ஸ்ரீ நிவாசன் திருக்கோவில் - தூத்துக்குடிமரபு விக்கி இருந்துஅருள்மிகு ஸ்ரீ நிவாசன் திருக்கோவில்
மூலவர் : ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.
மங்களாசாஸனம் நம்மாழ்வார் துவளில் மாமணிமாட மோங்குந் தொலைவில்லி மங்கலம் தொழும்
தல சிறப்பு: இத்தலத்தில் பெருமாள் குப்த விமானத்தில் கீழ் அருள்பாலிக்கிறார்.
தலபெருமை: இவற்றை தரிசிக்க ஒவ்வொரு ஊருக்கும் பஸ் ஏறிச் சென்று வருவது சிரமம். நாள் பிடிக்கும். அதைவிட கார் ஒன்று அமர்த்தி சென்று வந்தால் ஒரே நாளில் அனைத்துத் தலங்களையும் தரிசித்து விடலாம். சென்னையில் இருப்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து தருகிறது. மாதம் இருமுறை சென்னையிலிருந்து நடத்தப்படும் இச்சுற்றுலா முதல் மற்றும் மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் புறப்படுகிறது. புதன் விடிகாலையில் திரும்பிவிடலாம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ சேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. ஒன்பது திருப்பதிகளிலும் உள்ள பெருமாளே நவகிரகங்களாகக் கருதப்பட்டு வழிபடப்படுகிறது. அதன்படி 1. சூரியன் : ஸ்ரீவைகுண்டம் 2. சந்திரன் : வரகுணமங்கை (நத்தம்) 3. செவ்வாய் : திருக்கோளுர் 4. புதன் : திருப்புளியங்குடி 5. குரு : ஆழ்வார்திருநகரி 6. சுக்ரன் : தென்திருப்பேரை 7. சனி : பெருங்குளம் 8. ராகு : 1. இரட்டைத் திருப்பதி ( தொலைவில்லிமங்கலம்) 9. கேது : 2. இரட்டைத் திருப்பதி
தல வரலாறு:
திருவிழா:
திறக்கும் நேரம் : காலை 8 மணி முதல் 12 மணி வரை, மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:21, 25 ஜூலை 2011 (UTC) நன்றி - தின மலர்.
|
