* விவேகானந்தர் - மனதில் உறுதியுடன் போராடு.
- சொல்லால் விளக்க முடியாத மேம்பட்ட அன்பின் சாரமாக இறைவன் இருக்கிறான். அவனை நாம் உணர முடியுமே தவிர, அவனது அன்பின் தன்மையை யாராலும் விளக்கமுடியாது.
- நன்மை, உண்மைக்கு மிக அருகில் இருக்கிறது, ஆனாலும், அது இன்னும் உண்மையின் இடத்தை அடையவில்லை.
தடைகளை வெல்ல வழி
‘மனித வடிவம் கொண்ட அனைத்து உயிரையும் வழிபடுங்கள்.
- இரக்கத்தால் பிறருக்கு நன்மை செய்வது நல்லது. ஆனால், இறைவனது படைப்பான அனைத்து உயிர்களுக்கும் பணி செய்வது அதைவிட மிக நல்லதாகும்.
- ஒவ்வொரு உயிரிலும் தெய்வீகத் தன்மை குடி கொண்டிருக்கிறது,உள்ளேயும் வெளியேயும் இருக்கும் இயற்கையைக் கட்டுப்படுத்தி, உள்ளத்தில் குடி கொண்டுள்ள தெய்வீகத் தன்மையை மலரச் செய்வதுதான் முடிவான லட்சியமாகும்.
நாள் கணக்கில் சிந்தியுங்கள்
- அனைத்திலும் கடவுளைக் காண்பது தான் மனிதனின் லட்சியம். அனைத்திலும் பார்க்க முடியாவிட்டால், நாம் மிகவும் நேசிக்கும் ஒன்றிலாவது பார்க்க வேண்டும்.
- அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால் அறிவாற்றலால் ஒரு போதும் செல்லவே முடியாத மிகவும் உயர்ந்த மனநிலைக்கு, இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.
- உண்மை, தூய்மை, சுயநலமின்மை ஆகிய இந்த மூன்றும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ,அவற்றைப் பெற்றிருப்பவர்களை நசுக்கக் கூடிய ஆற்றல் விண்ணுலகிலோ மண்ணுலகிலோ எங்குமே கிடையாது. இந்த மூன்றையும் பெற்றுள்ள ஒருவனைப் பிரபஞ்சம் முழுவதுமே எதிர்த்து நின்றாலும் அதை எதிர்த்து நிற்ககூடிய ஆற்றல் அவனுக்கு உண்டு.
கொடுப்பவனாக வாழுங்கள்
* கையை இறைவன் படைத்தது கொடுப்பதற்கே, நீ பட்டினியாய்க் கிடக்க நேர்ந்தாலும், உன்னிடத்திலுள்ள கடைசிப் பருக்கையையும் பிறருக்குக் கொடுத்துவிடு, அவ்வாறு பிறருக்கு கொடுப்பதாலேயே நீ பூரணமடைவாய், தெய்வமாகவும் ஆவாய்.
- தன்னை அடக்கப் பழகிக் கொண்டவன், புறத்தேயுள்ள எதற்கும் வசப்பட மாட்டான். அதன் பின் அவனுக்கு அடிமைத்தனம் எதுவுமில்லை. அவன் மனம் விடுதலை பெற்று விட்டது. அத்தகைய நிலைமை அடைந்தவனே உலகத்தில் நன்றாக வாழக் கூடிய தகுதி பெற்றவனாவான்.
- அன்பைக் கொடு, உதவியைக் கொடு, பணியைக் கொடு. இவ்வாறு உலகில் எப்போதும் கொடுப்பவனாக நிற்க வேண்டும். பதிலுக்கு ஒன்றையும் எதிர்பார்க்கக் கூடாது, இறைவன் நமக்குக் கொடுப்பது போன்று நமது ஈகைக் குணத்தால் நாமும் கொடுப்போம்.
- தூய்மையான மனதைப் பெறுவதுடன் இறைவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். அவனை சார்ந்து நிற்க முனைவதுடன் நன்னெறியில் நிற்க வேண்டும்.
வலிமை பற்றி சிந்தியுங்கள்
- இரக்கம் உள்ள இதயம், சிந்தனை ஆற்றல் படைத்த மூளை, வேலை செய்யக் கூடிய கைகள் ஆகிய இந்த மூன்றும் நமக்குத் தேவை.
- பெரியவர்கள் பெருந்தியாகங்களைச் செய்கிறார்கள், அதன் விளைவாக வரும் தன்மைகளை மனிதகுலம் பெற்று அனுபவிக்கிறது.
- இந்த உலகம் மிகப் பெரிய ஓர் உடற்பயிற்சிக்கூடம், இங்கு நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வந்துள்ளோம்.
- பலவீனத்திற்கான பரிகாரம், ஓயாது பலவீனத்தைக் குறித்துச் சிந்திப்பதல்ல, மாறாக வலிமையை குறித்துச் சிந்திப்பதாகும்.
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 11:55, 17 மே 2011 (UTC)
நன்றி - தின மலர்.