எழுதியவர்: திருமதி.கீதா சாம்பசிவம்
பூசணிக்காய்(வெள்ளை), வாழைத்தண்டு, செளசெள, கீரைத்தண்டு அல்லது முளைக்கீரை இவற்றில் ஏதாவது ஒன்று, நல்ல தேங்காய் மூடி ஒன்று, பச்சை மிளகாய் ஒன்று அல்லது இரண்டு, உப்பு, தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, கருகப்பிலை நறுக்கி வேக வைக்கவும்.
உப்புச் சேர்க்கவும். பச்சை மிளகாயோடு தேங்காய்த் துருவல் வைத்து நன்கு நைசாக அரைக்கவும், தேவைப்பட்டால் கொஞ்சம் அரிசியையும் ஊற வைத்து இவற்றோடு சேர்க்கலாம்.
கூட்டு தண்ணீராக ஓடாமல் நிற்கும். அரைத்த விழுதை வெந்த காய்களில் கொட்டி ஒரு கொதி வந்ததும் இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு,கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.