லட்சுமி நாராயணி திருக்கோவில்மரபு விக்கி இருந்து
அருள்மிகு லட்சுமி நாராயணி திருக்கோவில்
மூலவர் : லட்சுமிநாராயணி
தல சிறப்பு: மண்டபத்தின் பின்னால் மனிதனின் 18 வகையான குணங்களை தாண்டி இறைவனிடம் செல்வதை உணர்த்தும் வகையில் 18 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 ஏக்கர் பரப்பளவுள்ள லட்சுமிநாராயணி கோயில், ஸ்ரீசக்கரத்தில் உள்ள நட்சத்திர அமைப்பில் உள்ளது. அந்த நட்சத்திரத்தின் நடுவில், வட்ட வடிவில் கோயில் உள்ளது. மேலே இருந்து, கோயிலை பார்த்தால் ஸ்ரீசக்கரம் போன்றே தெரியும். இரவு நேரத்தில் நவீன விளக்குகளுடன், பழங்கால மாட கல் விளக்குகளும் சேர்ந்து இரவை பகலாக்குகின்றன. கோயிலுக்குள் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்கள் பச்சைப்பசேல் என்று காட்சியளிக்கின்றன. தென்றல் காற்று இதமாக வீசுகிறது. மனநிம்மதியுடன் இறைவழிபாடு செய்ய முடிகிறது. கோயிலில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்யும் வரை, தேவையற்றதைப் பேச தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அமைதியைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது. தங்கக் கோயிலை சுற்றியுள்ள அலங்கார வளைவுகள், மண்டபங்கள், முகப்புகள் ஆகியவற்றிற்கும் தங்க கலரில் பெயிண்ட் அடித்திருப்பதால் ஒட்டு மொத்த கோயிலும் ஜொலிக்கிறது. கோயிலை சுற்றிலும் பசுமையான புல்வெளியும், புல்வெளிகளின் நடுவில், சுதையால் ஆன துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, மாரியம்மன் சிலைகளும் உள்ளன. கோயிலுக்குள் செயற்கை நீர்வீழ்ச்சிகள், குளங்கள், மலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுயம்பு லட்சுமி நாராயணி : தஞ்சாவூர் மாவட்டம் திருக்கருகாவூரில் பிள்ளையாரும், நந்தியும் சுயம்புமூர்த்தியாக உள்ளனர். மதுரை உள்ளிட்ட சில சிவாலயங்களில் சிவன் சுயம்புவாகவும், கோயமுத்தூர் மாவட்டம் காரமடை ரங்கநாதர் ஆகிய இடங்களில் பெருமாள் சுயம்புவாகவும், சென்னை திருவேற்காடு போன்ற பல தலங்களில் மாரியம்மன், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் முருகன் ஆகியோர் சுயம்பு மூர்த்தியாகவும் அருள்பாலிப்பதை தரிசித்திருப்பீர்கள். வேலூர், பொற்கோயில் எதிரேயுள்ள லட்சுமி நாராயணியும் சுயம்புவாக இருந்தவளே. இப்போதும், இவள் ஒரு குடிசைக்குள் அருள்பாலிக்கிறாள். லட்சுமி நாராயணிக்கு கோயில்களை காண்பதே அரிது என்னும் போது, இத்தகைய சுயம்பு கோலத்தை காண்பது அரிதிலும் அரிது. ஏழுமலையானின் பார்வையில் திருமகள்வேலூர் மகாலட்சுமி, திருமலையில் அருளும் திருப்பதி வெங்கடாசலபதியின் கடைக்கண்பார்வைபடும்படியாக அமைக்கப்பட்டிருக்கிறாள். ஆரம்பகாலத்தில், இப்பகுதி திருமலைக்கோடி என்று அழைக்கப்பட்டது. மகாலட்சுமி கோயில் கட்டியபிறகு "ஸ்ரீபுரம்' என்று பெயர் மாற்றப்பட்டது. "ஸ்ரீ' என்பது மகாலட்சுமியை குறிக்கும். திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிப்பவர்கள், அவரது துணைவி மகாலட்சுமி வாசம் செய்யும் வேலூர் நாராயணிபீடத்தையும் தரிசிப்பது சிறப்பு. மக்களை மகிழ்விக்கும் மகாலட்சுமி : மகாலட்சுமி செல்வத்தின் அதிபதி. மூலஸ்தானத்தில் வைரம், வைடூரியம், முத்து, பவளத்தால் ஆன நகை, தங்க கவசம், தங்க கிரீடம் ஆகியவற்றுடன் தங்கத்தாமரையில் அமர்ந்த கோலத்தில் அவள் அருளுகிறாள். தங்கத்தில் ஜொலிக்கும் மகாமண்டபத்தில் நின்று கொண்டு அம்மனை தரிசித்தால் அஷ்ட ஐஸ்வரியங்களும், 16 வகையான செல்வங்களும் பெற்று மகிழ்வான வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. தங்கக் கோயிலை சுற்றி 10 அடி அகலத்திற்கு தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளது.
இப்படி ஒரு பிரமாண்டமான தங்கக்கோயில் என்றால் அதைப்பார்ப்பதற்கு மக்கள் உடனே வந்து விடுவார்கள். அவ்வாறு வரக்கூடிய மக்கள் தங்ககோயிலில் அருள்பாலிக்கும்மகாலட்சுமியை தரிசிப்பதுடன், உள்ளே எழுதப்பட்டிருக்கும் ஆன்மிக தத்துவங்களையும் படித்துச் செல்வார்கள்,என்றார். சக்தி அம்மா தரிசனம்: பொற்கோயிலின் எதிரே ரோட்டைக் கடந்து சென்றால், ஒரு குடிசைக்குள் சுயம்பு நாராயணியும், இதை ஒட்டிய கற்கோயிலில் மற்றொரு நாராயணியும் அருள்செய்கின்றனர். இந்தக் கோயிலை "நாராயணி பீடம்' என்கின்றனர். இந்த பீடத்தில், கோயிலின் நிறுவனரான "சக்திஅம்மா' இருக்கிறார். மக்கள் இவரிடம் ஆசிபெறச் செல்கின்றனர். இங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு மதியமும், இரவும் உணவு வழங்கப்படுகிறது.
திருவிழா:
--பவள சங்கரி திருநாவுக்கரசு. 02:13, 19 ஏப்ரல் 2011 (UTC) நன்றி - தின மலர்.
|
