Meykandar and Tolkaappiyam(Tamil)
மெய்கண்டாரும் தொல்காப்பியமும்
முனைவர் கி.லோகநாதன் 2003
1.0: சைவத்தை தொல்காப்பியம் செய்தல்
1.1.1 தமிழப் புலவர்களிடையே ஓர் பெருங்குறை உண்டு. அது யாதெனில் வரலாற்றையும் புராணத்தையும் பிரித்து அறியாது ஒன்றை பிறிதொன்றோடு மயங்கவிட்டு உண்மையை அறியாது இடர்படுவதுதான். வரலாற்றை அதற்கு¡¢ய இலக்கணங்களோடு,வரலாறாகக் காணமுடியாது போய்விட பொய்க் கதைகள் பல சொல்லி ஒர் குழப்பத்தை உண்டாக்க, வரலாற்று உண்மைகளை திரித்து சொல்வது எளிதாகிவிட்டது. சிவஞானபோதம் இரெளராகமத்தில் வரும் பன்னிரண்டு சூத்திரங்களின் மொழி பெயர்ப்பு என்பது போன்ற பொய்க் கதைகளையும் பிறவற்றையும் மெய்யான வரலாற்றுக் குறிப்புகளிலிருந்து பி¡¢த்தறிவது சிற்சில சமயங்களில் மிகவும் சிரமான ஒன்றுமாகும். வரலாற்று சிறப்புமிக்க
யாரையோ எதனையோ எடுத்துக் கொண்டாலும் புனைக்கதைகளாகப் பல பயில்கின்றனவேத் தவிர மெய்யான வரலாற்றுக் குறிப்புக்கள் மிக அ¡¢தாகவே கிடைக்கின்றன. கல்வெட்டுகள் இவ்வகையில் பேருதவி என்ற போதிலும் எல்லாவற்றிற்கும் அவை கிடைப்பதில்லை. இவ்வகையில் வரலாற்று சிறப்புமிக்க மெய்கண்டார் விசயத்திலும்
இதனையேக் காண்கின்றோம். சில வரலாற்றுக் குறிப்புக்கள் பல புராணக் கதைகளோடும் புனைகதைகளோடும் கலந்தே வர உண்மையைப் பி¡¢த்தறிய பல சங்கடங்கள். ஆயினும் சிவஞானபோதம் தன் அகத்தே கொண்டிருக்கின்ற குறிப்புகள் வழி அவரைப் பற்றி இதுவரை கூறப்படாத ஓர் உண்மையை தக்கச் சான்றுகளோடு எடுத்துக்கூறுவதே இப்படலத்தின் நோக்கமாகும். சைவ சமய வளர்ச்சியில் மாபெரும் திருப்புமுனையாகிவிட்ட சிவஞானபோதத்தை உலகிற்களித்த மெய்கண்டார் உண்மையில் ஓர் பெரும் இலக்கணப் புலவராக வாழ்ந்தே, அதிலும் பெரும் தொல்காப்பிய புலவராக வாழ்ந்தே சைவ சமய சிந்தனைக்கு வந்திருக்கவேண்டும். இந்த தொல்காப்பியப் புலமையே, சைவ சமய வரலாற்றில் ஓர் பெரும் புரட்சி செய்யவுங் காரணமாகவும் இருந்திருக்கின்றது. அகச் சந்தானத்து பரஞ்சோதி முனிவர் மெய்கண்டார் அகத்தெழுந்து சிவஞானம் புகட்டியிருக்கலாம். ஆயினும் இவ்வாறான இறையருளைப் பெறுவதற்கும், பொ¢தும் பிரபலமாக இருந்த ஆதிசங்கரது மாயாவாதத்தை வீழ்த்துவதற்கும் வேண்டிய ஆழ்நுழைவுகளை இவரது தொல்காப்பிய பயிற்சியே கொடுத்துள்ளது என்பதற்குப் பல சான்றுகள் இருக்கின்றன. தொல்காப்பியத்தை சிவமயம் படுத்தியவாராக 16ஆம் நூற்றாண்டு பெரும் புலவராகிய கண்கட்டி மறைஞான சம்பந்தர் குறிக்கப்படுகின்றார். இவ்வாறு காணும் போது, சைவத்தையே தொல்காப்பியம் படுத்தியவராக நாம் மெய்கண்டாரைக் குறிப்பிடலாம். இதுவே இவர் செய்த மகத்தான புரட்சி என்று தொ¢கின்றது. இதுவும் ஓர் சாதாரண புரட்சி அல்ல. சமயத்தையே ஓர் அறிவியல் துறையாக்கி அதன்வழி சமயாதீத சைவம் தமிழச் சிந்தனையில் தழைத்தெழுந்து சுடர அடிகோலியவருமாகின்றார்.
இதற்கான சான்றுகள் என்ன?
1.1.2 சூத்திர யாப்பு
நெடிய சைவ வரலாற்றில் சைவ சித்தாந்தம் தொடர்பாக பன்னூறு நூற்கள் எழுதப்பட்டன வெனினும், சூத்திர யாப்பில் இரண்டே இரண்டு நூற்கள் தாம்: மெய்கண்டா¡¢ன் சிவஞானபோதமும் 15ஆம் நூற்றாண்டு சிவஞானவள்ளலின் சத்தியஞானபோதமும். இதில் முன்னதாகத் தோன்றியது சிவஞானபோதம் என்பது மாத்திரம் அல்ல, இதனைத்
தழுவியே வள்ளலின் நூலும் செல்கின்றது என்பதின், இந்த யாப்பு புரட்சிற்கு உ¡¢யவராக நாம் மெய்கண்டாரையே கொள்ளவேண்டும். திருமுறைகளும் திருமந்திரமும் இந்த யாப்பில் அமைந்தவை அல்ல. மேலும் மெய்கண்டாருக்கு முந்தியதாக விளங்கும் தத்துவநூலாகிய ஞானார்மிதம் சங்ககாலத்து அகவல் யாப்பில் பிழையாது செல்வது.
பதினாங்கு மெய்கண்ட சாத்திரங்களில் போதத்திற்கு காலத்தால் முற்பட்ட திருவுந்தியார் திருகளிற்றுப்படியார் என்பவை சூத்திரயாப்பில் அமைந்தவை அல்ல. இனி எத்தகைய நூற்கள் போதத்திற்கு முன் சூத்திரயாப்பில் இயங்கினவெனின் எல்லாமே இலக்கண நூற்களாக இருக்கின்றன். இவற்றில் காலத்தால் மிகப் பழைமையானது தொல்காப்பியமே. அதற்கடுத்தாற்போல் இருப்பது இறையனார் அகப்பொருளே. யாப்பருங்கல விருத்தியில் இன்னும் பல வழக்கிழந்த பெரும் பெரும் நூற்கள் சில சூத்திரங்களோடு சுட்டப்படுகின்றன. காக்கைபாடினியம், மயேச்சுரம், அவினயம், பல்காயம் என்றவாறு பல. பெரும்பாலனாவை சூத்திரயாப்பிலேயே எழுதப்பட்டிருப்பதை காண்கின்றோம். பதிணென் கீழ்கணக்கு நூற்கள் யாதுமே சூத்திரப்பாவில் எழுதப்படவில்லை. இவ்வாறு இஇலக்கண நூற்களுக்கே
உ¡¢த்தாக நின்ற ஓர் யாப்புவகையை தம் நூலிற்கு மெய்கண்டார் தேர்ந்தெடுத்தார் என்னின் நிச்சயமாக அவர் ஓர் பெரும் இலக்கணப்புலவராக இருந்திருக்கவேண்டும். அதிலும் குறிப்பாக தொல்காப்பியப் பெரும்புலவராக இருந்திருக்கவேண்டும். தம் இளமை காலத்தில் இளைஞர்களுக்கு இலக்கணத்தோடு தமிழை போதித்த ஓர் நல்லாசி¡¢யனாக இவர் வாழ்ந்திருக்கவேண்டும் எனத் தொ¢கின்றது. அவர் காலத்தில், இளம்பூரணர்தம் உரையோடு தொல்காப்பியம் தமிழகத்தில் மிக வி¡¢வாகப் பயிலப்பட்டது என்பது ஓர் வரலாற்று
உண்மையாகும். சேனாவரையர் பேராசி¡¢யர் போன்றோ¡¢ன் உரைகள் இவ்வாறு இல்லையெனில் தோன்றியிருக்க முடியாது என்பதைக் காண்க. குட்டித் தொல்காப்பியம் என்று போற்றப்படும் 'இலக்கணவிளக்கம்' எழுதிய வைத்தியநாத தேசிகர் இஇவ்வாறான ஓர் ஆசி¡¢யப் பெருந்தகைதான்; சிவஞானியுங் கூட, பல புராணங்கள் பாடியிருக்கின்றார். இதனால் ஞானமிர்த வாகீச பண்டிதர் போலன்றி, மெய்கண்டார் எந்தவொரு ஆதீனத்தையும் சாராது சுயமாக வாழ்ந்தவோர் தமிழாசி¡¢யர் என்று தொ¢கின்றது. திருமுறைகளின் பெருந்தாக்கத்தால்தான் இலக்கணப்புலவராக வாழ்ந்தவர் சைவப் புலவராக உயர்ந்தார் என்றும் ஊகிக்கலாம். காலத்தால் திருமுறைகண்ட இராஜராஜ சோழனிற்குப் பிறகு சோழ நாட்டிலேயே வாழ்ந்தவர் என்பதால் திருமுறைகளின் தாக்கத்திற்கும் ஆளாகியிருக்கக்கூடும் என்பது ஏற்கக் கூடியவொன்றே.
மெய்கண்டாரின் தொல்காப்பியப் புலமை
ஓர் நூலினை ஆழ ஆழக் கற்க, அதன் கருத்துக்கள் சிந்தனையில் வெகுவாகக் கலப்பதோடு, அதன் நடையும் தனக்கு¡¢ய ஒன்றாகின்றது. மெய்கண்டார் சூத்திர யாப்பை மாத்திரம் தேர்ந்தெடுக்கவில்லை, தான் யாத்த பல சூத்திரங்களில், தொல்காப்பியச் சூத்திரங்களில் வெகுவாகப் பயிலும் சில அடிப்படைக் கிளவிகளையும் அப்படியே எடுத்துக் கையாள்கின்றார். இதன் வழி தனது ஆழ்ந்த தொல்காப்பியப் புலைமையையும் வெளிபடுத்துகின்றார்.
இவற்றை இப்பொழுது காண்போம்.
1. என்மனார் புலவர்
இத்தொடர் போதத்தில் முதல் சூத்திரத்திலேயே வருகின்றது.
சூ. அவன் அவள் அதுவெனும் அவை மூவினைமையின்
தோற்றியத் திதியே யொடுங்கி மலத்துளதாம்
அந்த மாதி என்மனார் புலவர்.
இதே சொற்றொடர் தொல்காப்பியத்திலும் பல இடங்களில் பயில்கின்றது.காட்டாக:
எழுத்ததிகாரம்
6.நீட்டம் வேண்டின் அவ்வள புடைய
கூட்டி எழூஉதல் என்மனார் புலவர்
33. அளபிறந் து¡¢த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிப இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்
146. ண ந வென் புள்ளிமுன் யாவும் ஞாவும்
வினையோ ரனைய என்மனார் புலவர்
222. செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் தி¡¢யாது என்மனார் புலவர்
483. கிளந்த அல்ல செய்யுளில் தி¡¢நவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு தி¡¢நவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கியல் மருங்கில் உணர்ந்தனர் ஒழுக்கல்
நன்மதி நாட்டத்து என்மனார் புலவர்
இவை எழுத்ததிகாரத்தில் சில இடங்கள். இதேப்போன்று சொல்லதிகாரத்திலும் பொருளதிகாரத்திலும். மூலத்தைப்
பார்த்து கண்டு கொள்க.
2. இரண்டு வகையின் இசைக்கு மன் உலகே
இதுவும் தொல்காப்பியத்தில் பயிலும் ஓர் சொற்றொடர்தான். இது ஆறாம் சூத்திரத்தில் இவ்வாறு பயில்கின்றது:
6. உணருரு வசத்தெனின் உணரா தின்மையின்
இருதிறன் அல்லது சிவசத் தாமென
இரண்டு வகையின் இசைக்குமன் னுலகே
இதேப் போன்ற சொல்லாட்சியை கீழ்வரும் சொல்லதிகார முதற் சூத்திரத்திலும் காண்கிறோம், ஓர் சில வேறுபாடுகளுடன்:
சொல்லதிகாரம்
484: உயர்திணை யென்மனார் மக்கட் சுட்டே
அ·றிணை யென்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன் சொல்லே
இச்சொற்றொடா¢ல் முக்கியமான "இசைக்கும்" என்ற சொல் தொல்காப்பியத்தில் இன்னும் பல இடங்களில் பயிலும் ஒன்றாகும். காட்டாக:
541..............................
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
பால்பி¡¢ந் திசையா உயர்திணை மேன
542. நின்றாங் கிசைத்தல் இவணியல் பின்றே
543. இசைத்தலும் உ¡¢ய வேறிடத் தான
3. ஆணை
இங்கு இச்சொல்லாட்சியோடு ஏறக்குறைய அதேக் கருத்துக்களும் தழுவப்பட்டும் இன்னும் ஆழமுஞ் சென்றுள்ள ஓர் நிலமையை இரண்டாவது சூத்திரத்தில் காண்கின்றோம்.
2. அவையே தானேயாய் இரு வினையின்
போக்கு வரவு பு¡¢ய ஆணையின்
நீக்கமின்றி நிற்கு மன்றே
இதனை கீழ்வருங் களவியல் சூத்திரத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்:
1039. ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்
ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப
மிக்கோன் ஆயினுங் கடிவரை இன்றே
இங்கு "ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்" என்ற கருத்தே இந்த இரண்டாம் சூத்திரத்தின் அடிப்படைக் கருத்து என்பதைக் காண்க. தொல்காப்பியர் எவ்வாறு பொருந்திய ஓர் ஆணும் பெண்ணும் கண்டு திருமணம் செய்து கொள்கின்றார்கள் என்பதை விளக்க, மெய்கண்டாரோ அதனையே பொதுவாக்கி, எல்லா ஆன்மாக்களோடும் அவையேத் தானேயாய் ஒன்றி உயர்ந்து நிற்கும் பாலாகிய சிவபரம்பொருளின் ஆணையின் போ¢லேயே இருவினை வயப்பட்டு பிறந்தும் இறந்தும் உழல்கின்றன என்கின்றார்.
மரபியலின் காண்டிகை உரை.
இங்கு முதற்கண் தொல்காப்பியத்தில் பிற்சேர்க்கையாக விளங்கும் மரபியல் ஓர் தனிப்பட்ட நூலென்றும் தொல்காப்பியத்திற்கு காலத்தால் முற்பட்ட ஒன்றாகும் என்றும் தொ¢கின்றது என்பதை குறிப்பிட வேண்டும். இதனை வி¡¢வாக ஆராய்ந்து வேறொரு கட்டுரையில் விளக்கியுள்ளேன். தொல்காப்பிய செய்யுளியற்கும் மரபியல் செய்யுளியலிற்கும் பல முரண்பாடுகள் உள்ளமையின் இவ்வாறு கூறவேண்டி இருக்கின்றது. மெய்கண்டார் தமது சிவஞானபோதத்தில் மரபியலில் கூறப்படும் நூலியல்பு பற்றியே தமது போதத்தை யாத்துள்ளதை இங்கு நாம் விளக்குவோம். தொல். கூறும் சூத்திர இலக்கணத்திற்கும் மரபியல் கூறுவதற்கும் பெருத்த வேறுபாடு உண்டு. ஒன்று உரை வகை வேண்டாமென , பிறிதொன்று வேண்டுமென்கின்றது. காண்க
தொல். செய்யுள்.
1425:
அவற்றுள்
சூத்திரந் தானே
ஆடி நிழலின் அறியத் தோன்றி
நாடுத லின்றி பொருள்நனி விளங்க
யாப்பினுள் தோன்ற யாத்தமைப் பதுவே
என்று கூற, மரபியல் வேறுவகையில் விளக்குகின்றது.
1600
மேற்கிளந் தெடுத்த யாப்பின் உட்பொருளொடு
சில்வகை எழுத்தின் செய்யுட் டாகிச்
சொல்லுங் காலை உரைஅகத்து அடக்கி
நுண்மையொடு புணர்ந்த ஒண்மைத் தாகித்
துளக்கல் ஆகாத் துணைமை எய்தி
அளக்கல் ஆக அரும்பொருட் டாகிப்
பல்வகை யானும் பயன்றொ¢ வுடையது
சூத்திரத்து இயல்பென யாத்தனர் புலவர்
முன்னது, நாடுதல் வேண்டாவகையில் பொருள் இனிதே விளங்கும் வகையில் யாக்கப் படுவது சூத்திரம் என்று கூற, பின்னது பு¡¢ந்துகொள்வதற்கு எளிதில் ஆகா வகையில் ஆழமான ஒண்மைகளாகிய ஞானத்தெளிவுகளை சில்வகை எழுத்தின், பல்வேறு வகையில் பயன்படுமாறு ஆகவே உரையொன்றை நிச்சயமாக வேண்டப்படுவதாகவும் திகழ்வது
என்கின்றது. இப்படிப்பட்ட "நுண்மையொடு புணர்ந்த ஒண்மைகளை", அதாவது மிக மிக ஆழமான உண்மைகளையே மெய்கண்டார் "பிரமாணம்" என்ற சொல்லால் சுட்டுகின்றார். ஆங்கிலத்தில் சொல்லும்போது இவற்றை "AXIOMATIC TRUTHS" எனலாம். இப்படிப்பட்ட நுண்மையோடு புணர்ந்த ஒண்மைகளே அனைவராலும் உண்மை எனக்
கொள்ளப்பட்டு ஏற்றுக்கொள்ளக் கூடுவதுமாகும். எளிதில் அளந்து உண்மையென நிறுத்துதற்கு வாரா அரும்பொருள் என்பதின் மலைத்து நிற்கும் பிறரும் ஏற்றுக்கொண்டு உடன்படும் வகையில் தெளிவாக்கும் முயற்சியின் வெளிப்பாடே காண்டிகை உரை என்பது. தான் கண்ட ஓர் ஆழமான உண்மையை பிறரும் காணவைப்பதே காண்டிகை உரையாகும்.
இது "காண்டீக" என்றவோர் பழந்தமிழ் சொல்லிருந்து வந்திருக்க வேண்டும்.
"பிரமாணம்" என்ற சொல்லிற்கு இப்படிப்பட்ட ஓர்பொருள், அதாவது "நுண்மையொடு புணர்ந்த ஒண்மை" என்றவாறு பண்டே இருந்ததை கீழ் வரும் திருகடுகம் எனும் கீழ்கணக்கு நூல் விளக்குகின்றது.
37. குறளையுள் நட்பு அளவு தோன்றும்; உறல் இனிய
சால்பினில் தோன்றும் குடிமையும்; பால் போலும்
தூய்மையில் தோன்றும் பிரமாணம்:--- இம் மூன்றும்
வாய்மை உடையார் வழக்கு
இங்கு பிரமாணம் என்பது அளவை என்றல்லாது அதாவது நையாயிகத்தின் "பிரமா கரணம் பிரமாணம்" என்றல்லாது, அகத்தூய்மையின் காரணமாக உள்ளத்தில் எழும் ஆழமான ஞான வெடிப்பு என்று கூறப்படுவதைக் காண்க. இப்படிப்பட்ட ஞானத்தெளிவுகளைத்தான் முதற்கண் உத்தேசமாக மொழிந்து பிறகு தக்க ஏதுக்களையும் எடுத்துக்காட்டுகளையும் தந்து பிறரையும் அதன் உண்மையைக் காணவைத்து அதன்வழி உடன்படுமாறு செய்யமுடியும். அவ்வாறு செய்யப்பட அது நிகமனமாகின்றது; ஞானக் குருடாக இருக்கும் ஒருவனது ஞானக் கண்களைத் திறந்து விட்டு அவன் இதுவரைக் கண்டறியாவொன்றைக் காணத்தருவதாகும். இவ்வாறு உத்தேசமாக மொழியப்படும் ஓர் சூத்திரத்து உட்பொருளை காணத்தரும் வகையில் தக்க ஏதுக்கள் எடுத்துக்காட்டுகள் வழி நிகமனமாக்குவதே காண்டிகை உரையின் பண்பாகும் என்று மரபியல் விளக்குகின்றது.
1601. பழிப்பில் சூத்திரம் பட்ட பண்பின்
கரப்பின்றி முடிவது காண்டிகை யாகும்
1602. விட்டுஅகல் வின்றி வி¡¢வொடு பொருந்திச்
சுட்டியச் சூத்திரம் முடித்தற் பொருட்டா
ஏது நடையிலும் எடுத்துக் காட்டினும்
மேவாங்கு அமைந்த மெந்நெறித் ததுவே
இங்கு பழிப்பில் சூத்திரம் முதலில் கரப்போடு, அதாவது தெளிவற்ற நிலையில் தோன்றுவதே 'உத்தேசம்' எனப்படுவது. பிறகு காண்டிகை உரைவழி இருக்கின்ற கரப்பினை, தெளிவற்ற நிலையை, போக்கி அச்சூத்திரத்தை கரப்பில்லா ஒன்றாக ஆகவே நிகமனமாக முடிக்குந் தன்மையது காண்டிகை உரையாகும். அது பொழுது, சூத்திரத்தின் உட்பொருளை விட்டு அகலாது அதன் உண்மையையே வெளியாக்கி தெளிவாக்கும் வகையில் உதவுவனவே ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் ஆகும். அனைத்தும் மெய்மையை காணும் நோக்குடனே விளங்குவனவாகும்; மெய்நெறித்ததுவாகும். உண்மையென்று ஒன்று இல்லையெனில், காண்டிகை உரைவகை எழுவதற்கு காரணம் இல்லை. பழிப்பில் சூத்திரம் ஒர் ஆழமான உண்மையைத் தான் கூறி நிற்கின்றது. ஆனால் பிறரால் காணவாரா நிலையில், அது
கரப்பாக இருக்க, தக்க ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும், அந்த கரப்பினனை போக்குகின்றனர் அவ்வளவே. தூசொடு கிடக்கும் ஓர் படிகத்தை தூசு போக்கி சுத்தமாக்கி சுடரவைப்பது போன்றது, காண்டிகை உரைவழி ஓர் சூத்திரத்தை கரப்பின்றி முடிப்பதாகும்.
சிவஞானபோதத்தின் காண்டிகை உரை
சிவஞானபோதத்தின் தனிச் சிறப்பாவது, தான் யாத்த சூத்திரங்கட்கு தானே மிகச் செறிவான சுருக்கமான ஓர் உரையும் எழுதி உபகா¢த்ததாகும். இவ்வகையில், தமிழ் இலக்கிய வரலாற்றில் இதுவோர் புரட்சியாகும். தான் யாத்த நூலிற்கு தானே உரை எழுதியமை தமிழ் இலக்கிய வரலாற்றில் இதற்கு முன் நடந்ததில்லை. போதத்திற்கு பாண்டிப்பெருமாள் உரைதொடங்கி எழுந்த உரைகளெல்லாம், மெய்கண்டாரே யாத்த உரைக்கு உரை எழுதுவதாகவே அமைந்துவிட்டன. இனி இவ்வுரை வடமொழி மதம் பற்றி வார்த்திகம் எனப்படுமாயினும், மேலே காட்டிய காண்டிகை உரை விளக்கத்தின்வழி காணும் போது அது மரபியலில் தெளிவாக்கப் படும் காண்டிகை உரை வகை என்பது தெளிவு.
ஆக இவ்வாறான ஓர் உரையை எழுதி தொல்காப்பிய மரபியல் வழக்கிற்கு மெய்கண்டார் புத்துயிர் ஊட்டுகின்றார் என்பதோடு சைவத்தையும் தொல்காப்பியம் படுத்துகின்றார் என்பது தெளிவு.
பண்டைய உரையோடு வரும் சூத்திர யாப்பில் அமைந்த ஓர் நூல் இறையனார் அகப்பொருள் ஆகும். மூல நூல் சங்ககாலத்து அல்லது சங்கம் மருவிய காலத்து நூலாக இருக்கலாம். ஆனால் அதன் உரை பரம்பரையாக உரைக்கப்பட்டு பிறகு ஒன்பதாவது நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டவொன்று என்று தொ¢கின்றது. எடுத்துக்காட்டுக்களாகத் தரப்படும்
கோவை இலக்கியப்பாடல்களே இவ்வுரையும் பரம்பரையாக வந்து வளர்ந்து ஒன்பதாவது நூற்றாண்டு வாக்கில் இப்பொழுது ருக்கின்ற வடிவத்தைப் பெற்றது எனத் தொ¢கின்றது. காட்டாக 8வது சூத்திரத்தையும் அதற்கு எழுந்த உரையும் காண்போம். அளவில் சுருக்கமாக இஇருப்பதால் இது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
சூ.8 ஆங்குணர்ந் தல்லது கிழவோள் தேஎத்துக்
தான்குறை உறுதல் தோழிக் கில்லை
என்பது என்னுதலிற்றோ எனின், இதுவும் தோழிக்கு¡¢யதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: ஆங்கு உணர்ந்தல்லது என்பது-- அங்ஙனம் அறிந்த பின்றை யல்லது என்றவாறு; கிழவோள் தேஎத்து என்பது-- தலைமகள் மாட்டு என்றவாறு: தான் குறை உறுதல் தோழிக்கு இல்லை என்பது--- தான் குறையுற்று முடிப்பல் என்னுஞ்சொல் தோழிக்கு இல்லை என்றவாறு.
எனவே, என்சொல்லப்பட்டதாம் எனின், கரவுநாட்டம் வேண்டுவாரையும் மறுக்கப்பட்டதாம். அ·தே யெனின் " குறையுறுதல் தோழிக்கு இல்லை" என அமையாதோ, "தான்" என்றது எற்றிற்கோ எனின், பின்னையும் தான் அல்லள் குறை நயப்புக் கூறுவாள், அவனது ஆற்றாமையைத் தன்கட்கொண்டு நின்றமையால் அவனே யெனப்படும்.
ஏனைய சூத்திரங்கட்கும் வ்வாறே உரை செல்கின்றது. வேண்டிய இடங்களில் இலக்கிய உதாதரணங்களும் தரப்படுகின்ன்றன. பொதுவாக இவற்றின் அமைப்பைக் காணும் போது அருஞ்சொல் விளக்கம், கிளவித்தொடர் விளக்கம் என்றும், நுதலியது விளக்கல் என்றும் இன்னும் சுட்டிய பொருளை தெளிவாக்கும் வகையில் தக்க இலக்கிய உதாரணங்களைத் தருவதுமாக செல்கின்றதைக் காணலாம். பொதுவாகக் காணும்போது
மெய்நெறித்ததுவாக அன்றி, உலகத்து உண்மை இதுதான் என்று மெய்மை விசாரணை செய்யாது, ஓர் சூத்திரம் யாதுதான் சொல்ல வருகின்றது என்பதை ஓர் அகராதியைப் போன்று விளக்கிச் செல்வதாகவே அமைவதைக் காண்கிறோம். சிவஞானபோதத்திற்கு மெய்கண்டார் யாத்த உரை இப்படிப்பட்டதன்று, மரபியல் கூறும் மெய்நெறித்ததுவாகிய காண்டிகை உரை வகையாகும். இதனை போதத்தில் வரும் ஓர் பகுதியைக் காட்டி விளக்குவம்.
இதன் பொருட்டு மிகச் சுருக்கமான ஒன்றாகிய ஐந்தாம் சூத்திரத்தை இங்கு முழுதாகத் தருகின்றோம்.
>>>
சூ.5 விளம்பிய உள்ளத்து மெய்வாய் கண்மூக்கு
அளந்து அறிந்து அறியா ஆங்குஅவை போலத்
தாம்தம் உணர்வின் தமியருள்
காந்தம் கண்ட பசாசத்து அவையே
என்பது சூத்திரம்.
வார்த்திகப் பொழிப்பு
கருத்துரை: என் நுதலிற்றோவெனின், இஇவ்வான்மாக்களிடத்துத் தமது முதல் உபகாரம் உணர்த்துதல் நுதலிற்று.
முதல் அதிகரணம்
மேற்கோள்: ஈண்டு, ஐ உணர்வுகள் ஆன்மாவால் உணரும் என்றது.
ஏது: அவற்றினான் ஆன்மா ஒன்றித்துக் காணின் அல்லது அவை ஒன்றையும் விடயியா ஆகலான்.
எடுதுக்காட்டு:
ஐம்பொறியை ஆண்டு அங்கு அரசாய் உளம்நிற்ப
ஐம்பொறிகள் உள்ளம் அறியாவாம்-- ஐம்பொறியில்
காணாதேல் காணாது காணுமுள்ளம் காணாதேல்
காணாகண் கேளா செவி
இரண்டாம் அதிகரணம்
மேற்கோள்: இனி இதுவும் தமது முதலாலே உணரும் என்றது
ஏது: இவ் வான்மாத் தன்னையே உணரும் இந்திரியங்களைப் போலத் தானும் தன்னை உணராது நிற்றலான்.
எடுத்துக்காட்டு
மன்னுசிவன் சந்நிதியில் மற்றுலகம் சேட்டித்தது
என்னும் மறையின் இயல்மறந்தாய்-- சொன்ன சிவன்
கண்ணா உளம்வினையால் கண்டு அறிந்து நிற்குங்காண்
எண்ணான் சிவன் அசத்தை இன்று
வெய்யோன் ஒளியில் ஒடுங்கி விளங்காது
வெய்யோனை ஆகாத மீன்போல-- மெய்யவனில்
கண்டுகேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனைக்
கண்டுடனாய் மன்னுதலைக் காண்
அருளுண்டாம் ஈசற்கு அதுசத்தி அன்றே
அருளும் அவன் இன்றி இல்லை-- அருளின்று
அவன் அன்றே இல்லை அருட்கண்ணார் கண்ணுக்கு
இரவிபோல் நிற்கும் அரன் ஏய்ந்து
>>>>>>
இங்கு விளங்கும் உரை , சூத்திரத்து உட்பொருளையெல்லாம் விளக்கும் வியாக்கியானங்கள் அல்ல. சூத்திரம் நுண்மையொடு புணர்ந்த ஞானத் தெளிவாகிய ஓர் ஆழமான உண்மையை உணர்த்த, படிப்பார் கேட்பார் மாட்டு அதுவோர் புதிராக கரப்பொடு கூடிய ஒன்றாக ஆகவே உடன்பட்டு ஒத்துப்போக முடியாத ஒன்றாகத் திகழ, இதனைக் கருதி அந்த கரப்பு நிலையை போக்குவான் வேண்டி இஇரண்டு படிமெய்களை அல்லது அதிகரணங்களை உதாகா¢த்து
உண்மைய உணர்த்தி உடன்பாடு கொண்டு வந்து அதன்வழி சூத்திரத்தோடும் உடன்பாடு கொண்டுவர முயல்கின்றார். இஇங்கு உதாகா¢க்கப்படும் படிமெய்களை நிறுத்தவே மேற்கோள் ஏது எடுத்துக்காட்டு(அல்லது) உதாரணம் என்றவாறு இஇயங்குகின்றது. மேற்கோள் உத்தேசமாகவே இஇருக்க அதனை நிகமனமாக்குதற்கு ஏதுக்களும் எடுத்துக்காட்டுகளும் தரப்படுகின்றன.எடுத்துக்காட்டுகள் இஇலக்கியங்கியங்களின் பகுதிகள் அல்ல, ஆழமான தத்துவ விளக்கங்களாகவே விளங்குகின்றன. ஆக மெய்கண்டார் தம் உரை, மரபியலில் வி¡¢க்கப்படும் காண்டிகை உரை என்பதாகும்; மெய்நெறித்தது, உண்மை இது என்று சாதிக்க வெழுந்தது.
முடிவுரை: மெய்கண்டார் ஆழ்ந்த தொல்காப்பியப் புலவர் என்பதோடு, சைவத்தை தொல்காப்பியம் செய்தவர் என்பதற்கு பல சான்றுகள் தரப்பட்டன. இதுவரை மெய்கண்டாரைப் பற்றி இக்கருத்துக்களை யாரும் சொல்லவில்லை. வரலாறு
கூறப்புகுகையில் அகத் சந்தானம் என்றவோர் புராணக் கருத்திற்கு ஆளாகி சிவஞானபோதத்திலேயே காணக் கிடக்கின்ற இஇந்த உண்மையை காணத்தவறி விட்டனர் என்றே தொ¢கின்றது.