மணிமேகலைக் காப்பியத்தில் காணும் கதைகள் - பெண்கள் - மருதிமரபு விக்கி இருந்துfrom rajam rajam@earthlink.net
மருதி
"தெள்ளு நீர்க் காவிரி ஆடினள் வரூஉம்
[சுருக்கமான பொருள்: மண்ணுலகில் மழைவளம் தரும் பெண்கள் பிறருடைய எண்ணத்தில் புகமாட்டார்கள். ஆனால், நானோ பிறன் ஒருவனுடைய நினைப்பில் புகுந்தேன். இனிமேல், பூணூல் அணிந்த என் கணவனோடு சேர்ந்து மூன்றுவகைத் தீயைப் பேணும் தகுதி எனக்கு இல்லை ...]
அந்த நகரத்தில் உள்ள பூதசதுக்கத்துக்குப் போகிறாள். போய், புலம்புகிறாள்.
[சுருக்கமான பொருள்: என்னைக் கொண்டவனுக்கு (== கணவனுக்கு) நான் பிழை செய்ததில்லை. என்னைப் பார்த்தவன் மனதில் எளிதாகப் புகுந்துவிட்டேன். மழையைத் தரும் கற்புடைய இல்லறவழியில் நடந்தேன். யான் செய்த குற்றம் என்ன என்று தெரியவில்லை. பூதசதுக்கத்துத் தெய்வம் நீ பொய்த்துப்போனாயோ?]
(குறிப்பு: இங்கே "வான் தரு கற்பின் மனையறம் பட்டேன்" என்பதற்கு உரையாசிரியர் கூறுவதிலிருந்து என் பொழிப்புரை வேறுபடுகிறது.)
[சுருக்கமான பொருள்: தெய்வத்தைத் தொழாமல், கொண்ட கணவனைத் தொழுது எழுபவள் 'பெய்' எனச் சொன்னால் பெருமழை பெய்யும் என்று சொன்ன அந்தப் பொய்க்காத புலவனின் பொருள் பொதிந்த சொற்களை நீ புரிந்துகொள்ளவில்லை. பிசி (== புதிர்), நொடி (== விடுகதை) இவையெல்லாம் பிறர் சொல்லக்கேட்டு, முழவு ஒலிக்கும் விழாக்கொண்டாடுதலை விரும்பி, கடவுளைப் போற்றுதலை கடமையாகக் கொண்டாய். அதனால் ... .]
[சுருக்கமான பொருள்: நீ ஏவினால் மழையும் பெய்யாது, பிறர் நெஞ்சைச் சுடும் தகுதியும் உனக்கு இல்லை. அந்தச் செயல்களை (== பிசி, நொடி கேட்டல், விழாவை விரும்புதல், கடவுளைப் பேணுதல்) நீ விட்டொழித்தால் ... உயர்ந்த வானத்து மழையும் உன் சொல் கேட்கும்; மனம் விரும்பியபடி நடக்கும் பெண்டிரைக் கட்டுவதுபோல என் கடுமையான பாசம் (== பாசக் கயிறு?) உன்னைக் கட்டாது.]
[சுருக்கமான பொருள்: மன்னவன் முறையாக ஏழு நாட்கள் காத்திருந்து முறைவழங்குவதைத் தவிர, அது என் முறை இல்லை. இன்னும் ஏழு நாட்களில், உன்பால் மனம் வைத்த மயக்கம் கொண்ட அவனைக் ககந்தனே விசாரித்து வாளால் வெட்டுவான்.]
(குறிப்பு: அதன்பிறகு மருதியின் நிலை என்ன என்று தெரியவில்லை.)
ககந்தன் சிறுவன் கதை
அரசர்களை வேரோடு அழிப்பது என்ற உறுதி பூண்டிருந்தான் பரசுராமன் ("மழுவாள் நெடியோன்"). அவனிடமிருந்து காந்தன் என்ற மன்னனைக் காப்பாற்றவேண்டி, அந்த ஊர்த் தெய்வம் ("கன்னி") அவன்முன் தோன்றி அவன் ஒளிந்துகொள்ளவேண்டும் என்று சொல்லுகிறது. தான் ஒளிந்துகொள்ளவேண்டுமானால் அந்த நகரத்தை யார் காப்பது என்று நினைத்துப்பார்த்த காந்தன் ஒரு காவற்கணிகையிடம் தனக்குப் பிறந்த, யாருக்கும் சிறப்பில் குறைவில்லாத, ககந்தனைக் கூப்பிட்டுச் சொல்கிறான்.
"அரசு ஆள் உரிமை நின்பால் இன்மையின் [சுருக்கமான பொருள்: அரசு ஆளும் உரிமை உனக்கு இல்லை அதனால் பரசுராமன் உன்னை நெருங்கமாட்டான். அகத்திய முனிவன் சொற்படி நான் வெளிப்பட்டுவரும்வரை ககந்தன் ஆகிய நீ காப்பது உன் கடமை என்று சொல்லி, அந்த ஊருக்குக் காகந்தி என்ற பெயரிட்டு, தான் மாற்றுருவம் கொண்டு அந்த இடத்தைவிட்டு நீங்கிப்போகிறான்.]
விசாகையின் கதையை இன்னொரு பதிவில் பார்த்தோம். தவ வழிப்பட்ட மணிமேகலைமேல் மனம்போக்கி அதன் காரணமாக வாளால் வெட்டுண்ட உதயகுமரனின் தந்தையாகிய சோழ அரசனுக்கு விசாகையின் கதை ஏன் சொல்லப்படுகிறதோ அதே காரணத்தால்தான் இந்த மருதியின் கதையும் சொல்லப்படுகிறது.
"இன்றே அல்லது இப்பதி மருங்கில் [சுருக்கமான பொருள்: பார் ஆளுகின்ற வேந்தனே! காமத்தின் வயப்பட்டு, பத்தினிப்பெண்டிரை நெருங்கியும் நல்ல தவவழிப்பட்ட பெண்கள்மேல் மனம் வைத்தும் தம் தீய செயலால் உயிர் இழந்தவர் பலர் இன்றைக்கு மட்டுமில்லை, பண்டைக்காலத்திலும் உண்டு.]
அதோடு, ஒரு சிறு கிளைக்கதைக்குள் பொதிந்துகிடக்கும் கருத்துச் செறிவையும் பாருங்கள்!
கொழுநனைத் தவிர பிற கடவுளைத் தொழுவதை ஏற்காத ஒரு நிலை, அப்படிப் பிற கடவுளைப் பேணுவதால் பெண்ணுக்கு ஏற்படும் இழப்பு (== மழை பெய்விக்கும் ஆற்றலை இழத்தல்), தன் ஈடுபாடு இல்லாமல் எவனோ ஒரு கயவன் தன்னை விரும்பினால் தான் விரும்பிச் செய்யாத குற்றத்துக்காகப் பெண் தன்னை நொந்துகொள்ளுதல், பூதசதுக்கத்துப் பூதத்தின் முன் தானே போய்த் தன்னை ஒப்படைத்துக்கொண்டு முறையிடல், பூதசதுக்கத்துப் பூதம் நீதியைத் தன்கையில் எடுத்துக்கொள்ளாமல் மன்னவன் கையில் விட்டுவிடுதல், ... இன்ன பிற செய்திகளும் ...
அதோடு ... "பொய்யில் புலவன்" என்று திருக்குறள் செய்த புலவனைக் குறிப்பிடல், பரசுராமன் கதை, அகத்தியன் பெயர்க்குறிப்பு, காகந்தன் என்ற அரசன் பெயர், கணிகையின் சிறுவனுக்கு அரசாளும் உரிமை இல்லாமை, காகந்தி என்ற ஊர்ப்பெயர், ... இன்ன பிற செய்திகளும் ... அள்ளித்தருவதோடு ...
அதோடு ... பூதம் ஒன்றின் வாயிலிருந்து வந்தது இந்த "தெய்வம் தொழாள் ...." என்ற மேற்கோள் என்பது இதுவரை எத்தனைப் பேருக்கு உறுதியாகத் தெரிந்திருக்கும்?
அதனால்தான் மணிமேகலையைப் படிக்கவேண்டும்! :-)
--Ksubashini 06:34, 29 அக்டோபர் 2011 (UTC) |