மேலை நாகரீகங்களில் தடம் பதித்த தமிழ்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

உலகில் இன்றுள்ள பல பொதுத் தன்மைகளுக்கு மூல தாய் நாகரிகம் பல்லிடங்களில் வேரூன்றிக் கிளைத்ததுவே காரணம். அந்த மூல தாய் நாகரிகம் தமிழர் நாகரிகமே என்பதற்கு பண்டைய நாகரிக ம்ன்னர் பெயர்களும், ஊர்ப பெயர்களும் தமிழாக இருப்பது தமிழரின் உலகப் பரவலுக்கு பெருஞ் சான்றாக உள்ளன. இவ்வாறான் ஒரு தடயம் இடம் பெயர்ந்த தமிழர் தாய் நாகரிகத்தை மறவாது கொடுக்கல் வாங்கலில் தொடர்ந்து அதனுடன் ஈடுபட்டும் மண உறவு செய்தும் பலகாலம் தம் தொடர்பைப் பேணி வந்ததாலேயே இன்று நமக்கு அதன் எச்சமாக இப்பெயர்ச் சான்று கிட்டுகின்றது


இந்து மாக் கடலில்.அமைந்திருந்த தென் புலத்திலிருந்து இடம் பெயர்ந்த மூல நாகரிகத் தமிழர் நடு அமெரிக்காவில் மாயன், தென் அமெரிக்கப் பெருவில் இன்கா ஆகிய நாகரிகங்களைத் தோற்றுவித்து தொலைகிழக்கு ஆசியாவில் சீனா, கொரியா, சப்பான் ஆகிய நாகரிகங்களையும் ஆப்பிரிக்காவில் எகிபது, எதியோபிய நாகரிகங்களையும் அவ்வாறே மேலை ஆசியாவில் சுமேரியா, ஈலம், பொனீசியா ஆகிய நாகரிகங்களையும் தொற்றுவித்து உள்ளனர்.


இக்கட்டுரை, சிறப்பாக, சுமேரியா, ஈலம், பொனீசியா ஆகிய நாகரிகங்கப் பகுதிகளிலும் அதன் சுற்று இடங்களிலும் தமிழின் தடங்களுக்கு எச்சமாக உள்ள பெயர்களை சிந்து முத்திரைப் பெயர்கள், சங்க இலக்கியப் பெயர்கள், தமிழ் பிராமி கல்வெட்டுப் பெயர்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு ஆய்கிறது.


இவ் ஆய்வில் மேலை நாகரிக மன்னர், ஊர் மற்றும் தெய்வப் பெயர்களை ஒப்பிட்டதில் அவை தமிழாய் இருப்பது இந்தாகரிகங்களை மூல தாய் நாகரிகத் தமிழர் அங்கிருந்த பழங்குடிகளொடு இணைந்து உண்டாக்கி இருத்தல் வேண்டும் என்று புலனாகின்றது. ஐயாயிரம் ஆண்டுகளளவில் செமிட்டிக் மக்கள் கலப்பு பெருமளவில் ஏற்பட்டதால் அவை செமிட்டிக் மயமாகிப் போனாலும் தொடக்கத்தில் தமிழாகவே இருந்திருத்தல் வேண்டும் ஏனெனில் மூல தாய் நாகரிகத் தமிழர் தம் முன்னோரைத் தெய்வமாக வழிபட்டு அது காலத்தால் நிலைபெற்று பின்னாளில் அத்தெய்வங்களுக்கு சிறப்புப் பண்புகள் ஏற்றப்பட்டிருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது.


மூல தாய் நாகரிகத் தமிழர் இந்நாகரிகங்களை 9,000 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்படுத்தும் போது தமிழில் ஆண் பால் அன் ஈறு வழங்கவில்லை. அது 6,000 ஆண்டுகள் அளவில் அறிமுகமான போதும் பலர் அதை பின்பற்றாது அன் ஈறு அற்ற பழைய முறையையே பல காலம் பின்பற்றி உள்ளனர். அன் ஈறுடன் அல், அம், அர், உகர, இகர, ஐகார ஈறுகளையும் அவர்கள் கைக்கொண்டனர் எனத் தெரிகிறது. இன்று அன் ஈறு மட்டும் வழங்குகிறது. பிற ஈறுகள் கைவிடப்பட்டு விட்டன. சிந்து வெளி முத்திரைகள் இதற்கு சிறந்த சான்று. பேரா. இரா.மதிவாணன் சிந்து எழுத்துகளையும், முத்திரைகளையும் மிகத் துலக்கமாகப் படித்துள்ளதால் இவ் ஆய்வில் அவருடைய Indus script Dravidian (IsD), 1995 என்ற நூல் மேற்கோள் நூலாகக் கொள்ளப்பட்டிருக்கினறது. சிந்து முத்திரை வாசிப்பின் துணையின்றி எவராலும் இப் பெயராய்வை மேற் கொள்ள இயலாது. இப்பெயர் ஆய்வு ஒலி ஒப்புமையை மட்டுமே கருத்தில் கொண்ட ஒரு தொடக்கக் கட்ட ஆய்வு,


அசீரிய சுமேரிய நாகரிக தெய்வங்கள்


அசீரியாவின் முதல் பூசக இளவரசர் (Priest prince) முதற்கொண்டு பலர் Ishakku என பட்டம் கொண்டு இருந்தனர். இந்த இசக்கு என்பது தமிழில் இசக்கி என இன்றும் நெல்லை மாவட்டத்தில் வழங்குகின்றது.

பாபிலோனிய அசீரிய தெய்வங்களின் பெயர்கள் சில தமிழாய் உள்ளன.


எழுத்துத் தெய்வம் Nabu எனப்பட்டது தமிழில் இதை நப்பு > நப்பன் என செப்பமாகப் படிக்கலாம். நப்பன் என்ற பெயர் தமிழக சிந்து பானை ஓடுகளிலும், சிந்து முத்திரைகளிலும் பதிவெய்தி உள்ளது M 1656.


புயல் தெய்வம் Adad எனப்பட்டது.தமிழில் ஆத் ஆத் > ஆதன்ஆதன் என அன் ஈறு சேர்த்து படிக்கலாம். அழகர் மலை தமிழி கல்வெட்டில் 12:1 மதிரை பொன் கொல்வன் ஆதன் ஆதன் என பொறிக்கப்பட்டு உள்ளது.


வான் தெய்வம் Anu எனப்பட்டது. தமிழில் அன்னு > அன்னி > அன்னன் என செப்பமாகப் படிக்கலாம். சிந்து முத்திரைகளில் பதிவு எய்தியுள்ள பெயர். M1160.


வெள்ளநீர்த் தெய்வம் Ea எனப்பட்டது. அன் ஈறு சேர்த்து இயன் > இயனன் என செப்பமாக படிக்கலாம். சிந்து முத்திரையில் பதிவெய்தி உள்ளது. H3457.


பாபிலோன் தலைமைத் தெய்வம் Marduk எனப்பட்டது Bel > வேள் எனவும் சொல்லப்பட்டது. தமிழில் மருது உக் > மருது உக்கு > மருது உக்கன் என செப்பமாக படிக்கலாம்.


காட்டுத் தீயைக் க்ட்டுப்படுத்தும் தெய்வம் Nergal எனப்பட்டது. தமிழில் நெருகல் என செப்பமாகப் படிக்கலாம். எரிகல் என்னும் களப்பிர மன்னன் இருந்தான். நெருகல் எரிகல் இரண்டு ஒரே பொருள் உடைத்து.


ஞாயிற்று தெய்வம் utu எனப்பட்டது.. தமிழில் உத்து > உத்தன் என செப்பமாகப் படிக்கலாம். சிந்து முத்திரையில் இப்பெயர் பதிவெய்தி உள்ளது.M1243.


நிலவுத் தெய்வம் Nanna எனப்பட்டது. தமிழில் நன்ன > நன்னன் > நன்னவன் என அன் ஈறு இட்டுப் படிக்கலாம். சங்க இலக்கியத்திலும், சிந்து முத்திரையிலும் பதிவெய்தி உள்ளது. M 1070.


நீர்த் தெய்வம் Nammu எனப்பட்டது. தமிழில் நம்மு > நம்மன் என செப்பமாகப் படிக்கலாம். தமிழக் சிந்து எழுத்துப் பான் ஓடுகளிலும், அரப்பா பானை ஓட்டிலும் இப்பெயர் காணப்படுகிறது.


செழுமைத் தெய்வம் Dagan எனப்பட்டது தமிழில் தக்கன் என்பது செப்பமான வடிவு. தமிழின் ஆண்பால் ஒருமை ஈறு அன் தெளிவா இங்கு இடம் பெற்றுள்ளது. கோவை சூலூர் மட்கலனில் தக்க இன்னன் என எழுதப்பட்டுள்ளது. சப்பான் நாகரிகத்திலும் தக்க என்ற பெயர் உண்டு.


அசீரியாவின் ஞாயிற்றுத் தெய்வம் Assur எனப்பட்டது தமிழில் அசூர் என்பது செப்ப வடிவு. தமிழ்நாட்டில் திருச்சி செங்கலூர் போகும் வழியில் அசூர் எனும் ஊர் உள்ளது. பண்டு இது ஆள் பெயராக வழங்கி உள்ளது.


அசீரிய மன்னர்கள் > Assyrian kings

Shamshi Adad I 1813 - 1791 B.C. தமிழில் சாம் சேய் ஆத் ஆத் > சாமன் சேய் ஆதன் ஆதன் என செப்பமாகப் படிக்கலாம். சாமன் - சிந்து முத்திரைப் பெயர் M 2574.. சேய் - மேட்டுப்பட்டி தமிழி கல்வெட்டு 9:8 குவிர அந்தை சேய் ஆதன் எனப் பொறிக்கப்பட்டு உள்ளது. ஆத்ஆத் அசீரியத் தெய்வம். அழகர் மலை தமிழி கலவெட்டில் 12:4 கணக ஆதன் மகன் ஆதன் ஆதன் என உள்ளது.

இம்மன்னது போர் அரசிய உறவு ஆகியவற்றுடன் தொடர்புடைய வேளிர்கள் கீழ்வருமாறு:

Igur Kap Kapu > தமிழில் இக்கர் காப் காப்பு > காப்பன் காப்பு என செப்பமாகப் படிக்கலாம். சிந்து முத்திரைப் பெயர் K7064B, IsD பக்.96.மேலை ஆசியாவில் மன்னன் கல்லறையில் கிட்டிய சிந்து முத்திரை ஒன்றில் காப் காப்பு என உள்ளது .

Bel Kap Kapu > தமிழில் வேள் காப் காப்பு > வேள் காப்பன் காப்பு என செப்பமாகப் படிக்கலாம். வேள் ஒரு தெய்வப் பெயர். இதற்கு பெருமான் (Lord) எனப் பொருள். வகரம் பகரமாய்த் திரிந்து உள்ளது.

Bel Bani > தமிழில் வேள் வண்ணி > வேள் வண்ணன் என செப்பமாகப் படிக்கலாம் வ > ப கடு ஒலித் திரிபு. சிந்து முத்திரைகளில் காணப்படும் பெயர் வண்ணன்.M314a . கொடுமணல் பானை ஓடுகளிலும் காணப்படுகிறது. இப்பெயர் இகர ஈறு பெற்றுள்ளது.


Puzur asshur 1420 B.C. > தமிழில் பழர் அசூர் > பழன் அசூர் > பழயன் ஆசூர் என செப்பமாகப் படிக்கலாம். அர் ஈறு பெற்றுள்ளது. பழயனூர் ஒரு தமிழ் நாட்டு ஊர். பழையன் கோச் செங்கணானின் படைத் தலைவன். அசூர் ஒரு அசீரியத் தெய்வம்.


Asshur na Dinakhe > தமிழில் அசூர் ந திண் அக்கி> ந திண்ணன் அக்கன் என செப்பமாகப் படிக்கலாம்.
ந - சிந்து முத்திரைகளில் பெயர்களின் நடுவே ஒற்றை எழுத்தாக வருகின்றது. இதற்கு சிறப்புப் பொருள் இருக்க வேண்டும். சிந்து வெளி தவிர சப்பான் நாகரிகத்திலும் மன்னர் தம் ப்ட்டப் பெயரிகளில் ந ஒகரத் திரிபு பெற்று No Mikado > ந மய் காட என உள்ளது. திண்ணன் - சிந்து முத்திரைகளில் அன் ஈறு பெற்றும் பெறாமலும் இப்பெயர் உள்ளது.H3645, IsD பக். 99. கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் திண்ணன். அக்கன் - மருங்கூரில் கிட்டிய சிந்து பிராமி எழுத்து கலந்த பானை ஓட்டில் அதிஅகன்(அத்தி+அக்கன்) என எழுதப்பட்டுள்ளது. சிந்து முத்திரை M3372, IsD பக்.97 அ க்கன் அல், அர், இ, உ ஈறுகளைப் பெறுவதும் உண்டு.


Asshur Uballit 1370 B.C. > தமிழில் அசூர் உப்பல் இத் > உப்பன் இத்தன் என செப்பமாகப் படிக்கலாம்.
உப்பன்- கொடுமணல் சிந்து எழுத்து பானை ஓடுகளில் வரும் பெயர். இங்கு அல் ஈறு பெற்று உள்ளது. இத்தன் - சிந்து முத்திரைப் பெயர் M2148, IsD பக.122.

இம்மன்னனது போர் அரசிய உறவு ஆகியவற்றில் தொடர்புடைய் வேளிர் பின்வருமாறு.


Bel Nirari 1370 B.C. > தமிழில் வேள் நய்யர் அரி > நய்யன் அரியன் என செப்பமாகப் படிக்கலாம். நய்யன் - தமிழக சிந்து எழுத்துப் பானை ஓட்டிலும், சிந்து முத்திரையிலும் காணப்படுகின்றது. H3767, IsD பக்.155. அரியன் - அரியக்குடி, அரிட்டாப்பட்டி, அரியான்குப்பம் ஆகியன தமிழ்நாடு, புதுவையில் உள்ள ஊர்கள். தான்சானிய மேனாள் அதிபர் Julius Kambarge Nyerere.


Pudi ILu 1360 B.C. > தமிழல் பூதி இல்லு > பூதன் இல்லன் என செப்பமாகப் படிக்கலாம். பூதன் - சங்க இலக்கியங்களில் பதிவு எய்திய பெயர். இங்கு இகர ஈறு வந்துள்ளது. 63 நாயன்மாருள் ஒருவர் அப்பூதி அடிகள் (அப்பன்.> அப்பு + பூதன் > பூதி). எடக்கல் தமிழி கல்வெட்டு 26:3 கோபூதி விர. என பொறிக்கப்பட்டு உள்ளது. இல்லன் - ஒரு பழந் தமிழ்ப் பெயர். கீழவளவு தமிழி கலவெட்டு 4:1 உபசன் தொண்டி (இல்)லவோன் கொடு பளிஈ என தமிழ்நாடு தொல்லியல் துறையின் தமிழ் - பிராமி கல்வெட்டுகள் என்ற நூலுள் உள்ளது. சீன நாகரிகத்தில் Song ஆள்குடி மன்னன் Liu Yilong 424 - 453 A.D. > தமிழில் ஒளிய இல்லன் என படிக்கலாம். சீனத்தில் னகர மெய் 'ன்' > ஙகர ' ங்' மெய் ஆகத் திரிந்து உள்ளது.



எழுதியவர் திரு சேஷாத்ரி ஸ்ரீதரன்


--Geetha Sambasivam 13:23, 9 ஜூலை 2011 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 9 ஜூலை 2011, 13:42 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 2,017 முறைகள் அணுகப்பட்டது.