ஸப்த விடங்கத் தலங்கள் 3

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பொருளடக்கம்

                                                              திருச்சிற்றம்பலம்

திருக்காறாயில்.jpg

ஸப்த விடங்கத் தலங்கள் 3

திருக்காறாயில்

இறைவர் பெயர்: கண்ணாயிரமுடையார்

இறைவியர் பெயர்: கைலாச நாயகி

தலமரம்: பலா, அகில், காறாயில்

தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்

வழிபட்டோர்: இந்திரன், முசுகுந்தச் சக்கரவர்த்தி

தேவாரப் பாடல்கள்: சம்பந்தர்:நீரானே நீள்சடை.... 2/15

சிறப்புகள்:

ஸப்த விடங்கத் தலங்களில் ஒன்று.

தியாகராஜர் : ஆதி விடங்கர்
விடங்கர்காரவாயில்.jpg

வீர சிங்காதனம்

நடனம்-குக்குட நடனம் கோழி வேகமாகவும், நேராகவும், பக்கவாட்டிலும் ஓடுவது போன்ற நடனம். கோழி நடனம்

இங்குள்ள கடுக்காய்ப் பிள்ளையார் பிரசித்தமானவர்

கண்பார்வை இழந்த பெண் ஒருத்திக்குப் பார்வை அளித்து ஒளியினை ஆயிரம் மடங்காகப் பெருக்கிக் கட்டியதால் "கண்ணாயிரம் உடையார்" எனப் பெயர் பெற்றார்.



காரவாசல்சிவன்.jpg

இங்குள்ள சேஷ தீர்த்தம் என்ற கிணறில் உள்ள நீரை ஒவ்வொரு நாளும் குடித்து வந்தால் பிணிகள் தீரும் என்று சொல்லப் படுகிறது.

இங்குள்ள மரகதலிங்கம் விசேஷம். காலை, மாலை இரு வேளைகளிலும் தேன், பாலுடன் அபிடேகம் பிரசித்தம்.

பஞ்ச சிவத் தலங்களில் முதன்மையானதாகவும் உள்ளது.
திருக்காரவாசல்தியாக.jpg

ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கக் கூடிய இரு தலங்களில் (திரு இடைமருதூர், திருக்காரவாசல்) ஒன்று.

பதஞ்சலி, வியாக்ரபாத முனிவர்கள் தங்கி இறையருள் பெற்ற தலம்.

அகத்திய மாமுனிவருக்கு நாடி சோதிடம் எழுதிட அருள் புரிந்த தலம்.

புதன் பகவானால் பிரதிஷ்டை செய்யப் பட்டதும், அஷ்ட திக்குகளிலும் சிவத் தலங்கள் அமைந்து மகாசிவ சக்ர மையமாகிக் கபில முனிவர் மற்றும் வள்ளலார் ஆகியோரால் பூஜிக்கப் பட்டது.

பன சாரண்யம், காளாகருவனம் என்று புராணங்களில் புனிதப் படுத்தப் பட்டத் தலம்.

அமைவிடம்: திருவாரூரிலிருந்து தென்கிழக்கே 12 கிமீ தூரத்தில் உள்ளது. திருவாரூரிலிருந்து கச்சனம், திருத்துறைப் பூண்டி, செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

Kavitha, Joint Commissioner, HR&CE, handing over the Maragatha Lingam to the temple priest V.Sivakumar, at Tirukaravasal near Tiruvarur on Wednesday 24/12/2009.

Maragada Lingam, which was stolen from the Thyagarajaswamy temple of Tirukaravasal near Tiruvarur in 1992 and recovered by the police recently, was handed over to temple authorities by the idol wing police on Wednesday. THE HINDU 24-12-2009.

தரிசன நேரம் மு.ப. 7-00 - 12-00 பி.ப. 4-00 - 8-00.

எழுதித் தயாரித்தது திரு வடிவேல் கன்னியப்பன்.


--Geetha Sambasivam 15:18, 2 டிசம்பர் 2010 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

"https://marabuwiki.org/index.php?title=ஸப்த_விடங்கத்_தலங்கள்_3&oldid=3727" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 3 டிசம்பர் 2010, 09:38 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,582 முறைகள் அணுகப்பட்டது.