சூருபாக்கின் நெறி
முனைவர் கி. லோகநாதன்
அன்பர்களே,
சுமேருத் தமிழ் இலக்கியங்கள் தமிழர்தம் பண்பாட்டு தோற்றத்தை செவ்வே புரிந்துகொள்ள உதவும் ஓர் அரிய அருங்கலப் பெட்டகம். அதிலிருந்து 'சூருப்பாக்கின் நெறி' என்னும் இன்னொரு நூலையும் அன்பர்களுக்கு விருந்தாக படைக்கின்றேன். இந்நூல் "The Instructions of Suruppak' என்ற தலைப்பில் Bendt Alster என்பாரால் கோலெழுத்து மூலத்திலிருந்து எழுத்துப்பெயர்த்தும் மொழிபெயர்த்தும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. ( Akademisk Forlog, Copenhagen 1974) இது தொல்காப்பியர் கூறும் "ஏது நுதலிய முதுமொழி"களின் தொகுப்பாகும். சுமேருத் தமிழர்களின் வாழ்க்கையை செவ்வே விளக்கும் பல வரிகளைக் கொண்டது. சுமேரு மொழி அறிஞர்கள் இதனை பழமொழிகளின் (proverbs) தொகுப்பு என்றே கூறுகின்றனர். பிற அறிஞர்கள் பழமொழிகளை தொகுத்தும் தனி நூற்கள் எழுதியுள்ளனர்.
இத்தகைய நூற்கள் சங்க இலக்கியத்தில் ஒன்றாகிய 'பழமொழி நானூறு" , நீதி இலக்கியங்களாகிய பதிணெண் கீழ்கணக்கு நூற்கள் என்பவற்றோடும் பிறகாலத்தில் தோன்றிய அறநெறிச்சாரம் , நன்னெறி ஔவையாரின் ஆத்திச்சூடி கொன்றைவேந்தன் என்பனவற்றோடும் தொடர்புடையனவாகும். இத்தகைய அறநூற்கள் இன்றளவும் தமிழில் எழுதப்பட்டும் வருகின்றன.
இந்நூலின் ஆசிரியர் ஆல்ஸ்டெர் அவர்களின் கூற்றுப்படி, உலகின் மிகப் பழமையான சாத்திரங்களில் இது ஒன்று எனப்படுகின்றது. பல நூற்றாண்டுகள் எழுதப்படாது வாய்மொழியாக இருந்து கி.மு 2500 வாக்கில் எழுதப்பட்டதாகக் கூறுகின்றார். ஆக இதன் தோற்றுவாய் கி.மு 3000த்தை எட்டுவதாக இருக்கலாம்.
" The following versions of this compositions are known: 1) A relatively well preserved archaic one from Abuu Salaabiikh (ca. 2500 B.C.), 2) a small fragment of an archaic one from Adab, nearly as old as the the Abu Salabikh version ( ca. 2400 B.C) , 3) a large and relatively well preserved 'classical' version dating to the early Old Babylonian period (ca. 1800 B.C ) and finally, 4) a small fragment of a much later Akkadian translation of the classical version (ca. 1100 B.C ) " (pp 7.)
இந்த நூலையும் ஏனைய நூற்களைப் போன்று சொல்லாய்வுகளோடும் பிற ஆய்வுகளோடும் அன்பர்களுக்கு ஓர் விருந்தாக படைப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.
இன்றில்லாவிட்டாலும் நாளை தமிழறிஞர்களின் கண்கள் திறக்கும், சுமேருத் தமிழே முதற் சங்கத் தமிழ் என்பதை புரிந்துகொள்வார்கள் என்ற நம்பிக்கையை நான் இன்னும் இழக்கவில்லை.
முனைவர் கி. லோகநாதன்
குறிப்பு: தமிழ் ஆக்கம் முதல் 78 வரிகளுக்கு மாத்திரமே இங்கு