மேனிப் பராமரிப்புக்குமரபு விக்கி இருந்துவீட்டு மருந்துக் குறிப்புகள்: கண்களுக்குக்கீழே உள்ள கருவளையம் போக்கப் பயத்த மாவு, கசகசாவை அரைத்துப் பூசி வர வேண்டும். தோல் தடிப்புக்கு பூவன் வாழைப்பழத்தை மசித்து மேலே தேய்க்கவும். சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்க பச்சைப் பயறு மாவு, கொண்டைக்கடலை மாவு, அரிசி மாவு, சர்க்கரை சம அளவு எடுத்துக் குழைத்து முகத்தில் தடவிக்கொள்ளவும். வட்ட வடிவத்தில் மசாஜ் செய்யவும். சற்று நேரம் ஊறியதும், வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவவும். கடுக்காய்ப் பிஞ்சை வாங்கி மோரில் ஊற வைத்து அம்மியில் அரைத்து விழுதைத் தலையில் தேய்த்துக்கொள்ளவேண்டும். பதினைந்து நிமிடம் ஊறிவிட்டுக் குளித்தால் உடலுக்கும், தலைச்சூடு குறைந்து குளிர்ச்சியாக இருக்கும்.
பெண்களுக்குப் பருவ வயதில் முகப்பருவா? வேனல் கட்டிகளா? மேலே சொன்ன வசம்பையும், கஸ்தூரி மஞ்சளையும் எடுத்துச் சந்தனக்கல்லில் உரைத்து முகத்தில் தடவிக்கவும். இரவு தினமும் தடவிண்டு காலையில் முகத்தை அலம்பினால் கட்டியோ, பருவோ வந்த அடையாளம் கூட முகத்தில் இருக்காது. சொந்த அநுபவம் உண்டு. அப்படியும் கரும்புள்ளிகள் இருந்தால் குப்பைமேனிக்கீரையோடு, வெற்றிலையும் சேர்த்து அரைத்துச் சாறை முகத்தில் பூசிப் பத்து நிமிஷம் ஊறிவிட்டுக் குளிக்கலாம். இதுவும் சொந்த அநுபவம் உண்டு. தேங்காய்ப்பாலோடு அல்லது பசும்பால், இல்லாட்டியும் பரவாயில்லை, பாலோடு கசகசாவை ஊறவைத்து அரைத்து முகத்தில் மற்றும் சூரியக் கதிர்கள் படும் இடங்களில் தேய்த்து ஊறிவிட்டுக் குளிக்கலாம். இவை எல்லாமே நம்ம சமையலறையில் கிடைக்கும் பொருட்கள். அவற்றைக் கொண்டே பயன்பெறலாம் இல்லையா?
50 கிராம் எள்ளை நன்கு ஊற வைக்கவும். அதை நன்கு அரைத்துத் தலையில் தடவிக்கொண்டு சிறிது நேரம் ஊறிவிட்டுக் குளிக்கவும். தலைச்சூடு குறைவதோடு நரையும் தெரியாது.
சீயக்காய், காய்களாக அரைகிலோ வாங்கிக் காய வைத்துக்கொள்ளவும். இதோடு பச்சைப் பயறு கால் கிலோ, புழுங்கலரிசி, நூறு கிராம், கோரைக்கிழங்கு கால் கிலோ, வெந்தயம் நூறு கிராம், வேப்பிலை காய வைத்தது இரண்டு கைப்பிடி, வெட்டி வேர்(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம், எலுமிச்சைத் தோல்கள் காய வைத்தது, செம்பருத்திப் பூக்கள், இலைகள், இரண்டு கைப்பிடி, கறிவேப்பிலை காய்ந்தது இரண்டு கைப்பிடி, நெல்லிமுள்ளி(நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும்) 50 கிராம் அல்லது பத்து பெரிய நெல்லிக்காய்கள் காய வைத்தது. இவை அனைத்தையும் நன்கு காய வைத்து சீயக்காய் அரைக்கும் மாவு மிஷினில் கொடுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். வாரம் ஒரு முறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக்குளிக்கையில் பயன்படுத்தலாம். தினசரி உடலுக்குத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டு ஊறிப் பின்னர் இந்தப் பொடியாலும் உடலைத் தேய்த்துக்கழுவலாம்.
--Geetha Sambasivam 09:35, 16 ஜூலை 2011 (UTC) |