. அதன் பின்னர் மீனாக்ஷி கோயில் கமிட்டியால் இளைஞர் அரங்கமும், அதை ஒட்டிய சமையலறையும், நூலகமும் ஏற்படுத்தப்பட்டது. 2009ஆம் ஆண்டு விருந்தாளிகளுக்கான அரங்கம் கட்டி முடிக்கப்பட்டு அதில் நூலகம், பரிசுப்பொருட்கள் விற்கும் கடைகள், கோயிலின் புராதன வேலைப்பாடுகள், தியான மண்டபம், ரதமண்டபம் ஆகியன உள்ளன. வெள்ளி ரதம் புதிதாய்ச் செய்யப்பட்டு முக்கிய இந்து பண்டிகை தினங்களில் கோயிலைச் சுற்றி வீதிவலம் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
Ramarh.JPG

ஒவ்வொரு வருடமும் தீபாவளி தினத்தன்று தீபாவளி பஜார் என்ற பெயரில் துணிக் கடைகள், சாப்பாட்டுக் கடைகள், நகைக்கடைகள் என நடத்தி வருகின்றனர்.
Hanuman.JPG
ஒவ்வொரு ஸ்வாமிக்கும் உற்சவர்களுக்குச்சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அவர்கள் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் தரிசனம் கொடுப்பார்கள். கலைநிகழ்ச்சிகள் நடக்கும். அனைவரின் சார்பிலும் அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் பட்டாசுகள் வெடிக்கப்படும். அதன் பின்னர் வெள்ளி ரதம் இழுத்துவரப்பட்டு நிலைக்கு வந்ததும் நிகழ்ச்சி முடிவடையும். உற்சவர்களை அலங்கரித்துக் கோயிலின் வெளியே அனைவரும் பார்க்கும் வண்ணம் பந்தல் போட்டு வைக்கின்றனர்.





Ratham.JPG

பக்தர்கள் இழுக்கத்தயாராக அலங்கரிக்கப் பட்டிருக்கும் வெள்ளி ரதம், மேலே காணலாம்

--Geetha Sambasivam 22:35, 19 நவம்பர் 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2011, 21:32 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 679 முறைகள் அணுகப்பட்டது.