முன் செல்லும் பெண்ணின் தோளில் பூத்த மழலைச் சிரிப்பில்மரபு விக்கி இருந்துஒரு நாள் இரவு 9.00 மணிக்கு ராஜமார்த்தாந்தனிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அதற்கு சில நாட்கள் முன்பு அவர் ஈழத்து கவிஞர்கள் பற்றி ஒரு கல்லூரி கருத்தரங்கில் பேசிய உரை, பின் எங்கள் இருவருக்கும் பிடித்த, கனடாவுக்கு புலம் பெயர்ந்து வாழும் ஈழக் கவிஞர், திருமாவளவனின் '"இருள் யாழ்" என்னும் தலைப்பிலான அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பையும் எனக்கு அனுப்பியிருந்தார். முதலில் படித்த அவரது கட்டுரை, எப்போதும் போல், எனக்கு பிடித்திருந்தது. கவித்வத்தையும் அனுபவ உண்மையையும் மாத்திரமே பார்வைக்கு எடுத்துக்கொண்டு, மிக நன்றாக எழுதப்பட்டிருந்தது அது. "கிடைச்சதா? படிச்சீங்களா? என்று கேட்டார். சொன்னேன். "கவிதைத் தொகுப்பு?" என்று கேட்டார். "இல்லை, இன்னம் படிக்கவில்லை. கட்டுரைப் பேச்சு படிக்க சுலபமாக இருந்தது ரசமாகவும் இருந்தது. அதை முதலில் படித்துவிட்டேன். கவிதையை இனிமேல் தான் சாவகாசமாகப் படிக்கவேண்டும்." என்றேன். "அதைத் தானே நீங்கள் முதலில் படித்திருக்கவேண்டும். படிச்சு சொல்லுங்க. அதைப் பத்தி நீங்க எழுதவும் வேணும். உங்க கிட்டேயிருந்து தானே நான் திருமாவளவனைத் தெரிஞ்சு கிட்டேன்." என்றார். எனக்கு கஷ்டமாக இருந்தது. "கட்டாயம் எழுதறேன்." என்றேன். "கொஞ்ச நாள்லே அங்கே வருவேன். வரப்போ சொல்றேன். சந்திக்கலாம்/" என்றார். இப்படியே நிறைய பேசிக்கொண்டே இருந்தார். அன்று அவர் பேசிய குரலில் நிதானம் இல்லை. வாய் குழறியது. குடித்திருக்கிறார், இன்னம் போதை தெளியவில்லை என்று தெரிந்தது. இடையிடையே அவர் வீட்டிலிருந்து அவரைக் கண்டிக்கும் குரலும் கேட்டது. ஆனால் அவர் அதைப் பற்றிக் கவலைப்படுவதாக இல்லை. "அதை விடுங்க. நீங்க எழுதணும்." என்றார் மறுபடியும். "பிறகு பேசலாமே," என்று சொல்லி பேச்சை வெட்டவும் மனது வரவில்லை. அவருடைய அந்த நிலையில், சூழலில் பேச்சைத் தொடர்வதும் கஷ்டமாக இருந்தது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு அவருடன் இரண்டு மூன்று முறை நானே தொடர்பு கொள்ள முயன்றேன். யாரும் தொலை பேசியை எடுப்பதாக இல்லை. கடிதமாக எழுதலாமா, என்று நினைத்தேன். எவ்வளவு எழுதுவது? பேசுவதே நல்லது, அதுதான் நியாயம் என்று மனதுக்குப் பட்டது. இதற்கிடையில் திடீரெனெ இந்த செய்தி. ஹரன் பிரசன்னா இனையத்தில் எழுதியிருந்ததிலிருந்து தான் எனக்குத் தெரிந்தது. அவர் இறந்தது சாலையில், ஏதோ கன வாகனம் மோதி இறந்து விட்டார் என்று சொன்னார் பிரசன்னா.
ஒரு நல்ல நண்பரை, நல்ல ரசிக மனம் படைத்த மனிதரை, ஒரு சிறந்த கவிஞரை இழந்து விட்டேன். அவருக்குச் சொல்ல வேண்டியிருந்தது, அவருடன் உரையாட வேண்டிருந்தது, நிறைய இருந்தது. என் மனசுக்குள் அந்த சந்திப்பை, நீண்ட உரையாடலை எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருந்தேன். சாவகாசமாக, எந்த இடையூறுமின்றி, அமைதியில், அவருக்குப் பிடித்த மாதிரியே நாலைந்து பெக் உள்ளே போக, அதுவும் வெகு சாவகாசத்தோடே தான் கொஞ்சம் கொஞ்சமாக.
ஆனால் அப்படி நடந்திருக்குமா என்பது சந்தேகம் தான். அந்த மாதிரியான சாவகாசத்துக்கெல்லாம் அவர் ஆளில்லை, இந்த விஷயத்தில் மாத்திரம். மற்றதெல்லாம் சாவகாசம் தான். இனி என்னவோ அது நடக்கப் போவதில்லை. அந்த ஏமாற்றத்தோடு ஒரு குற்ற உணர்வும் உள்ளே அரித்துக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முன்னரும் அவர் சுந்தர ராமசாமி கவிதைகள் பற்றி எழுதிய புத்தகமும் எனக்கு அனுப்பியிருந்தார். ஒரு வருடம் இருக்கும். அது பற்றி நான் கட்டாயம் எழுதவேண்டும் என்று அவர் இரண்டொருமுறை தொலை பேசியில் வற்புறுத்தியுமிருந்தார்.
நான் எழுதவில்லை. எழுதவேண்டும் என்று தான் இருந்தேன். சுந்தர ராமசாமியிடம் அவருக்கு இருந்த மதிப்பும் நட்பும் எந்த நிலையிலும் பங்கப் படாத ஒன்று. கவிஞராக, எழுதாளராக, நண்பராக. அதேபோல ராஜமார்த்தாண்டன் மிக உயர்வாக மதித்த இன்னொரு கவிஞர் தர்மூ சிவராமூவின் (பிரமீளின் அன்றைய பெயர்) குரோதம் மிகுந்த தாக்குதலால் கூட பாதிக்கப்படாத நட்பும் மதிப்பும் அவருக்கு சுந்தர ராமசாமி பேரில் இருந்தது. பின்னாட்களில் தர்மூ சிவராமுவிடம் காணப்பட்ட அற்பத்தனமான கோபங்களையும் பகைமையையும் அறிந்தும் அதை மீறி கவிஞராக தர்மூ சிவராமூவை அவர் மதித்தார். இதை ராஜமார்த்தாண்டனிடம் காணப்பட்ட சாத்வீகம் என்றும் சொல்லலாம். அததது அததன் இடத்தில் என்ற பக்குவ நிலையைக் குறிப்பதாகவும் சொல்லலாம். எதுவாக இருந்தாலும் தமிழ் எழுத்தாளர் உலகில் மிக மிக அரிதாகக் காணப்படும் குணம் இது. கவித்வ பிரக்ஞையும், வேறு எதுவும் தன்னைப் பாதிக்க விடாது தான் சிருஷ்டித்துக்கொண்ட உலகிலேயே ஒரு மோன நிலையில் வாழ்வதும் ஒரே இடத்தில் சங்கமித்துள்ள மாயம் என்று தான் சொல்லவேண்டும்.
இந்த மன நிலையை நான் அன்று புரிந்து கொண்டவன் இல்லை. கொல்லிப் பாவை இதழை அவர் பொறுப்பில் வெளியிட்டுக் கொண்டிருந்த காலத்தில் தான் நான் ராஜமார்த்தாண்டனை அறிவேன் - 1970-களின் பிற்பாதியில் அப்போது தர்மூ சிவராமூவுக்கு அவர் முன்னர் பாராட்டிக்கொண்டிருந்த எல்லோரையும் இப்போது கொண்ட பகைமையில் அழித்தே தீர்வது என்ற முனைப்பில் இருந்த காலம் அது. இவ்வாறு எதிர் எதிர் முனைகளில் இருந்த எல்லோருக்கும் கொல்லிப் பாவையில் இடம் தரப்பட்டது. அப்போது தில்லியில் இருந்த நானும் சுந்தர ராமசாமியும் அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். "என்னய்யா இது? சிவராமூ எழுதுவதில் நியாயமான வாதம் இல்லை. வீண் பகைமைக் காய்ச்சல் தான் இருக்கிறது என்பது ராஜமார்த்தாண்டனுக்கு தெரியவில்லையா? என்று கேட்டேன் ஒரு முறை. "ராஜமார்த்தாண்டனுக்கு சிவராமூ என்றால் ஒரு soft corner. அது இருக்கத்தான் இருக்கும்." என்று சிரித்துக்கொண்டே சொன்னார். 1972-1973 லிருந்து இன்று வரை நாலைந்து முறை நான் நாகர்கோயில் சென்றிருந்த போதிலும், ராஜமார்த்தாண்டனைச் சந்தித்ததாக நினைவில் பதிவுகள் இல்லை. அவரை நான் நேரில் பார்த்துப் பேசியது 2000-ல் சென்னையில் தான் என்று தான் நான் நினைக்கிறேன். அதற்கு சில வருஷங்கள் முன்பு, சாஹித்ய அகாடமியின் ஹிந்தி இதழ் பாரதீய சம்காலீன் சாஹித்ய பத்திரிகைக்காக நவீன தமிழ்க் கவிதை சிறப்பு மலருக்கு கவிதைகள் தேர்வு செய்தபோது, ராஜமார்த்தாண்டனின் 'அவனும் நானும்' கவிதையையும் சேர்த்திருந்தேன். அது எங்கேயிருந்தோ எடுத்தது. அவரது கவிதைத் தொகுப்பை நான் அறிந்தவனில்லை. ராஜமார்த்தாண்டனை கவிஞனாக அறிந்தவனும் இல்லை.அப்போது ராஜமார்த்தாண்டனை, தருமு சிவராமூவிடம் தான் கொண்ட அபிமானத்தையும் மீறி, சிவராமூவுக்கு என்னிடமிருந்த பகைமையையும் மீறி எனக்கு தன் பத்திரிகையில் இடம் கொடுத்த ஒரு அபூர்வ மனிதர் என்று தான் எனக்குத் தெரியும். கொல்லிப் பாவை அன்று நிறைய சச்சரவுகளுக்கு, சிவராமூவையும் மீறி, விரும்பி இடம் கொடுத்திருந்தது எனக்கு முக்கிய விஷயமாகப் பட்டது. பின் வந்த இடைப்பட்ட சில வருடங்களில் அந்த சச்சரவுகளின் சூடு தணிந்து அவையெல்லாம் சரித்திரமாக மனதில் பின் தங்கிய விஷயங்களாகியிருந்தன.
2000- ல் நான் சென்னைக்கு குடி மாறிய சில மாதங்களுக்குள் ஒரு ஜூன் மாத நாளில், தமிழினியின் புத்தக வெளியீட்டுக் கூட்டம் ஒன்றில் அவரைச் சந்தித்தபோது மிகுந்த சினேகபாவத்தோடு பேசிக்கொண்டிருந்தார். தமிழினி வெளியிட்ட புதுமைப் பித்தன் பற்றிய மூன்று புத்தகங்களில் ராஜமார்த்தாண்டன எழுதியதும் ஒன்றாக இருந்தது. தினமணியில் அவர் வேலை செய்துகொண்டிருந்ததாகத் தெரிந்தது. நல்ல இடம் தான், மகாதேவன் போன்றவர்கள் எல்லாம் இருந்த/ இருக்கும் இடம் என்று அதைப் பற்றி எனக்குள் ஒரு பிம்பம் இருந்தது. அதைத் தொடர்ந்து பின் ஒரு நாளில் அவரது கவிதைத் தொகுப்பு என, ஒரு சிறிய கையேடு மாதிரி, 50 பைசாவுக்கும் 60 பைசாவுக்கும் லலிதா சகஸ்ரநாமம், விநாயக ஸ்தோத்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் எல்லாம் விற்குமே இத்தினியூண்டு புத்தகம், அது ஒன்றை அனுப்பி வைத்தார். புத்தகம் தான் மினியாக இருந்ததே தவிர அது மிக அழகாக, மிகுந்த சிரத்தையோடு அச்சிடப்பட்டிருந்த, தொகுப்பு அது. இவையெல்லாவற்றையும் மீறி அது எனக்கு ஒரு மிகச் சிறந்த ஒரு கவிஞனை அறிமுகப் படுத்தும் கிட்டத்தட்ட 60 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக இருந்தது. அது "கவிஞர் பிரமிள் நினைவாக", சமர்ப்பிக்கப் பட்டதாகச் சொன்னது அந்தத் தொகுப்பு. எவ்வளவு தூரம் பிரமிள் என்ற ராஜமார்த்தாண்டத்தின் மனதில் இடம் பிடித்திருந்தார் என்பதை அது சொன்னது. ஆனால் அந்த தொகுப்பு பற்றி நான் எழுதியிருந்தேன். (புதுசும் கொஞ்சம் பழசுமாக - கவிதை பற்றி) கவிதை பற்றிய சிந்தனைகள், கவிதைகள் இரண்டிலும் ராஜமார்த்தாண்டன் போற்றும் பிரமிளும் ராஜமார்த்தாண்டனும் எதிர் எதிர் துருவங்களில் இருப்பதாகத் தான் சொல்லவேண்டும். பிரமிள் தன் கவிதைக்கான சிறப்புக்கள் என்று எதையெல்லாம் பிடிவாதமாக அதன் உயிர்ப்பு அற்ற கட்டத்திலும் பற்றி இருந்தாரோ அதையெல்லாம் முற்றிலுமாகத் தவிர்த்த கவித்வம் ராஜமார்த்தாண்டனது. பிரமீளின் சரிவு அவருக்குத் தெரியாமலில்லை. இருப்பினும், ஒரு சிகரத்தை ஒரு காலத்தில் தொட்ட பிரமிளின் நினைவு மங்கவில்லை.
கொல்லிப்பாவையில் மிகுந்த சர்ச்சையைக் கிளப்பிய பரிமாறல்கள் இடம் பெற்றன. எல்லாவற்றிற்கும் அதில் இடம் இருந்தது.
வழக்கத்துக்கு மாறாக இப்படியாயிற்று
எதனாலிப்படி?
திகைத்து நிற்கையில் தொடக்கத்தில் தடுமாற்றம் தான்
நிமிர்ந்து நின்றால் கைகள் காலைவாரிவிடும். இப்போது தவழ்ந்து செல்வது பழகிவிட்டது. நம்மைச் சுற்றி எந்தத் துறையிலும் வெற்றி பெறுபவர்கள் தவழ்ந்து செல்வதை இயல்பாக்கிக் கொண்டவர்கள்தான். கவிஞர் ஏதோ தமாஷாகச் சொல்கிறார் என்று தான் தோன்றும். ஆனால் ஒரு அசிங்கம் பிடித்த வாழ்வனுபத்தை எவ்வளவு அமைதியாக அடக்கிய எள்ளலுடன் சொல்லி விடுகிறார். நம்மைச் சுற்றி இருக்கும் தவழ்வதைப் பழகிக்கொண்டவர்களும் இதை மகிழ்ச்சியுடன் படிப்பார்கள். அவர்களைச் சொல்வதாக அவர்களுக்கு கோபம் வராது.
கலகக் காரனில்லை இப்போது
இது தான் நான் தொன்னூறுகளில் எங்கோ உதிரியாகப் படித்து பாரதீய சம்காலீன் சாஹித்ய தொகுப்பிற்கு தேர்ந்தெடுத்த அவனும் நானும் கவிதை. வெளி உலகத்தின் அகோரங்கள், அசிங்கங்கள் எதுவும் அவரது பார்வையில் பட்டு சகஜமாகிவிடவில்லை. அவர் ஏற்றுக்கொள்ளவுமில்லை. உள்ளுக்குள் அடங்கிக் கிடக்கும். அவ்வப்போது நினைவில் புழுங்குமாக இருக்கும். மறைவதுமில்லை. ஆனால் அமைதியாக ஒரு ஏளனச் சிரிப்புடன் அவை கவிதையாக வெளிவரும். இந்த குணம் தான் ராஜமார்த்தாண்டனிடம் கடைசி நாள் வரை காணப்பட்டது.
பத்திரிகை நடத்திய போதும், பலருடன் நேரில் பழகிய போதும், அவர் எதையும் காணாதிருந்ததில்லை. மனத்தினுள் எவ்வளவு சஞ்சலங்கள் இருந்தாலும், உலகின் வெளிநடப்புகள் பல அவருக்கு எவ்வளவு கசந்திருந்தாலும், அந்தக் கசப்புகள் அவரைக் கோபப்படுத்தி வெடித்துச் சீறுவதில்லை. கசப்புகள் மனித உறவுகளைத் துண்டித்து விடுவதில்லை. உணர்ச்சியற்றவர் இல்லை. மதிப்புகள் அற்றவர் இல்லை. அவர் எதனாலும் பாதிக்கப் படாதவர் என்றும் இல்லை. எல்லாம் உள்ளுக்குள் அடங்கிக் கிடக்கும். அவை வெளிப்படும்போதும் மிகத் தீர்மானமாக, யாருடைய முகத்துக்கும் அஞ்சாது, எந்த இழப்பு பற்றியும் நினைப்பில்லாது, எவ்வித சமரசத்துக்கும் இடமின்றி வெளிப்படும்.
இந்த அனுபவங்களை, அவர் பழக நேர்ந்த இலக்கிய நண்பர்களை, ('இலக்கிய' என்றும், 'நண்பன்' என்றும் சொல்வது ஒரு மரபு கருதியேதான், அர்த்தங்களுக்குப் போகவேண்டாம்) ஒருமைப் படுத்தி ஒரு கவிதை ஒன்று: இயல்பு மறைத்து நண்பனே முகமறியா முகமூடிக் கும்பலில் எனினும் உன்னுள் புதைந்திருக்கும் அம்முகம் வழியாய் இதமான ஒப்பனை
இதையே பல ரூபங்களில், பல்வேறு மன நிலைகளில், அவ்வப்போதைய அனுபவக் கீறல்களுக்கேற்ப பல கவிதைகள்
நீ ஒரு அயோக்கியன், என்று இப்படி அவர் கவிதைகளில் நிறைய இடங்களைப் பார்க்கலாம். அவர் கசப்பு குரோதமாக, சீற்றமாக வெளிப்படவில்லை.
கவிதை படிமங்களில், வர்ணனைகளில், அலங்காரங்களில், இல்லை. அனுபவத்தில், அதன் உக்கிரத்தில், அதன் தனித்வ பார்வை
நேற்று என்னூரில் பார்த்த மனிதர்கள் மட்டும் என்று ஒரு கவிதை. மனிதர்கள் முகங்கள் மாறுபடும் தான். ஆனால் இங்கு வேறு என்ற சொல், தனதல்லாத, பொய்யான என்ற "காலடியில் மாலையிலும் அறிந்திலேன் இன்றுவரை நிழலின் நிஜத்தை என்ற இரு சாதாரண சொற்கள் எங்கு நம்மை இட்டுச் செல்கின்றன? இது எப்படி சாத்தியமாயிற்று?.
ராஜ மார்த்தாண்டனுக்கு பிடித்தமான உலகம், அவருக்கு அமைதியும் மகிழ்ச்சியும் தரும் உலகம், மரங்களின், பறவைகளின்,
முன்செல்லும் பெண்ணின் என்ற இருவரிகள் தரும் போதையை இன்றைய எந்த கவிஞனின் வரிகள் தரும் என்று யோசித்துப் பார்க்கிறேன். இதற்கு
இத்தகைய ஒரு கவிமனத்தைத் தான், அவருடைய கவிதைத் தொகுப்பிலும், அவர் தொகுத்துள்ள கொங்கு தேர் வாழ்க்கை
மூன்றிலும் சமரசமற்ற, தன் பார்வையில் திடமான, எந்த விஸ்வரூபங்களுக்கும் ஆட்பட்டுவிடாத, ஆனால் அமைதியான ஒரு
"வேலியினுள் விதைத்திருந்த, பண்பாட்டுப் பயிர்கள், காலடியில் துவம்சமாச்சு," என்றும், "மனையாளின் கூரிய விழிகள்,
ராஜ மார்த்தாண்டனின் இயல்பும் ஆளுமையும் அப்படிப் பட்டது. அவரே தன் கவிதைகளில் தன்னைப் பற்றி, தன் எதிர்பார்ப்புகள் பற்றி, தன் கனவுகள் பற்றி எழுதியுள்ளார்.
ஒரு பறவையின் பறத்தலென,
இப்படி யார் கவிதைக்கு இலக்கணம் கூறியிருக்கிறார்கள்? "எனக்கான மலர், எங்கோ மலர்ந்திருக்கிறது, எத்திசையில்
"இல்லாமல் போக, இப்போதும் மனமில்லை. நூறாண்டு வாழ்ந்துவிட்டபோதும். கொஞ்சம் நேசம், அனேகம் துரோகங்கள்,
எனினும், பூக்களின் புன்னகை, மரங்களின் ஸ்னேகம், பறவைகளின் சங்கீதம், எனவே தான்..... (இல்லாமல் போக இப்போதும் மனமில்லை)
சலிப்பு என்று ஒரு கவிதை.
பெரிதினும் பெரிது கேள் பெரிதொன்றும் வேண்டாமெனக்கு இன்றிருப்பதோ நூறு ரூபாய் இளநெருப்பாய் உள்புகுந்து நம்மில் பலருக்கு உமர் கய்யாமின் ருபாயத், ஃபிட்ஜெரால்டின் மொழிபெயர்ப்பில் நினைவுக்கு வரும். அந்த உமரின்
Here with a loaf of bread beneath the bough
'கொஞ்சம் நேசம்', 'அனேக துரோகங்கள்' என்று வேறொரு முறை சொல்லியிருந்தாலும், ராஜமார்த்தாண்டனின், சொர்க்கம் இதோ: வீட்டின் முன்னறை முருங்கை மரமொன்று முருங்கைக் கிளைகளில் தெருவில் இந்தக் கோணத்தில்
இந்த கவிஞர், மனிதர், ரசிகர், குரோதமற்று உலவிய இலக்கியவாதி இல்லை இப்போது ராஜமார்த்தாண்டன் இறந்த மறு தினம் எனக்கு டோரண்டோவிலிருந்து திருமாவளவனிடமிருந்து தொலை பேசி வந்தது, நண்பர் மறைந்த இழப்பின் துக்கத்தைப் பகிர்ந்து கொள்ள.
வெங்கட் சாமிநாதன்/23.6.09 --Ksubashini 21:45, 12 டிசம்பர் 2010 (UTC) |