விவசாயம் பற்றியது
1தை பிறந்தால் வழி பிறக்கும்
பொருள்:-அறுவடை காலம் முடிந்தால் கையில் நாலுகாசு புறளும் அதனைவைத்து திருமணம் ,நிலபுலங்க்ள் வீடு மாடு தோப்பு என வாங்க ஏதுவாக இருக்கும் . அந்த கால கட்டங்களில் விவசாயம் ஒன்றையே குடும்பங்கள் நம்பி இருந்ததினால் இச்சொல் வழக்கில் இருந்தது
2 உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது (அல்லது) உறைப்போடக்கூட காணாது
பொருள்:-ஒரு விவ்சாயியின் குடும்பத்தில் அனைவ்ருமே வயல் வேலைகளில் ஈடுபடுவார்கள் ,கதிரவன் உதி்த்ததில் இருந்து அவன் மறையும் வரை,மாதத்தில் ஒர் நாள் அரிசிச் சோறு தின்றால் அதிசயம்,இப்படி இருகக அவ்ன் கணக்கு பார்க்க முடியுமோ,
மற்றொரு பொருள்:-உறை: தானிய வகைகளை அளந்து போடும்போது கணக்குக்காக அங்கு இருக்கும் கணக்குப் பிளளையான்வர் 10படி அளந்தவுடன் ஒரு பிடி தனியாக வைப்பபார் இதனை உறை என்பர் இதையே உறை போடக் கூட காணாது என்றும் கூ்றுவர்
3 ,தினை விதைத்தவன் தினை அறுப்பான்,வினை விதைததவன் வினைஅறுப்பான்
(பொருள்:- ஒருவன் நெஞ்சினில் தீய எண்ணங்கள் வைத்து இருந்தால் அது அவனை
அழித்து விடும் நல்ல எண்ணங்கள் கொண்டவன்,நன்றாகவே வாழ்வான்
4),காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்
பொருள்:-காற்று வீசும் போது முறத்தினால் நெல் மணிகளை உயரப்பிடித்து தூற்றுவார்கள் இதனால் சாகை நெல் காற்றில் பறந்து விடும் அரிசி உள்ள நெல் மணிகள் கீழே விழும் மறற பணிகளுக்கும் இம் முறை பொருந்துமாம்.
5) கொல்லையில் இருக்கும் பச்சிலை கறிக்கு உதவாது
பொருள்:-வீட்டின் கொல்லைப்புரத்தில் இருக்குமாம் பச்சிலை ஆனால் அதனை தேடி
ஊரெல்லாம் அலைவார்களாம், அதாவது வீட்டில் இருப்பதற்கு மதிப்பு கிடையாது
வெளியினில் இருந்து வந்தால்தான் ம்திப்பு என்ற கருத்தாம்.
6) ,ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
பொருள்:-பானை நிறம்பி வழிய சோறு கொதித்தாலும் ஒரே ஒரு பருக்கை சாதம் எடுத்து பதம் பார்த்தாலே போதுமானது,அது ஒருவர் செய்யும் வேலையையும் எளிதாக மதிப்பிட முடியும்.
சாரதா சுப்பிரமணியன்
தேதி - 07/04/2011.