முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் -பாடல்கள் 3&4

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

ஈனன்னை சீர்பியம் பாடல்கள் 3&4

உரை முனைவர் கி. லோகநாதன்


ஈனன்னை சீர்பியம் -3

விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்தையும் ஈன்று புறம் தரும் புவனை மாத்திரம் அல்ல அம்மை. அரிமா ஏறி அஞ்சுதக்க உருவில் அநியாயங்களை அட்டூழியங்களை அழிக்கின்ற துர்க்கையும் அவள்தான். கோர இஇடியென , விசத்தைக் கக்கும் நச்சுப் பாம்பென உலகில் தேவைப்படும்போதெல்லாம் வெளிப்பட்டு கொடியவர்களை அழிப்பதும் அவள்தான். ஆயினும் அவள் சுதந்திரமானவள் அல்ல -- "ஆண்" ஆதிக்கத்திற்கு அடங்கியவள். ஆண்'" தான் அவளுக்கு சகல சக்திகளையும் அருளுகின்றான். அதனை அம்மையும் உணர்ந்தவளாக "ஆண்' சொற்படியே அம்மையும் ஆடுகின்றாள். "ஆண்" சங்காரகாரணனாகிய முதல்வன்! இவ்வாறு பாடுவதும் பண்டைய மத்தியதரை நாடுகளையெல்லாம் தன் தத்துவ ஆட்சிக்கு ஆட்படுத்திய ஏண் உடு அண்ணா எனும் ஒர் அம்மையார்! ஈண்டு இஇங்கு இஇப்புவனையே விசம் கக்கும் மாபெரும்பாம்பு என்று விளிக்கப்படுவதும் கருதத் தக்கது. இஇதுவே செமித்திய பழைய ஏற்பாட்டில் (Old Testament) புகுந்து பல திரிபுகளுக்கு ஆளாகியுள்ளது போலும்! இஇனி அடுத்து அம்மை கொற்றவையாக துதிக்கப்படுவதைக் காண்பம்


17. kur-gul-gul u-de a ba-e-si
Devastatrix of the lands you are lent wings by the storm

கூறு கொல்கொல் ஊத்தே ஆல் பாயிசி

18 ki-aga en-lil-le kalam-ma- im-mi-ni-dal
Beloved of Enlil you fly about in the nation

காங்க ஏண்லீல்ல களம்ம தள்ளிம்மினி

19 a-aga- an(a)-ke ba-gub-be-en
You are at the service of the decrees of An

ஆல்ஆக்ஞா ஆண்ணகே பா குப்பியென்

20 nin-mu za-pa- ag-zu-se kur i-gurum-gurum-e
Oh my lady , at the sound of you the lands bow down

நின் மோ! ஜபம் ஆக்.உசுசே குன்று ஈ குறுகும்குறுகும்மே

21 ni-me-lam u-lu-da nam-lu-u-lu
When mankind comes before you

நின்மேளம் உளுத்தே உளு-உளுநம்

22 ni-me-gar-hus-bi u-mu-re-gin
In fear and trembling at(your) tempestuous radiance

நோய் மெய் கால் உஷ்(ண)பி உள்ஏகின்மோரே

23. me-ta me-hus-bi su ba-e-re-ti
They receive from you their just deserts

மெய்த்து மெய் உஷ்(ண)பி செய் பா தில்யிரே

24. i-lu-ir-ra-ke-gal ma-ra-ab-se
Proffering a song of lamentation , they weep before you

இழு ஈரக்கே கால் மான்ற ஆப் சேய்

25 e-a-nir-gal-gal-la sila-ba mu-re-gin
They walk toward you along tha path of the house of all great sighs

இஇல் அந்நீர் கள்கள்ள சாலை பா ஏகின்மோரே.

குறிப்பு

17.kur> கூறு , குன்று: நாடு; gul> கொல்; gul-gul> கொல்கொல்: தொடர்ந்து கொன்று கொண்டே இஇருப்பது' u> ஊ, ஊத்தை: காற்று ; இஇடையே "d" என்பது 'அத்து'சாரியை; u-d-e> ஊ-த்து-ஏ; ba> பா, பாத்தல்: கொடுத்தல் ; 'si' பெண்பால் சுட்டுப்பெயர்(?) குல்-குல்-அம்மை> கொல்கொல்.அம்மை -> கொற்றவை

18. ki-aga> காங்கை> காமம்; காமம் எப்பொழுதும் "காமக்கனல்" என்றே கருதப்படுவதைக் காண்க. Enlil> வேண்லீல்; lil> காற்று; "லீலை" எனும் கருத்து இஇதனடியில் பிறந்திருக்கலாம். திருமால் "லீலாவினோதன்" எனப்படுவதைக் காண்க; im-mi-ni-dal> தளிம்மினி; இஇங்கு "மின்" "மினி" "மினே"எனும் வியங்கோள் படர்க்கை மூவிடப்பெயராக விளங்குகிறது. இஇன்றும் இஇது வழக்கில் உள்ளது. இஇயக்கத்தைத் தருவது காற்று என்று இங்கு தோன்றும் கருத்தில் பிற்காலத்தில் சித்தர்களால் பெரிதும் வளர்க்கப்பட்ட பிரணாயாமம் தோன்றி இஇருக்கலாம்.

19. a-aga> ஆல்-ஆக்ஞா. ஆல் ஆணை: ஆற்றலின் ஆக்ஞை; a-aga-an(a)-ke: இஇங்கு ஈற்று "-ke" என்பது "கந்தனுக்கு மனைவி" என்றால் போல்வரும் உடமைப் பொருளின் கு-வேற்றுமை உருபு; ba> பா: "அவள்" என்னும் கருத்தின் சுட்டுப்பெயர். பிற்காலத்தில் "என் ப" என்பனபோன்ற சொற்களில் வரும் உயர்திணை பன்மை சுட்டாகிவிட்டது போலும் ; gub> குப்பு, கப்பு, கூம்பு: பணிதல், கவிழ்தல்; gub-be-en: குப்பியென், குப்புவன்: இஇங்கு "-அன்" ஆண்பால் பெண்பால் என்று வேற்றுமைப் படுத்தா பொதுவின் பால் சுட்டு


20 za-pa> செபம், ஜபம்: செப்பு, சபி என்ற சொற்களையும் காண்க. ஆக 'ஜபம்' தூய தமிழ் சொல்லே யாகும் "ஜ" என்பது சகரப் போலி; ag> ஆக்கு: செய்தல்; gurum-gurum-e> குறூஉம்குறூஉம்மே: அடங்கிக் குனிதல்: "ஈ" : ஈதல், தருதல்: இஇங்கு துணை வினை. சீ> ஈ ?

21. ulu> உளு> ஆளு ; lu-ulu: உளு-உளு> ஆளுஆளு: மக்கள்; nam-lu-ulu: ஆளுஆளுநம்: மக்கள் பண்பினர்; ni-me-lam> நின் மேளம்> நின் வேளம்: வேளம் : பெண்கள் தங்குமிடம்

22. ni> நோய்: அச்சம் ; me-gar: மெய் கால்: உடம்பில் நிற்றல்: மெய்ப்பாடு; us> உஷ்(ணம்) ; வெட்பத்தின் போது உதிர்க்கப்படும் "உஷ்" என்னும் அசைவழி பிறந்த சொல் போலும்'; u-mu-re-gin> உள்ஏகின்மோரே: "மார்" "மோர்" உயர்திணை பன்மைச் சுட்டு. u> உள்> "உண்டாய்" எனும் துணை வினை போலும்

23. me-ta> மெய்த்து> இஇங்கு விதி; su ba-e-ti; ti> தில்: இஇருத்தல், su-ti> சூர்-தில்> கரம்-தில் = கை-தில்

24. ilu> இஇழு, அழு; ir-ra> ஈர: கண்ணீர்; ஈர்-அ: இஇங்கு அகர ஈறு பெயரடையாவதை (adjectives) உணர்த்தும்

25. e> il: மனை; a-nir: அந்நீர்: 'அந்" இஇங்கு மிகுதிப் பொருட்டு'; sila> சாலை, சிலை: "சில்": பிளத்தல் . சில்-அ> பிளக்கப்பட்டது. சில்-அ> சால்.அ > சாலை

ஈன்னனை சீர்பியம் -4

அனைத்தையும் ஈன்று புறம் தரும் அன்னை புவனை அட்டூழியங்கள் கண்டு அவற்றைத் துடைத்தொழிக்க அரிமா ஏறி உலகுலா வரும் துர்க்கையாகவும் வடிவெடுக்கின்றாள். தாய் என்பாள் தன் சேய்களுக்கு அழிவு என்றால் துடித்தெழுந்து கடுமையாகச் சீறி எதிரிகளை விரட்டுகிறாள் அல்லவா? மிருகங்களிடையே கூட இஇதனைக் காண்கிறோம். அந்த சீற்றத்தின் எல்லை வடிவமே கொன்று அழிக்கும் கொற்றவை வடிவம். இஇதுவும் இறைவனாகியஆண்ணின் இஇன்னொரு வடிவம்தான். பெண் தானாகிய பெம்மானின் வடிவம் தான். இஇதனால் தன்னை சங்காரகாரணாகிய முதல் என்றும் உணர்த்திவிடுகின்றான். அடக்கமுடியாத ஆணவச் செருக்கர்களை அழித்துதொழித்து அப்பாவிகளை காப்பாற்றும் திறத்து தெய்வமே, தானேத் தனக்கு தலைவனாக, தற்பரானாக இஇருக்கமுடியும். இஇனி அடுத்து வரும் நான்காவது பாடலில் ஆக்குந் திறத்து அம்மை அழிக்குந்திறத்து கொற்றவையாகவும் வெளிப்படும் மாண்பு கண்டு அம்மை அளப்பரிய சக்தியுடையவள், யாண்டும் அயராது இஇயங்கிக் கோண்டே இருப்ப்வள் என்று வியக்கும் வகையில் ஏண் உடு அம்மையார் உலக பண்பாட்டை தமிழ் பன்பாடாக்கி (இஇன்றைய தமிழர்கள் இஇதனை உணராத அறிவிலிகளாகவே இஇருக்கின்றனரே? என்ன செய்வது?)அந்த அம்மையார் பாடும் அந்த அழகியப் பாடலைப் பாருங்கள். பிற்காலஹ்த்டு சாங்கீயம் போற்றிய ‘பிரகிருதி' கருத்தின் தோற்றம் இங்கு.

பாடல் : நான்கு


26. igi-me-ta ni ma-ra-ta-si-ig
In the van of battle everything is truck down by you

இஇஙி அமைய்த்து நி(க) மான்றத்து சீக்கே

27. nin-mu a-ni-za-ta KA.KA. i-durud-e-en
Oh my lady, (propelled) on your own wings you peck away( at the land)

நின் மோ ஆல் நீயஜா KA.KA. ஈ தூர்த்தியென்

28. u-du-du-gim i-du-du-de-en
In the guise of a charging storm you charge

ஊ தூத்துஙிம் ஈ துத்துத்தியன்

29 u gu-ra-ra-ta gu im-da-ab- ra-ra-an
With roaring storm you roar

ஊ கூ அறைஅறையத்து கூவ் இஇயம்மொடு ஆவ் அறைஅறையென்

30 iskur-da sig mu-da-an-gi-gi-in
With Thunder you continually thunder

இஇசுகோரொடு சீக்கி மோஉடன் மீமீயின்

31. im-hul im-hul-da im-da-kus-u-de
With all the evil winds you snort

இஇயம் ஒல் இஇயமொல்லொடு இஇயம்மொடு கோசுத்தே

32. giri-za nu-kus-u i-in-si
Your feet are filled with restlessness

கீரிஜா நாகூசு ஈசீன்

33. balag-a-nir-ra-da i-lu mu-un-da-ab-be
To(the accompaniment of) the harp of sighs you give vent to a dirge

பலகை அந்நீரொட அழு முந்த அபையே

குறிப்பு:

26. igi= ingi> இஇஙி> இஇமை: அக்கி: கண்கள்; me> அமை, அமர்; -ta> அத்து-அ : -அ இ இங்கு இஇடப்பொருள் வேற்றுமை உருபு, 'அத்து' சாரியை. ன்i(க்)> நிக: எல்லாம்; ma-ra-ta > மான்றத்து; அத்து= அத்தால்; வேற்றுமை உருபு தொக்கி நிற்கின்றது. si-ig> சீக்கு: அழித்தல்

27. a> ஆல்: ஆற்றல்; ni> நீ: இஇங்கு "உன்" என்ற கருத்து; durud-e> தூர்த்தே; தூர்வை: குப்பைகூலங்கள், அழிவுப் பொருட்கள்

28 u> ஊ: காற்று. காண்க: ஊதை, ஊது etc. du-du> தூத்து: தூறல்?

29. gu> கூவ்: அலறல்; ra-ra> அறைஅறை

30 gi-gi-in= ngi-ngi-in.>ஙீஙீயின்> மீமீயின்: மீண்டும் மீண்டும்

31. im> iyam> இஇயம்: காற்று, காண்க: இஇயம்-பு: சொல்லல்; hul> ஒல், ஒல்கு: நசிதல்; kus-u> கோசு, கோசம்: சத்தம்

32. giri> கிரி, கீர் காண்க; உ-கிர்: நகம்; விரல் முன் இ இருப்பது, ஆக கிர், கீர்: விரல்; கீரை: கொடிபோன்று நீண்டு வளர்வது; கிரி: மலை, இஇவ்வாறு வளர்ந்திருப்பது? kus-u> கூசு; கூசுதல்: அடங்குதல், குறுகுதல்; nu>na> la: இல்ல். அல்;
in-si> si-in> சீன், சீல் , சூல்: சினை: நிறைதல்

இஇங்கு அம்மையின் விரல்கள் அல்லது கால்கள் யண்டுமே கூசாது இஇயங்கும் என்ற குறிப்பு வரலாற்று சிறப்பு மிக்கது. பிற்காலத்தில் இஇதுவே சாங்கீயத்து யாண்டும் அசைந்துகொண்டே ஓர் தானியங்கியாக நிற்கும் பிரகிருதி மாயை என்னும் கருத்திற்கு வித்திட்டுள்ளது போலும். சிவ நடராச பெருமானின் எடுத்த பாதமும் இஇதுதான். குத்தி நிற்கின்ற பாதம் ஆண் ஆக, அசைவினை குறிக்கும் எடுத்த பாதம் அம்மை பாதியாகும்.

33. balag> பலகை> மலாய்: balang :துளை கருவி? ilu> இழு, அஇழு; ab-be> அவையே: கூட்டமாக அழுதல் mu-un-da>முந்த: முயன்று?

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2011, 06:46 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,286 முறைகள் அணுகப்பட்டது.