வேடந்தாங்கலில் குழும உறுப்பினர் சந்திப்பு! :D

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக
DSC04235painted stork22.JPG

அப்பா நாரையும், அம்மா நாரையும் புதுசாக் கல்யாணம் பண்ணிக்கொண்டு வேடந்தாங்கல் வந்திருக்காங்க போல!



நாராய், நாராய், செங்கால் நாராய்,

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக்கூர்வாய்ச் செங்கால் நாராய்,

நீயும் நின் மனைவியும் தென் திசைக்

குமரியாடி வடதிசைக்கேகுவீராயின்

எம்மூர்ச் சத்திமுற்ற வாவியுட் தங்கி,

நனைசுவர்க்கூரை கனைகுரல் பல்லி

பாடுபார்த்திருக்குமென் ,மனைவியைக் கண்டு

எங்கோன் மாறன் வழுதி கூடலில்

கையது கொண்டு மெய்யது பொத்திக்

காலது கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென

உயிர்க்கும் ஏழையாளனைக்

கண்டனம் எனுமே!





DSC04271stork family.JPG அட??? குடும்பம் இவ்வளவு பெரிசா?? கூட்டுக் குடும்பம் போலிருக்கே?? எனக்கு ஒத்துவருமா??? பெண் நாரையின் கவலை!

DSC04245single stork.JPG
தனியாய்ப் போய் யோசிக்கணும்.  இவ்வளவு சத்தத்திலே ஒண்ணுமே பண்ண முடியலை! ம்ம்ம்ம்ம்?? என்ன செய்யலாம்???
DSC04236Apainted stork1.JPG
DSC04239stork in pond.JPG


அட?? இவர் இங்கே இருக்காரா?? காலம்பர ஒண்ணுமே சாப்பிடலையே! பாவம்!   நாம இப்படி ஓரமா அவர் கவனிக்கிறாப்போல் உட்கார்ந்துக்கலாம், பார்க்கிறாரானு கவனிக்கலாம்.




DSC04240camaroons.JPG
இது என்ன இந்தப் பறவைங்க எல்லாம் இப்படிச் சத்தம் போடுதுங்க?? ஓஹோ, அது குளத்தின் இன்னொரு பக்கமா?? ஒரே கூட்டமா உட்கார்ந்திருக்காங்களே? என்ன செய்யறாங்களாம்?? இது வேறே இந்தத் தெருவிலே வர வர சத்தம் அதிகமா ஆயிடும் போல!
DSC04242white ibis with black necks.JPG
சரியாப் போச்சு!  இன்னும் ஒரு குடும்பம் இங்கே குடியேற வருது போலிருக்கே?? அவரோட கொஞ்ச நேரம் தனியாப் பேசலாம்னா ஒரே இரைச்சல்!



  நம்ம வீட்டு மனுஷங்க எல்லாம் எங்கே காணோம்?? இதோ இங்கே இந்த ஓரமா உட்கார்ந்திருக்காங்களா?? எல்லாரும் நவகிரஹம் மாதிரி வக்கரிச்சுட்டு இருக்காங்களே? கடவுளே, என்ன பண்ணப் போறேனோ?
DSC04243pelicans.JPG




DSC04258pelican in group.JPG
DSC04261a meeting.JPG

இவங்க யாரு?? தெரியலையே?? இவங்களும் புதுசாக் குடி வராங்க போல! இங்கே ஒரு குழு உறுப்பினர்கள் தனியாக் கூடி ஏதோ பேசறாங்க.  ரகசிய மீட்டிங்கோ?




ஆஹா, அதோ அந்தப்பெரியவர் தான் அந்தக் குடும்பத் தலைவர் போல!  தனியா வராரே?? அவருக்கென்ன சிங்கம் போல இருக்கார்! சிங்கம் சிங்கிளாத் தானே வரும்??

DSC04257flying pelican.JPG
DSC04252pelican chick.JPG
அந்தக் குழந்தை என்ன அழகா இருக்கு?? தூக்கிக் கொஞ்சணும் போல இருக்கே?? இப்போத் தான் பறக்கக் கத்துட்டு இருக்கான் போல!  தனியா அதுக்குள்ளே மீன் பிடிக்க வந்துட்டானே?? கழுகு பார்க்காமல் இருக்கணுமே! ஈஸ்வரா!





அட?? இங்கே ஒரு மீட்டிங்கா?? என்ன பேசறாங்க கவனிப்போமா? வேண்டாம், வேண்டாம், எதுவேணா பேசட்டும், நாம அவரைத் தேடிப் பறப்போம்.
DSC04271stork family.JPG




அப்பாடா, ஒரு வழியாக் கண்டு பிடிச்சுட்டேன்.  என்னங்க? என்னங்க?? இதோ இங்கே இருக்கேன், இனிமே கோவிச்சுண்டு போகலை,  நாம ரெண்டு பேருமா சேர்ந்து எல்லாத்தையும் சமாளிப்போம்.  சரியா?? நான் என்ன இருந்தாலும் சின்னவ தானே?  நீங்க ஆனாலும் பொறுமை சாலிங்க.
DSC04269parents storks.JPG
DSC04271stork family.JPG
அப்பாடா, எல்லாரையும் பார்த்ததும் எவ்வளவு நிம்மதியா இருக்கு?







படங்கள் வேடந்தாங்கலில் எடுத்தது ரீச் சந்திரசேகரன்.

படங்களின் விளக்கம் கீதா சாம்பசிவம்

--Geetha Sambasivam 07:23, 29 ஜனவரி 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 29 ஜனவரி 2011, 07:23 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 799 முறைகள் அணுகப்பட்டது.