முதற் சங்கத் தமிழ்: ஈனன்னை சீர்பியம் -படல்கள் 1&2

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

நூல் : ஏண் உடு அண்ணாவின் " ஈனன்னை சீர்பியம்" பாடல்கள் 1&2

உரை முனைவர் கி. லோகநாதன்

1. nin-me-sar-ra u-dalla-e-a

Lady of all the me's resplendent light

நின் மெய் சர்வ உள் தெள்ளிய

2.mi-zi me-lam gur-ru ki-aga-an-uras-a

Righteous woman clothed in radiance, beloved of heaven and earth

மை-சீ மேலம் கூறு காங்க வான் ஊரஸ்ய

3. nu-gig- an-na suh-kesda- gal-gal-la

Hierodule of An, (you) of all the great ornaments

நங்கி ஆண்ண சூஹ்கட்டு கள்கள்ள

4. aga-zi-de ki-aga nam-en-na tum-ma

Enamored of the appropriate tiara, suitable for the high priest-hood

அங்க சீத்தே காங்க ஏண்ணநம் தகும்ம

குறிப்பு:

1. nin: நில் அல்லது நீள் என்ற அடியில் பிறந்து "உயர்ந்தவள்" என்ற கருத்தில் அன்னைக்கும் அக்கைக்கும் வழங்கிய சொல்; "நம்" என்றும் "நன்" என்று சங்க இலக்கிய வழக்கில் உண்டு. sar-ra> சர்வ: அனைத்தும். இதன் அடியில் பிறந்தனவே சர்வம் சகஸ்ரம் ஆயிரம் போன்ற சொற்கள். இத்தகைய வடமொழி சொற்களின் மூலம் சுமேருத் தமிழே என்று தெரிகின்றது. u> ஊ, உள். ஒள் , ஒளி; dall-e-a > தெள்ளிய: இஇங்கு அகர ஈறு இஇன்றும் தமிழில் "பெரி-அ" "சிறி-அ" என்பனபோன்ற சொற்களில் விளங்கும் பெயரடை உணர்த்தும் இஇலக்கணச் சொல்லே

2. mi> மை: உயர்ந்த பெண்மகள்' zi> சீ : திரு நிறைந்த. சீ> சீர்>ஸ்ரி > திரு. me-lam: மெருகு> மேரம்> மேலம்: பிரகாசமான, மெருகுடைய. gur-ru> கூறு, கூறை: கூறு செய்யப்பட்டு உடுக்கப்படும் ஆடை; ki-aga> காங்க> காமம்; an> வான்; uras-a> ஊரத்திய: இங்கு " as>அத்து" சாரியை ஆகும். வடமொழியில் இதுவே ‘அஸ்ய' என்று மிக விரிவாக வழங்கி வருகின்றது.

3. nu-gig> நுங்கி> நங்கை , an-na> ஆண்ண: இங்கு அகர ஈறு உடமைப் பொருளின் வரும் வேற்றுமை உருபு. An> ஆண் : ஆண்டவன்; உலகத்தையே ஆளும் சக்தி எனப் பொருள் படும்; suh> சூஹ்>சிகை; kesda> கெஷ்ட்டிய> கெட்டிய>கட்டிய : அலங்கரிக்கப்பட்ட சிகை; கள்கள்ள> பெரிய சிறந்த , உயரிய. கள்> கணம்: உயர்வு. மேலும் தொகுதி கருத்தில் (e.g மான்கணம்) இஎன்று பன்மைசுட்டும் பெயர் விகுதியாக விளங்குகிறது. இது பிற்காலத்தில் எழுந்த ஓர் வழக்காகும்

4. aga> அங்க, அங்கி > அணி; zi-de> சீத்தே, சீயித்தே : இங்கு இடையில் "அத்து" சாரியை; nam-en-na> en-na-nam> ஏண்ணநம்: தெய்வீக பண்பு: ஏண்: உயர்வு; ஏண் > வேண்> வேள், வேளிர்; வேண்மான் என்ற சொல்லாட்சி சங்கத் தமிழில் உண்டு. "நம்" என்பது ஓர் பெயர்சொல்லாக்கி,(an abstract noun formative) இப்பொழுதுள்ள " அம், மை" போன்று. இதுவே தொல்காப்பியத்தில் ‘நயம்' என்று சுட்டப்படுகின்றது.


tum-ma: தகும்ம: இஇங்கு அகார ஈறு அதுவெனும் சுட்டு என்றும் கொள்ளலாம்.


5. me-imin-be su sa-du-ga

whose hand has attained (all) the 'seven' me's

மெய் இஇமின்பே சூர் சூடுக

6.nin-mu me-gal-gal-la sag-kesda-bi za-e-me-en

Oh my lady, you are the guardian of all the great me's

நின்மோ மெய் கள்கள்ள சங்கி கட்டுபி ஜாயேமன்

7.me mu-il me su-zu-se mu-e-la

You have gathered up the me's ;you have hung the me's on your hand

மெய் மோ இஇயல் சுர்ஜுசேய் மோ இஅலை

8 me mu -ur me gaba -zu bi-tab

You have gathered up the me's, you have clasped the me's to your breast

மெய் மோ ஓர் மெய் கவுள்ஜுஅ தைப்பி

விளக்கக் குறிப்பு:

5. me> மெய், மொய்: சத்திகள், உளதாக இருக்கும் தத்துவங்கள். imin> ? ஏழு என்றாலும் "சர்வ" என்பதற்கேற்ப "அனைத்தும்" என்ற கருத்துடையது. ஏழுலகம், ஏழ்பிறப்பு என்ற கிளவிகளிலும் 'ஏழ்' என்பது எல்லா பிறவிகளும் என்ற கருத்தில் வருகின்றது. su> சூர் > கூர்> கரம். sa-du> சூடு; - ga: -க: பன்மைச் சுட்டு

6.

mu> மோ: முன்னிலை மூவிடப்பெயர்: இஇங்கு ஒருமை, பண்மையிலும் வரும். சங்க இலக்கியத்தில் இது உண்டு - மொழிமோ சென்மோ என்றெல்லாம் அங்கே. me-gal-gal-la: மெய் கள்கள்ள என்பதில் வரும் அடை "பெருமை மிக்க" "கணம் பொருந்திய" " மிக மிகச் சிறந்த" என்ற கருத்துடையது. பாண்டியர்கள் 'கள்ளர்" எனப்படுவதோடு ஒப்பிடத் தக்கது. மூலப்பொருள் "பெருமை மிக்கோர்" "உயர்ந்தோர்" எனத் தெரிகிறது. sag-kesda: சென்னி கட்டு: தலைக்காவல் என்ற கருத்து போலும். தமிழில் விளங்கும் 'கஷ்டம்' என்ற சொல் இதனோடு சிந்திக்கத் தக்கது. கட்டிப்போடப்படுவதால் கஷ்டம் போலும். za-e-me-en : இஇங்கு "மேன்" என்பதை ‘மன்' என்னும் இஇடைச்சொல்லாகவும் ' மான்' என்னும் பெயர்சொல்லாகவும் கொள்ளலாம்.

7

il> "இயல்" அல்லது 'எழு". கோலெழுத்தில் யகர வகரங்கள் தனி எழுத்துக்களாக கொள்ளப்படவில்லை என்று தெரிகிறது e-la> அலை " : தொங்கவிடுதல் அல்லது 'இழை' : பூண்பது; su-zu-se: இங்கு 'se> சேய்" என்பது இஇடப்பொருள் நான்காம் வேற்றுமை உருப. சேய்> கே> கு; செய்: வயல் சேய்: தூரமான இஇடம்

8.


ur> ஓர்: சேர்த்தல் ; ga-ba> கவுள்; 'கபம்' என்ற சொல்லும் நெஞ்சிலிருந்து வரும் கபத்திற்குப் பெயராக இருக்கின்றது.

ga-ba> ba-ga> பாகம் (metathesis): நெஞ்சம், இடுப்பு? 'காப்பு" இ எசூழூ சொல்லும் இங்கு கருதத்தக்கது. bi-tab> tab-bi> தைப்பி


ஈனன்னை சீர்பியம் : பாடல் 2

எட்டு வரிகளோடு கூடிய முதல் பாடலில் அம்மை உலகம்மையாக, புவனையாக மிக அழகிய வரிகளில் , தத்துவ ஞானம் மிக்க வரிகளில் போற்றப்படுவதைக் காண்கின்றோம். இஇந்த பேரண்டத்தின் தலைவி, அன்னை அவள், தெள்ளிய ஒளி வடிவின் பராபரை ஆவள். ஆண் ஆகிய ஆண்டவனின் நங்கை, தன் அழகின் சிறப்பால் விண்ணிலும் மண்ணிலும் உள்ள அனைத்துயிர்களாலும் விரும்பப்படுகின்றவள். இஇந்த பேரண்டத்தையே தனது அணிகலங்களாகப் பூண்டவள் என்றெல்லாம் புகழப்படுகின்றாள். இஇதன் காலம் கி.மு. 2200 அல்லது அதற்கு முன் என்பதை நாம் மறக்கக்கூடாது. இஇனி அடுத்து இஇதே அம்மை துர்க்கையாக துதிக்கப்படுவதைக் காண்போம்.

பாடல் 2:

9. usumgal-gim kur-ra us ba-e-si

Like a dragon you have deposited venom on the land

உசும்கள்ஙிம் குன்ற உசு பாயிசி

10 iskur-gim ki-sig -gi-za ezinu la-ba-si-gal

When you roar at the earth like Thunder, no vegetation can stand up to you

இசைகோர்ஙிம் கீழ் சீக்கிஜா எழினு இஇல பா கால்சீ

11 a-ma-ru kur-bi-ta e-de

A flood descending from its mountain

அமரு குன்றுபித்து இழித்தே

12 sag-kal an-ki-a *inanna-bi-me-en

Oh foremost one, you are the Inanna of heaven and earth

சாங்கள் வான்கீழ ஈனன்னைபிமன்

13 izi-ne-ne-ra kalam-e seg-ga

Raining the fanned fire down upon nation

எழினே நிரைய களம்மே செங்கைய

14 an-ne me-si-ma nin ur-ra u-a

Endowed with me's by An lady mounted on a beast

ஆண்ணே மெய் சீயிம்ம நின் ஊர ஓவுஅ

15. inim-ku-an-na-ta inim-du-du

Who makes decisions at the holy command of An

எனம்கோ ஆண்ணத்த எனம் தூது

16 billuda-gal-gal-la ni-zu a-ba mu-un-zu

(You) of all the great rites, who can fathom what is yours?

பில்லுதம் கள்கள்ள நே ஜு யாப முன்சூழ்?

குறிப்பு:

9.usumgal> உசும்கள்:" உசு" என்ற ஒலி குறிப்பின் அடியில் பிறந்த சொல்; உடும்பு. கள்: பெரியது; kur-ra> குன்ற: அகர ஈறு இடப்பொருள் வேற்றுமை உருபு; us> விசம்: உமிழப்படுவது. ba> பனமை சுட்டு : ; si-gal> கால்சீ : கால் விடுதல், கால் யாத்தல், வளர்த்தல்

10 iskur> இசைகோர்: கோர-இசை: கூர்இஇசை; gin> ஙின்> இன்: வேற்றுமை உருபு; உவம உருபு எனினும் தகும். ki-sig-gi> கீழ் சீக்கி: நிலத்தை அழித்தல்; ezinu> எழினு: எழுவன, முளைப்பன: மரஞ் செடி கொடிகள். la> இஇல, அல: "na" என்றும் வழங்கும்; na>la: மறுப்பின் இடைச்சொல்லாக வடமொழியில் பெரும்பாலும் தமிழில் சிறிதும் வழங்கும். "அல, இல" என்பவை இன்றும் வழங்குபவை; si-gal: கால்சீ: காலசீத்தல், கால்யாத்தல், கால் விடுதல்

11. a-ma-ru> அமரி, அமுரி :நீர்; இங்கு வெள்ளப் பெருக்கு; e-de> இழித்தே; இழிதல்: விழுதல்; "ஈடு இடே" என்றும் கொள்ளலாம் என்பதொடு இஇதன் பொருளை "தொடர்ந்து கொட்டுதல்" என்றும் கொள்ளலாம்

12. sag-kal> சாங்கள்> தாங்கள்: இஇங்கு 'கள்' விகுதி உயர்மை சுட்டு; "g" என்பது 'ங்" என்றும் 'க்' என்றும் 'ன்' என்றும் சுமேரு அறிஞர்களால் கொள்ளப்படுகிறது ; sag> சாங், சான்> தான். "சாங்கியம்" என்பது உயர்வினை, தலைமைப் பண்பினை சுட்டும் பழந்தமிழ் சொல்லாகின்றது. இதனால் சாங்கியக் கோட்பாடு பழந்தமிழர் கோட்பாடு என்றும் ஆகின்றது. an-ki-a> வான்கீழ்-அ : விண்ணும் மண்ணும்; அகாரம் இஇங்கு சுட்டு; inanna: ஈன் அன்னை: புவனை; மண்ணுலகு விண்ணுலகு ஆகிய இஇரண்டையும் ஈன்றவள்

13.izi-ne > இஜினே: எழில்: இங்கு நெருப்பு, சுடர்; -n-e: ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபு. ne-ra: நிரை; இன்றும் "ஆன்-நிரை" என்ற சொற்களில் வழங்குவது; kalam> களம்: நிலம், நாடு; seg-ga> செங்க> கெங்கை: மலாய்: sungai : ஆறு

14. an-ne> ஆண்ணே: ஆணால்; -e> ஆல் : வேற்றுமை உருபு; me> மெய், மொய்: சக்தி அல்லது ஆற்றல் si> ஈ , ஈதல் , அருளல் ; ur-ra> ஓரி , ஊர்-தி; பிற இஇடங்களில் ur-mah> அரிமா: சிங்கம் ; u-a> ஓ-வ> ஓவுவ: ஓச்சுதல். இஇங்கு ஆண்ணால் சக்தி அருளப்பட அம்மை அரிமா ஏறி உலகுலா வருகின்றாள் என்னும் கருத்து, புவனை துர்க்கையாகவும் வருகின்றாள் என்பதைக் காட்டும்

15. inim, enim> எனம்: இஇப்பொழுது" "என" என்ற வினைசொல்லாகவே பயில்கின்றது; 'எனம்" என்ற இஇந்த பெயர்ச்சொல் வழக்கிழந்து போய்விட்டது போலும்; inim-ku: எனம்கோ: தெய்வீகச்சொல் enam-ku- an-na-ta> எனம் கோ ஆண்ணத்து-அ: ஆண் உடைய தெய்வீகச் சொல்' du-du> தூ(க்)தூ(க்)> தூது, துதி: இஇங்கு ஓர் தத்துவக் குறிப்பு: அம்மைக்கு தலைவன் ஆண் தான், அவனாலேயே சக்தி அருளப்படுவது என்பதொடு அவன் ஆணைப்படியே அம்மையும் செல்கின்றாள் என்று கூறப்படுகின்றது.

16. billuda> பில்லுதம்: இஇப்பொழுது "பில்லி" என்ற அளவில் இஇந்த சொல் சிதைந்து வழங்குகிறது. பில்லு> புல்லு: பொருந்துதல்: இஇங்கு யோகம் என்ற குறிப்பு உண்டு. யோக நெறிகளே 'பில்லுதம்" என்ற சொல்லால் பண்டு குறிக்கப்பட்டிருக்கலாம். ni> நீ, நே> நீயம், நேயம் : மறைஞானங்கள் a-ba> யாப> வினாவின் சுட்டுப்பெயர்; zu> சொல், சூழ் mu-un> முன்: பண்டைய துணைவினை

பங்களிப்பாளர்கள்

Ulagankmy

இப்பக்கம் கடைசியாக 24 மார்ச் 2011, 06:36 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,730 முறைகள் அணுகப்பட்டது.