மேலை நாகரீகங்களில் தடம் பதித்த தமிழ் இறுதிப்பகுதி!

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

Shalmaneser I 1345 B.C. > தமிழில் சால் மான் இசர் > சாலன் மானன் இசன் என செப்பமாகப் படிக்கலாம். சாலன் - சாலம்மாள், சாலன், சாலி ஆகிய பெயர்கள் தமிழகத்தில் வழங்குகின்றன. செங்கலபட்டு அருகே உள்ள ஊர் சாலவாக்கம். மானன் - சிந்து முத்திரைப் பெயர். M 1225, IsD- பக்.149 . 63 நாயன்மாருள் ஒருவர் மானன் கஞ்சாறர். இசன் - யகர சகர திரிபு. இயன்>இயனன் சிந்து முத்திரைப் பெயர் H3547, IsD- பக்.120.

இவ் வேந்தன் வட சிரியாவில் Amanus மலைக்கு அருகே அமைந்த Musri என்ற ஊரினை வென்று அடிபணியக் கொண்டான். முசிறி என்ற பெயரில் திருச்சி அருகிலும் பிற இடங்களிலும் ஊர்கள் உள்ளன.


Tukulti Ninib 1290 B.C. > தமிழில் துக்கல் இத்தி நின் இவ் > துக்கன் இத்தன் நின்னன் இவ்வன் என செப்பமாகப் படிக்கலாம். துக்கன் - துக்காராம் என மராட்டியத்தில் வழங்குகிறது. இத்தன் - சிந்து முத்திரைப் பெயர் M2148. நின்னன்- இன்கா நாகரிக மன்னன் பெயர் Ninan Cuyochi 1525 AD > நின்னன் குய்அக்கி.

இவ் வேந்தனுடன் போர் அரசிய உறவுகளால் தொடர்புடைய மன்னர்கள் பின் வருமாறு.


Nabu Daian 1250 B.C. > தமிழில் நப்பு தாயன் > நப்பன் தாயன் என செப்பமாகப் படிக்கலாம். நப்பு ஒரு தெய்வப் பெயர். இகர ஈறு பெற்று நப்பு< நப்பன் ஆனது. தாயன் - விண்ணன் தாயன் சங்க இலக்கியத்துள் பதிவு எய்திய பெயர். இம்மன்னன் பெயர் அன் ஈறு பெற்றுள்ளது ஒரு சிறப்பு. சீன, கொரிய நாகரிகங்களிலும் இப்பெயர் உண்டு.


Asshur Dan 1210 B.C. > தமிழில் அசூர் தன் > தன்னன் என செப்பமாகப் படிக்கலாம். தன்னவன் எனவும் வழங்கும். அன் ஈறு பெற்றும் பெறாமலும் தன்னன் சிந்து முத்திரையில் பதிவாகி உள்ளது K59a.


வேந்தன் Asshur Nazir Pal 885 - 786 BC போர், அரசிய உறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள்.

இவ் வேந்தன் போரில் நிஷ்து தலைவனின் மகனைக் கொன்று அவன் தோலை கோட்டை மதிலில் விரித்துத் தொங்க விட்டான். அவன் பெயர் Bu Bu > தமிழில் பு பு என படிக்கலாம். இப்பெயர் சிறப்பாக சிந்து முத்திரைகளில் மட்டுமே காணப்படுகிறது. M 2301, IsD பக் 109.


இவன் அசீரியக்குடியான Khamitai என்பானுடைய ஆளுகையின் கீழ் அவ் அரசை வைத்தான். தமிழில் காம் இத்தை > காமன் இத்தன் என செப்பமாகப் படிக்கலாம். காமன் - கலிக் காமன் நாயனார். சிந்து முத்திரையிலும் பதிவெய்திய தமிழ்ப் பெயர் இது. H3669, IsD பக்.181. இத்தன்- தமிழுக்கே உரிய ஐகார ஈறு
இருப்பது இதன் சிறப்பை துலக்குகிறது. சிந்து முத்திரை M2148 Isd பக்.122.

வேந்தன் Shamshi Adad I 1080 B.C. வரலாற்றில் தொடர்புடைய மன்னர்கள் பின்வருமாறு.

இவன் காலத்தில் இருந்த அரேபிய இளவரசன் Shulman khaman ILani > தமிழில் சல்மான் காமன் இள அன்னி என படிக்கலாம். காமன் அன் ஈறு பெற்றுள்ளது. இள - இளமைப் பொருள் கருத்து. இளங் குமணன் சங்க இலக்கியப் பெயர். அன்னி சங்க இலக்கியப் பெயர்.


இவன் காலத்தில் Shuhites ஆட்சியாளனாக இருந்தவன் ILubani > தமிழில் இள வண்ணி > இள வண்ணன் என செப்பமாய்ப் படிக்கலாம். வண்ணன் - கொடுமணல் சிந்து எழுத்து பானை ஓட்டில் உள்ள பெயர். சிந்து முத்திரையிலும் பதிவு பெற்றுள்ள பெயர் M314a.

இவ்வேந்தனை Khalzi Lukha என்பான் எதிர்த்தான் அதற்கு தலைமை ஏற்றவன் Khula > தமிழில் கூல > கூலன் என செப்பமாகப் படிக்கலாம். சிந்து முத்திரையில் பதிவெய்தி உள்ளது M 142 , IsD பக்.84. கூலப்ப நாயக்கன் தமிழ் இலக்கியப் பெயர்.


அசீரிய வேந்தன் Shalmaneser II 859 - 825 B.C. படையெடுப்பின் போது நாம்ரி என்ற நாட்டிற்கு இளவரசனாக அவனால் அமர்த்தப்பட்டவன் Yanzu > தமிழில் யாண் > யாணன் என செப்பமாகப் படிக்கலாம். இது ஒரு பழந்தமிழ் பெயர் இங்கு அன் ஈறு பெறாமல் வந்துள்ளது. சிந்து முத்திரையில் L6052,IsDபக்118, M278A. யகர சகர திரிபில் யாணன்>சாணன் ஆகும்.


வேந்தன் Nirari III 811- 783B.C. > கி.மு.797இல் தமாஸ்கசை முற்றுகையிட்ட போது அதன் அரசனாக இருந்தவன் Mari > தமிழில் மாரி என்பது செப்பமான வடிவம். மாரி - மழை எனப் பொருள். மாரிமுத்து, மாரியப்பன் இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். மாரி என்று ஒரு ஊரும் மேலை நாகரிகத்தில் இருந்துள்ளது.


வேந்தன் Tiglath pileser III 745-727 B.C. இன் போர் அரசிய உறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய மன்னர்கள்.


உங்கி என்ற ஊரின் மன்னனாய் இருந்தவன் Tuta Ammu தமிழில் துட அம்மு > துடன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம். துடன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். வடகிழக்கு ஈழத்தின் ஓர் ஊர்ப் பெயர் துடன்குளம். எகிபதின் 18 ஆம் ஆள்குடியின் மன்னனை பெயர் Thutmoses 1493 - 1481 B.C.> தமிழில் துட் மோசி > துடன் மோசி. மோசி - மோசி கீரனார், முடி மோசியார் சங்க காலப் புலவர்கள். அதே ஆள்குடியில் இன்னொரு மன்னன் Tutan Khaman 1334-1325 BC > தமிழில் துடன் காமன் என்பது செப்ப வடிவு.. அம்மன் - பழந்தமிழ்
ஆடவர்ப் பெயர். மேலை ஆசியாவில் கிட்டிய சிந்து முத்திரையில் இப் பெயர் உள்ளது. சேலத்தில் அம்மன்
பாளையம் > அம்மம்பாளையம் என்ற ஊரில் சமத்துவபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இம்மன்னன் பெயர் உகர ஈறு பெற்று உள்ளது.


சாமல் என்ற ஊர் (சாமன் > அல் ஈறு பெற்று உள்ளது) மன்னன் Pan Ammu > தமிழில் பண் அம்மு > பண்ணன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம். பண்ணன் - சங்க இலக்கியப் பெயர். சிந்து முத்திரையிலும் பதிவாகி உள்ளது 8326 IsD பக்.82, H3012 IsD பக்.102.


Istitunda வின் மன்னன் Tukha ammi > தமிழில் துக்க அம்மி > துக்கன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம். துக்கன் - தமிழ் மரபினரான மராட்டியர் துக்காராம் எனப் பெயர் கொண்டுள்ளனர். அம்மன் - இங்கு இகர ஈறு பெற்றது.


Khubishna என்ற ஊரின் மன்னன் Urimmi > தமிழில் ஊர் இம்மி > இம்மன் என செப்பமாகப் படிக்கலாம். ஊர் - ஊர் என்ற சுமேரிய ஊரன் எனப் பொருள். இம்மன் - இமயன் எனவும் வழங்கும். அரிட்டாபட்டி தமிழி கல்வெட்டு 2:2 இலஞ்சிய் எளம் பேரா அதன் மகன் எமயவன் இவ்முழ கொடுபிதவன். இகர எகர திரிபு இமய > எமய. ம்ன்னன் பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.


Gaza மன்னன் Khanunu or Hanno > தமிழில் கண்ணு என்பது செப்பமான வடிவம். அன் ஈறு பெற்று கண்ணன் எனவும் ஐகார ஈறு பெற்று கண்ணை எனவும் வரும். கண்ணுசாமி, சின்னக்கண்ணு,செல்லக்கண்ணு ஆகிய பெயர்கள் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. மதுராந்தகம் சானூர் சிந்து எழுத்துப் பானைஓட்டில் கண்ணு என உள்ளது.


இவன் காலத்தில் சால்திய Yakin பழங்குடித் தலைவன் பெயர் Merodach Baladan > தமிழில் மேற் ஓதச் வல்லாதன் > மேற் ஓதச்சன் வல்லாதன் என செப்பமாகப் படிக்கலாம். மேற் - மேல், மேன், மேற், மேழ் என்பன எல்லாம் உயர்வுக் கருத்தைக் குறிக்கும். மேனன் என்பது மேலானவன் எனப் பொருள்படும். எகிபது நாகரிகத்தில் மேன், மேற் ஆகிய பெயருடைய மன்னர் உண்டு. ஓதச்சன் - சிந்து முத்திரைப் பெயர் M4A. ஓதன்+ அச்சன்=ஓதப்பன். அல் ஈறு பெற்று ஓதல் ஆந்தையார் என ஒரு சங்க இலக்கியப் புலவர் உள்ளார்.
மேற்ஓதச் என்பது ஒரு தெய்வத்தின் பெயர். வல்லாதன் - அன் ஈறு தெளிவாகப் பெற்ற சேர மரபுப் பெயர்.


Carchemish என்ற ஊரின் அரசனாக இருந்தவன் Pisiris > தமிழில் பிசிர் என்பது செப்பமான் வடிவம். பிசிர் ஆந்தையார் ஒரு சங்க காலப் புலவர்.


அசீரிய வேந்தன் Sennacherib 704-682 B.C. > தமிழில் சேன் ந சேர் இவ் > சேனன் ந சேரன் இவ்வன் என செப்பமாகப் படிக்கலாம். சேனன் - சிந்து முத்திரைப் பெயர் M1088, IsD பக்.143. ந - சிந்து முத்திரையில்
ஒற்றை எழுத்தாக வருவது. சேரன் - எதியோபிய நாகரிகத்தில் சேர்ஆத ஒரு மன்னர் பெயர். இவ்வன் - சிந்து முத்திரைப் பெயர் M2423, IsD பக்.143.

இவ் வேந்தனை எதிர்த்து போரிட்ட அரசுகளுடன் ஒன்று சேர்ந்த சிற்றரசியத்தின் பெயர் Gambuli > காம்புலி. இது திருக்காம்புலி ஊரை ஒத்துள்ள பெயர்.


அசீரிய வேந்தன் Esar Haddon > தமிழில் இசர் அட்டன் என்பது செப்ப வடிவம். இசர் - யகர சகர திரிபில் இயன் இசன் ஆகி அர் ஈறு பெற்று உள்ளது. சிந்து முத்திரைக் பெயர் H3547 IsD பக்120அட்டன் - சிந்து முத்திரைப் பெயர் M706,IsD பக்.96. இதற்கு சிவந்த நிறத்தோன் என்பது தமிழில் பொருள். திருச்சி - கொட்டாம்பட்டி - மதுரை சாலையில் ஓர் ஊர் பெயர் அட்டத்தூர்.


Asshur Banipal > தமிழில் அசூர் வானி வால் என்பது செப்பமான வடிவு வகர>பகர திரிபு. அசூர் - ஆசீரிய ஞாயிறு தெய்வம். வானி - ஒளிர் வெண்மை என்பது தமிழ்ப் பொருள். வானன் > பானன் அன் ஈறு பெற்ற
தமிழ்ப் பெயர், வால் > பால் - வெண்மை.


Asshur Etil ILi Ukinni > தமிழில் எட்டில் இளி உக் இன்னி > எட்டில் இளி உக்கன் இன்னன் என செப்பமாகப் படிக்கலாம். எட்டில் - ஊர் அல்லது குடும்பப் பெயராக இருக்கலாம். கேரளத்தில் இவ்வழக்கம் உண்டு.
இளி - சிந்து முத்திரைப் பெயர் M3296, IsD பக். 119. உக்கன் - உக்கு என அரப்பா பானைஓட்டிலும், உக்கன் என கொடுமணல் பானை ஓட்டிலும் உள்ளது. இன்னன் - இகர ஈறு பெற்றுள்ளது.


சுமேரிய அரசர்கள் > Sumerian kings


Eannatum of Lagash > தமிழல் இயன் நத்தம் > இயனன் நத்தன் என செப்பமாகப் படிக்கலாம். இயன் - சிந்து முத்திரைப் பெயர் H3547, IsD பக்.120. நத்தன் - சிந்து முத்திரைப் பெயர் M 653, IsD பக்.110.


Mes kalak Dug of Ur > தமிழில் மேழ் காளம் தக் > மேழன் காளன் தக்கன் என செப்பமாகப் படிக்கலாம். மேழன் உயர்ந்தோன் எனப் பொருள். மேழம் மலை ஆடு. காளன் - சிந்து முத்திரைப் பெயர் M3254. இன்றும்
தமிழகத்தில் வழங்குகிறது, முத்துக்காளத்தி > காளன்+அத்தி. தக்கன் - சூலூர் மட்கலனில் தக்க இன்னன் என எழுதப்பட்டுள்ளது.


Adab king Lugal Anne Mundu 2550 B.C. > தமிழில் இளகல் அன்னி மந்து என செப்பமாகப் படிக்கலாம். இளகல் - ஓர் ஊர் பெயராக இருக்கலாம். அன்னி - சிந்து முத்திரைப் பெயர் M 1349, IsD பக்.241.மந்து - பழந்தமிழ்ப் பெயர். அரசனைப் பண்டு குறித்தது.


Gilgamesh 2500 BC > தமிழில் கிள் கா மேழ் > கிள்ளன் காமன் மேழன் என செப்பமாகப் படிக்கலாம். கிள்ளன் - இகர ஈறு பெற்று கிள்ளி, உகர ஈறு பெற்று கிள்ளு எனவும் வரும். திருச்சி - கீரனூர் சாலையில் கிள்ளுக் கோட்டை எனும் ஊர் உள்ளது. கா - சிந்து முத்திரையில் ஒற்றை எழுத்தாக வரும் பெயர்.M2214, IsD பக்.226. பல்லங்கி மாயன் நாகரிக மன்னன் பெயர் Ch'a I 252 B.C. > தமிழில் கா . எகிபதின் முதல் ஆள்குடியில் ஒரு மன்னன் பெயர் Qa'a 3100 - 2890 B.C. > தமிழில் கா. மேழன் - மேல், மேன், மேற் என எகிபதில் பதிவெய்தி உள்ளது.


EnaKalle of Umma > தமிழில் என்ன கள்ளி > என்னன் கள்ளன் என செப்பமாகப் படிக்கலாம். என்னன் - சிந்து முத்திரைப் பெயர் H4162, Isd பக்.123. க்ள்ளன் - இப்பெயர் இகர ஈறு பெற்று உள்ளது.


En Anna Tumi I > தமிழில் என் அன்ன தூமி > என்னன் அன்னன் தூமன் என செப்பமாகப் படிக்கலாம். என்னன் - அன் ஈறு பெறாமல் உள்ளது.அன்ன்ன் - சிந்து முத்திரைப் பெயர் M3246. தூமன் - ஒரு பழந்தமிழ்ப்
பெயர். இங்கு இகர ஈறு பெற்று உள்ளது. ஐகாரம் பெற்று தூமை ஆகும். ஐரோப்பாவிலும் Alexander Dumas என இக்கால் வழங்குகிறது.


Entemena > தமிழில் எண்டி மீன > எண்டி மீனன் என செப்பமாகப் படிக்கலாம். எண்டி - ஞாயிற்றை வெய்யிலோன் என்பர். தெலுங்கில் வெய்யில் எண்ட எனப்படும். எனவே எண்டல், எண்டன் ஆகிய
பெயர்கள் இருந்துள்ளன். எண்டத்தூர் மதுராந்தகம் - திண்டிவனம் சாலையில் அமைந்த ஊர். மீனன் - பாண்டின் மீனன் எனப்பட்டான். இன்றும் மீனன் என்ற பெயர் உள்ளவர் உண்டு.


Ur நகரின் கடைசி மன்னன் Ur Ukagina > தமிழில் ஊர் உக் கீண > உக்கன் கீணன் என செப்பமாகப் படிக்கலாம். உக்கன் - கொடுமணல், அரப்பா பானைஓடுகளில் கீறப்பட்டுள்ள பெயர். கீணன் -பழந்தமிழ்ப்
பெயர்.. கீணனூர் நெய்வேலிக்கு அருகே உள்ள ஊர்ப் பெயர்.


Lagash மன்னன் Gudea > தமிழில் குடிய > குடியன் என படிக்கலாம். பண்டு ஆள் பெயராக வழங்கி இக்கால் சாதிப் பெயராக வழங்குகிறது. குடிய என்ற பெயரில் மேலை ஆசியாவில் ஊரும் இருந்து உள்ளது.


Ur nammu 2112-2095 B.C. > ஊர் நம்மு > நம்மன் என செப்பமாகப் படிக்கலாம். தமிழக பானைஓடுகளிலும், சிந்து முத்திரையிலும் காணப்படும் பெயர். 8205, IsD பக்.135.


Puannum Buannum > தமிழில் பூயன்னம் உய்யன்னம் > பூயன் அன்னம் உய்யன் அன்னம் என செப்பமாகப் படிக்கலாம்.பூயன்- மேலை ஆசிய சிந்து முத்திரையில் பூயன் என உள்ளது. அன்னம் - அம் ஈறு வந்து
உள்ளது. சிந்து முத்திரையில் அன்னன் பதிவாகி உள்ளது. H3246,IsD பக்.97. உய்யன் - சிந்து முத்திரைப் பெயர் M2636,IsD பக்.110.


Ur Nungal 2580 BC > நங்கல் > நங்கன் என செப்பமாகப் படிக்கலாம். திருக்காம்புலியூர் பானைஓட்டில் நங்கன் என உள்ளது. பக்ரா-நங்கல் ஓர் பேரணை.


Ur Utu 2150 B.C. > தமிழில் உத்து > உத்தன் என படிக்கலாம். சிந்து முத்திரைப் பெயர். M1243, IsD பக்.110.


குடியன் அரசின் மன்னன் Erridu Pizir > தமிழில் எருது பிசிர் என்பது செப்பமான வடிவம். எருது - எருதன் இராசராசன் திருவையாறு கல்வெட்டில் இப் பெயர் பொறிக்கபபட்டு உள்ளது. எதியோபிய மன்னன். Erda Amen Awseya 681-675 BC > எருதன் ஆமன் அவ்அன் சேயன். துருக்கி அதிபர் Erdogan > எருத அகன். பிசிர் - பிசிர் ஆந்தையார்.


பாபிலோன் மன்னர்கள் > Babylon kings


Ammi saduqa 1582-1562 B.C. > தமிழில் அம்மி சா தக்க > அம்மன் சா தக்கன். அம்மன் - மேலை ஆசிய முத்திரையில் பதிவாகி உள்ளது. இப்பெயர் இகர ஈறு பெற்று உள்ளது. அம்மன்பாளையம் சேலத்து
ஊர். சா - சிந்து முத்திரைகளில் ஓரெழுத்து பெயராக பதிவாகி உள்ளது. தக்கன் - தமிழக மட்கல சிந்து எழுத்துப் பெயர்.சப்பானில் இப்பெயராட்சி உண்டு.


Naplanum 1961-1940 B.C. > தமிழில் நப்பல் அன்னம் > நப்பன் அன்னன் என செப்பமாகப் படிக்கலாம். நப்பன் - சிந்து முத்திரைப் பெயர் M1656 அன்னன் - சிந்து முத்திரைப் பெயர் அம் ஈறு பெற்று உள்ளது. M1160. அன்னி என இகர ஈறு பெற்றும் வரும்.


Samium 1912-1877 B.C. > தமிழில் சான் இயம் > சாமன் இயன் என செப்பமாகப் படிக்கலாம். சாமன் - சிந்து முத்திரைப்பெயர். M2574,IsD பக்.91. யகர சகர திரிபில் யாமன் > சாமன் ஆகியது. இயன் - அம் ஈறு பெற்று உள்ளது. சிந்து முத்திரைப் பெயர். H3547,IsD, பக்.120.


Gun Gunum 1868-1841B.C. > தமிழில் கண் கண்ணம் > கண்ணன் கண்ணன் என செப்பமாகப் படிக்கலாம். முதல் கண்ணன் அன் ஈறு பெறவில்லை. இரண்டாம் கண்ணன் அம் ஈறு பெற்றுள்ளது. கண்ணன் சங்க இலக்கியப் பெயர். சிந்து முத்திரைப் பெயர் H3349,IsD,பக்.172.



Sumuel 1830-1801 B.C. > தமிழில் சாமு எல் > சாமன் எல்லன் என செப்பமாகப் படிக்கலாம். எல்லன் - தமிழகத்தில் இன்றும் வழங்கும் பெயர்; எல்லப்பன், எல்லைய்யா. இகர ஈறு பெற்று எல்லி ஆவது உண்டு.


Ammi Ditana 1683-1640 B.C. > தமிழில் அம்மி திட் அண்ண > அம்மன் திட்டன் அண்ணன் என செப்பமாகப் படிக்கலாம். திட்டன் - திட்டன்குடி > திட்டக்குடி. இகர ஈறு பெற்று திட்டி எனவும ஆகும். அண்ணன் - சிந்து முத்திரைப் பெயர் M433, IsD பக்.82. அப்பன் போல் மதிப்புரவுப் பெயர்.


Melam Kur Kukka > தமிழில் மேலம் கார் கக்க > மேலன் கார் கக்கன் என செப்பமாகப் படிக்கலாம். மேலன் - மேனன் எனவும் வழங்கும் இதன் பொருள் மேலான என்பது. அம் ஈறு பெற்று உள்ளது. கக்கன் - சிந்து
முத்திரைப் பெயர் H764B. கக்கன் மேனாள் தமிழக அமைச்சர். கார் - கருமைப் பொருள்.


Burnaburiash I > தமிழில் பரண பூரி > பரணன் பூரி என செப்பமாகப் படிக்கலாம். பரணன் - சங்க இலக்கியப் புலவர். பூரி - பூரிக்கோ குறுந்தொகை தொகுத்தவர். பூரிக்கோ கி.பி.220 -250 ஒரு சேர அரசன்.கொரிய நாகரிகத்தில் தங்கன் வழி வந்த மன்னன் Buru 2240-2182 B.C. > தமிழில் பூரு. இங்கு உகர ஈறு பெற்று உள்ளது.

Kassite மரபு பாபிலோன் ம்னனர்கள். இவர்கள் செமிட்டிக் இனமோ இந்தோ ஆரிய இனமோ அல்லர். இவர்கள் மொழியும் தனிப்பட்டது.


இம்மரபு அரசன் Karigalzu I 1374-1360 B.C. & Karigalzu II 1332 - 1308 B.C. > தமிழில் கரிகால் > கரிகாலன் என செப்பமாகப் படிக்கலாம். கரிகாலன் என்ற பெயர் தமிழகத்தில் 2,500 ஆண்டுகள் பழமையதே ஆனால் பாபிலோனில் 3,400 ஆண்டுகள் பழமையது. தப்பும் போது தீயில் கால் கருகியதால் கரிகாலன் எனப்பட்டான்
என்ற விளக்கம் தவறு.



Nazi Maruttash 1307-1282 B.C. > தமிழில் நசி மருத > நச்சி மருதன் என செப்பமாகப் படிக்கலாம். நச்சி - இகர ஈறு பெற்ற நச்சன் என்ற சிந்து முத்திரைப் பெயர். M672, IsD.பக்.116. மருதன் - மருதன் இள நாகன் ஒரு சங்க காலப் புலவர்.


Melishipak I > தமிழில் மேலி சிப் அக் > மேலன் சிப்பன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம். மேலன் - இகர ஈறு பெற்று மேலி ஆனது. சிப்பன் - ஆன் ஈறு பெறாமல் வந்துள்ளது. சீன நாகரிகத்தில் மேலை Qin ஆள்குடி மன்னன் Chipan 412-428 AD > தமிழில் சிப்பன் என்பது செப்பமான வடிவம். நெய்தல் நில மக்கள் இப்பெயர் உடையவர் ஆதல் வேண்டும். அக்கன் - அல், இ, உ அம் ஈறு பெறும் ஒரு தமிழ்ப் பெயர். சிந்து முத்திரை M3372, IsD,பக்.72.



சிப்பை என்பான் மகன் Kasshu Nadin Akhe 1056-1054 B.C. > தமிழில் காச்சு நத்தன் அக்கி > காச்சன் நத்தன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம். காச்சன் - சிந்து முத்திரைப் பெயர் H3826 & 3363 IsD,பக்.100. நத்தன் - சிந்து முத்திரை H3122, IsD பக்-106. அக்கன் - இகர ஈறு பெற்று உள்ளது.


ஈலம் மன்னர்கள் > Kings of Elam



இவர்கள் தென்மேற்கு ஈரானை ஆண்ட செமிடிக் இனமோ அல்லது இந்தோ ஐரோப்பிய இனமோ அல்லாத தனிப் மொழிப் பிரிவினர்.


Khutran Temti > தமிழில் கூற்றன் திண்டி என்பது செப்ப வடிவம் கூற்றன் - புகளுர் தமிழி கல்வெட்டு 20:3 யாற்றூர் செங்காயபன் தாவன் ஊர் பின்னன் குற்றன் அறுபித்த அதிட்டானம் என்பது. தமிழி கல்வெட்டுகளில் குறில் நெடில் பிழைகள் நிரம்ப உள்ளன ஆதலால் குற்றன் என்பது கூற்றன் ஆக இருக்கலாம் என்பர் அறிஞர் திண்டி - சிந்து முத்திரைகளில் திண்டின் என உள்ளது M2638, IsD, பக்.139. திண்டி யானையைக் குறிக்கும் சொல்.


Kukka Nasher > தமிழில் கக்க ந சேர் > கக்கன் ந சேரன். கக்கன் - சிந்து முத்திரைப் பெயர் H764B. ந - சிந்து முத்திரையில் ஒற்றை எழுத்துச் சொல். சேரன் - சேரர் குடிப் பெயர்.


Kutir nakkhundi 1710 BC > தமிழில் கதிர் நக் கந்தி > கதிர் தக்கன் கந்தன் என செப்பமாகப் படிக்கலாம். கதிர் - ஞாயிற்றை குறிக்கும் சொல் கதிரவன், கதிர் வேல் ஆகிய பெயர்கள் இன்றும் வழங்குகினறன்.கதிர்காமம் ஈழத்தின் தென்கோடியில் அமைந்த ஊர். நக்கன் - கர்னூல் கன்மவடக்கல் எனும் ஊர் சிந்து எழுத்தில் கலிங்கு நக்க நந்தி என உள்ளது. கந்தன் - சிந்து முத்திரைப் பெயர். இகர ஈறால் கந்தி ஆனது. எதியோபிய மன்னர் கந்தி என பெயர் கொண்டுள்ளனர்.
.

Kudur Lagama > தமிழில் கூத்தர் இள காம > கூத்தன் இள காமன் என செப்பமாகப் படிக்கலாம். கூத்தன் - கூத்தபிரான் மாயக் கூத்தன் என பலவாறு இன்றும் தமிழகத்தில் வழங்கி வருகிறது. சிந்து முத்திரை 8525, M 122, IsD, பக்.167. இள - இளமைக் கருத்து. காமன் - தூய தமிழ்ப் பெயர். H3669,IsD, பக்.110,சிந்து முத்திரை. கலிக் காமன் நாயனார்.பெரிய புராணப் பெயர்.


Chedor laomer >தமிழில் சித்தர் இள ஓமர் > சித்தன் இள ஓமன் என செப்பமாகப் படிக்கலாம். சித்தன் - அறிவன் என சுட்டப் படும் ஆன்றோர். இள - இளைமைக் கருத்து. ஓமன் - பழந் தமிழ்ப் பெயர் இன்றும் தமிழகத்தில் வழங்குகிறது. பெண் பால் ஓமனை.


Khumban Numena 692-688 B.C. > தமிழில் கம்பன் நம் இன்ன > கம்பன் நம்மன் இன்னன் என செப்பமாகப் படிக்கலாம்.கமபன் - அன் ஈறு தெளிவாக உள்ளது. பல்லவன் கம்ப வர்மனை வென்று பிற்காலச் சோழர் ஆட்சி நிறுவப்பட்டது. கம்பன் பெரும் புலவன். சிந்து முத்திரை M1206, IsD,பக்.168. நம்மன் - பானைஓட்டு சிந்து எழுத்துப் பெயர். இன்னன் - சிந்து முத்திரைப் பெயர் M2527,IsD, பக்.121.


Khurbatila > தமிழில் குறவ அத்திள > குறவன் அத்தி இள என செப்பமாகப் படிக்கலாம். குறவன் - குறிஞ்சி நிலமகன் சப்பான் மன்னர் ஈமப் பெயர் Takakura 1168-1180 AD > தமிழில் தக்க குற > தக்கன் குறவன் என செப்பமாகப் படிக்கலாம்.அத்தி - சிந்து முத்திரையில் ஏராளமாக காணப்படும் சேரப் பெயர். இள - இளமைப் பொருள். அத்திள - உரோமப் பேரரசை படையெடுப்பில் விழ்த்திய Hun தலைவன் Atila 434 - 453 A.D. > தமிழில் அத்திள செப்பமான வடிவம். சிந்து முத்திரை H310a. இவன் ஊர் ஓங்கூர் அதுவே Hungery ஆனதாக அறிஞர் உரைப்பர்.

ஈலம் Awan ஆட்சி வரிசையில்

Peli 2500 B.C. > தமிழில் வில்லி என்பது செப்பமான வடிவம். வகரம் பகரமாய் திரிந்து உள்ளது. சென்னை வில்லவாக்கம், வில்லிபுத்தூர். உறங்கா வில்லி இராமானுசர் வரலாற்றில் தொடர்புடையவர். சேரர் வில்லவன், வில்லி, வில்லாளன் எனப்பட்டனர்.


Tata > தமிழில் தத்தன் என்பது செப்பமான வடிவம். பெரிய புராணம் மெய்ப்பொருள் நாயனார் காவலன் தத்தன். சிந்து முத்திரைப் பெயர் M1415, IsD, பக்.231.


Gir Namme > தமிழில் கீர் நம்மி > கீரன் நம்மன் என செப்பமாக படிக்கலாம். கீரன் - மோசி கீரன் சங்க காலப் புலவர். நம்மன் - இகர ஈறு பெற்ற பானைஓட்டு சிந்து எழுத்துப் பெயர்.


Siwe Palar Hupak > தமிழில் சிவி பள்ளர் காப்அக்> சிவி பள்ளன் காப்பன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம். சிவி - ஒரு சோழன் பெயர் சிபி. பள்ளன் - ஆள் பெயராக வழங்கி சாதிப் பெயராக பின்னர் ஆனது. கி. பி.1014 இராசராசன் கல்வெட்டு பள்ளன் கூத்தன், பள்ளன் கிழான் என இரு இடையரைக் குறிப்பிடுகின்றது. கடைசி scythia மன்னன் Palakus > தமிழில் பள் அக்கு > பள்ளன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம். காப்பன்- சிந்து முத்திரைப் பெயர் K7064B,IsD, பக்.96. காப்அக் - பெரு இன்கா மன்னர்கள் காப்அக் என பட்டம் கொண்டவர்.
Scythia மன்னன் Palakus தந்தை Ateas 339 BC > தமிழில் அதியன் என்பது செப்பமான வடிவம். இவன் Alexander தந்தை Philip II ஆல் கொல்லப்பட்டான். இம்மன்னர் பெயர்கள் சித்தியர் தமிழ் மரபினர் என்பதற்கு சான்று.


Attar Kittah 1390 B.C. > தமிழில் அத்தர் கித்த > அத்தன் கித்தன் என செப்பமாகப் படிக்கலாம். அத்தன் - தேவாரத்தில் பதிவு எய்தி உள்ள விளிச்சொல். சிந்து முத்திரைகளிலும் பதிவாகி உள்ளது. 9903,IsD, பக்.91
கித்தன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர். சப்பானில் இன்றும் வழங்குகிறது.


Umman Unu I > தமிழில் உம்மண் உன்னு > உமண் உன்னன் என செப்பமாகப் படிக்கலாம். உமண் - சிந்து முத்திரைப் பெயர் M1537,IsD,பக்.114. தமிழ் இலக்கியங்களில் உப்பு வணிகர் உமணார் எனப்பட்டர்.சிந்து எழுத்து பொறித்த தமிழக் பானை ஓடுகளிலும் உமண் பொறிப்பு உள்ளது. உன்னன் - சிந்து முத்திரைப் பெயர் M207,IsD,பக்.88. இங்கு உகர ஈறு பெற்றுள்ளது. உன்னி என கேரளத்தில் இன்றும் வழங்குகிறது.


சிறு ஈலமிய அரசியங்களின் அரசர்கள்

Manana 1886- 1881 B.C. > தமிழில் மா நன்ன > மா நன்னன் என செப்பமாக படிக்கலாம். மா - பெருமைக் கருத்து. சிந்து முத்திரைகளிலும், சங்க இலக்கியங்களிலும் பயில்வுற்றுள்ளது. நன்னன் - சிந்து முத்திரைப்
பெயர், M1070,IsD,பக்.85. கொரிய நாகரிகத்தில் தங்கன் வழியில் Maereuk 704 - 646 BC> மா எரிஅக்.


Tammaritu 653 - 652 B.C. > தமிழில் தாம் அரிது > தாமன் அரிதன் என செப்பமாகப் படிக்கலாம். தாமன் - அல் ஈறு பெற்ற தாமல் ஏரி காஞ்சி மாவட்டத்தில் உள்ளது. அரிதன் - விக்கிரமங்கலம் தமிழி கல்வெட்டில்
8:1 எயில் அரிதன் செய்வித்தோன் என பொறிக்கப்பட்டு உள்ளது. இங்கு உகர ஈறு வந்துள்ளது.



Zari மக்களுடைய மன்னன் பெயர் Appalaya > அப்பல் ஆய > அப்பன் ஆயன் என செப்பமாகப் படிக்கலாம். அப்பன் - மதிப்படைச் சொல்லாக பழனியப்பன், அழகப்பன் என இன்றும் வழங்குகிறது. மன்னன் பெயர் அல் ஈறு பெற்று உள்ளது. சிந்து முத்திரை C5056,IsD, பக்.116 ஆயன் - ஒரு பழந்தமிழ்ப் பெயர் பின் குலப் பெயர் ஆனது. சிந்து முத்திரை M2509,IsD,பக்.261.


Rulers of Eshnunna


Kallamu > தமிழில் கள்ள அம்மு > கள்ளன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம். கள்ளன் - பண்டு பெயராக வழங்கிய சொல். அம்மன் - ஆடவர்க்குப் பெயராக வழங்கியது. அம்ம(ன்)ம்பாளையம் சேலத்து ஊர்.

Bilalama > தமிழில் வில்லாள் அம்ம > வில்லாளன் அம்மன் என செப்பமாகப் படிக்கலாம். வில்லாளன் - சேரர் வில்லாளர் எனப்பட்டனர். வ > ப திரிபு.


திரை நகர பாலினேசிய அரசர்கள் > Polynesian Kings of Tyre


Aribas 1230 B.C. > தமிழில் அறிவன் என்பது செப்பமான வடிவம்.செவ்வாய்க் கோள் அறிவன் எனப்பட்டது. வ>ப திரிபு.


Ithobaal I 878 - 847 B.C. >. தமிழில் இத்த வால் > இத்தன் வால் என செப்பமாகப் படிக்கலாம். இத்தன் - சிந்து முத்திரைப்பெயர். அகரம் ஒகரமாக திரிந்துள்ளது. வால் - ஒளிரும் வெண்மை. வால் > பால்.சப்பானிய முதல் பிரதமர் Ito Hiro Bumi. தானசானியா அதிபர் Julius Nyerere தந்தை Nyerere Burito 1860- 1942 > பூரி இத்த.


Hiram I 980 - 947 B.C. > தமிழில் கீரம் > கீரன் என செப்பமாகப் படிக்கலாம். பிற நாகரிகங்களில் க > ஹ என திரிந்துள்ளது. அம் ஈறு வந்துள்ளது.புகளூர் தமிழி கல்வெட்டு 20:12 ல் ணாகன் மகன் பெருங்கீரன்.


Mattan I 840 - 832 B.C. > தமிழில் மத்தன் அன் ஈறு பெற்று செப்பமாக உள்ளது. சிந்து முத்திரைகளில் மத், மத்தி என்றும் பதிவாகி உள்ளது. T, நரசிபூர் சிந்து எழுத்து பானை ஓட்டில் உள்ளது. சிந்து முத்திரை
MS 5065. Marduk shapik Zer Mati 1094-1083 B.C. இதில் மத்தி உள்ளது.


Yarla Ganda 2162 - 2156 B.C. > தமிழில் இருள கண்ட > இருளன் கண்டன் என செப்பமாகப் படிக்கலாம். இருளன் - இருளப்பன், இருளாண்டி இன்றும் தமிழகத்தில் வழங்கும் பெயர். கண்டன் - இராசராச சோழன்
கல்வெட்டில் வழங்கும் பெயர்.

Qumani என்பது ஓர் ஊர்ப் பெயர். சங்க இலக்கியத்தில் குமணன் ஒரு வள்ளல். குமணை இன்று ஓர் ஈழத்து ஊர்
.
மேற்கோளில் ஆயப்பட்ட பெயர்களில் அன் ஈறு வரும் இடங்களில் அது தவிர்க்கபபட்டு ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கால் தமிழர் பலர் மதம், புதுமை காரணமாகத் தமிழ்ப் பெயர்களைத் துறந்து பொருளற்ற பெயர்களைக் கொண்ட நிலையில் பல தொன் நாகரிகங்களில் தமிழ்ப் பெயர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு உரியோரின் பெயராக இருந்துள்ளன என்பது அதன் ஆளுமையை, பெருமையை உலகோருக்குப் பறை சாற்றுவதாய் அமைந்து உள்ளது.

மேற்கூறிய பெயர்களைக் கூர்ந்து நோக்கும் போது அவை செமிட்டிக் மயமாக்கப்பட்டுள்ளன என்பதோடு அப்பகுதியே தமிழர் தோன்றிய நிலப்பகுதி என்று கருத்துரைப்போரின் கருத்தை பொய் ஆக்கவல்லது
என்பது தெளிவாகிறது. உண்மையில் தமிழர் அங்கிருந்து வந்து இருந்தால் சிந்து எழுத்திலும், இக்கால் உள்ள தமிழ் எழுத்திலும் கடு,எடுப்பு, கனைப்பு ஒலிகள் இருந்திருக்கும். ஆனால் மெல் ஒலிகளே உள்ளன எனும் போது தெற்கே இருந்து அவர்கள் அங்கு குடியேறிய பின்பு ஆரியர் தொடர்பால் அவ் ஒலிகளை அவர்கள் அறிந்தனர் என்பதே ஏற்புடையது. ஆதலால் தெற்கே இருந்து குடியேறிய மக்கள் காலத்தால் 8,000 ஆண்டுகள் பழமையுடைய சுமேரிய நாகரிகத்தினும் 10,000 ஆண்டுகளுக்கு மேல் தொன்மையானவர் எனக் கொள்வதில் தவறு இல்லை.


தமிழறிந்த அறிஞரால் மட்டுமே இவ் ஒப்பாய்வை வளர்த்தெடுக்க இயலும் என்பதால் இன்னும் பல அறிஞர்கள் இவ் ஒப்பாய்வை மேம்படுத்தினால் தமிழ்,தமிழர் தொன்மை உலகுக்கு அறியவரும்.


எழுதியவர் திரு சேஷாத்ரி ஸ்ரீதரன்


--Geetha Sambasivam 13:26, 9 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2011, 13:44 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,563 முறைகள் அணுகப்பட்டது.