வாழைப்பழ கேக்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உமா சண்முகம் 


தேவையான பொருட்கள்

மைதா மாவு -200கிராம்

பேக்கிங் பவுடர் -2டீஸ்பூன்

சர்க்கரை -150கிராம்

வெண்ணெய் -100கிராம்

முட்டை -2

வாழைப்பழம் -2

பால் -50மில்லி


செய்முறை :


1.மைதா மாவு பேக்கிங் பவுடர் இவற்றை கலந்து முன்று முறை சலிக்கவும்

2.முட்டைகளை நுரைக்க அடிக்கவும்.

3.வாழைப்பழத்தை பிசைந்து பாலுடன் நைசாக அரைத்துக் கொள்ளவும்.

4.வெண்ணெய் சர்க்கரை சேர்த்து நன்கு லேசாகும்வரை குழைக்கவும்.

5.சலித்த மாவில் வெண்ணெய் சர்க்கரை குழைத்த கலவை நுரைக்க அடித்த

முட்டை அரைத்த வாழைப்பழ விழுது சேர்த்து விரல்களாலேயே மிருதுவாக கலக்கவும்.

பேக்கிங் ட்ரேயில் வெண்ணெயை தடவி மாவு தூவிய கேக் கலவையை அதில்

ஊற்றி பேக் செய்யவும்.








--பவள சங்கரி திருநாவுக்கரசு. 14:29, 28 செப்டெம்பர் 2011 (UTC)

நன்றி - வல்லமை.

பங்களிப்பாளர்கள்

Coralsri.blogspot.com

"https://marabuwiki.org/index.php?title=வாழைப்பழ_கேக்&oldid=8313" இருந்து மீள்விக்கப்பட்டது
இப்பக்கம் கடைசியாக 28 செப்டெம்பர் 2011, 14:31 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,083 முறைகள் அணுகப்பட்டது.