பொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்மரபு விக்கி இருந்துபொன்னாடை போர்த்தப்படாத ஒரு கவிஞர் – ஸ்ரீ ரங்கம் வி. மோஹனரங்கன்
யாப்பில் நன்கு பூட்டி வைத்துவிட்டு, அப்பாடா இனி தொல்லைப் படுத்தாது என்று நினைத்தோம். ஆனால் பூட்டு அப்படியேதான் இருக்கிறது. இது தான் அடங்காமல் வெளியே வந்து மறுபடியும் நம் முன் நிற்கிறது.”
இப்படி எழுதுகிறவர் தான் உண்மையாக உணர்ந்ததைத் தான் எழுதியிருக்கிறார், மொழியைத் தன் அனுபவங்களை அனுபவித்தவாறே பதிப்பிக்கத் தான் பயன்படுத்துகிறார் என்பது தெரிகிறது. கவிதை என்று அவருக்குச் சொல்லப்பட்டவை, அல்லது முன் வைக்கப்பட்டவை எதையும் அவர் கவிதையாக உணராதபோது அவற்றைக் கவிதை என அவர் ஏற்றுக்கொள்வதில்லை என்று தெரிகிறது. இம்மாதிரியான ஒரு குரல் கேட்பது மிக அபூர்வமாகி வருகிறது.
இன்னும் ஆச்சரியம் தரும் விஷயம், ஸ்ரீரங்கம் மோஹனரங்கன் கவிஞராகத் தெரியவந்தவர் இல்லை. அறியப்படுபவரும் இல்லை. அவர் எந்நேரமும் தமிழ், சமஸ்ருத ஆங்கில இலக்கியங்களிலும், தத்துவ நூல்களிலும் ஆழ்ந்திருப்பவர். அவற்றில் ஆழ்ந்திருப்பதே அவருக்கு நிறைவு தரும் ஒன்று. வேறு ஏதும் வேண்டாதவர்.
இந்த செங்கல், ஜல்லி, காரைப் பூச்சு வேலைகள் இன்னும் சுலபமாக நிறைவேறி வருகின்றன. கவிஞர் தொகைப் பெருக்கம் இப்போது பெருகியிருப்பது போல் தமிழ் இலக்கிய வரலாற்றில் எப்போதாவது இருந்ததுண்டா என்பது தெரியவில்லை. தெருவுக்குத் தெரு கவியரசுகள், கவி வேந்தர்கள், பொற்கவிக்கோக்கள், பொன்னாடைகள், மூக்கு நுனி துடிக்கும்போதெல்லாம் தன் நாளிதழில் தவறாது கவிதைகளை என எழுதி தம் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ளும் பெருந்தகைகளே கூட அக்கவிதைகளை திரும்பிப் பார்ப்பதில்லை.. அன்றைய ஆத்திரம் தீர்ந்த்தோடு அவை மறக்கப்பட்டு விடுகின்றன. கவிஞர்கள் என பொன்னாடையோடு பவனி வரும் இவர்களை மேற்கோள் காட்டவேண்டியதில்லை. நாற்பது வருடங்களுக்கும் மேலாக கவிஞர்களாக உலா வருகிறவர்கள், விருதும் பாராட்டு விழாக்களுமாகத்தான் உலா வருகின்றனர்.. கவிதை எனச்சொல்லத் தக்க எதுவும் எழுதியறியாதே. அவை கவிதை இல்லை என்று நான் தர்க்கித்து நிறுவ முடியாது. தர்க்கித்தல் விதிகள் சார்ந்தது. அறிவு சார்ந்தது. வாதங்கள் சார்ந்தது. விருதுகள், பட்டங்கள் விளம்பரங்கள் சார்ந்தவை அரசவை உறவுகள் சார்ந்தவை ஆனால் கவிதை உணர்வுகள் சார்ந்தது. என் உணர்வுகளில் கவிதை எனப் பளிச்சிடுவதை நான் இனங்காட்டத்தான் முடியும். வாதிட்டு நிறுவ முடியாது. செங்கல் ஜல்லிகளை கவிதை என்று சொல்பவர்கள் வாதிட்டுக்கொண்டே இருக்கலாம். என் உணர்வுகளில் அந்த வாதங்கள் பதியாது. ஸ்ரீரங்கம் மோகனரங்கன் வேறோரிடத்தில் சொல்லியிருப்பது போல், “வெற்று நுரைகளாக இவர்கள் இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள்”.
ஆனால், கவிதை தன்னைத் தானே இனங்காட்டிக்கொள்ளும். இளம் கனக சுப்புரத்தினமோ அல்லது நாமக்கல் ராமலிங்கமோ பாரதியார் கேட்க கவிதை ஒன்றைச் சொல்ல ”நீ கவிஞனடா!” என்று பரவசத்துடன் உரக்க ஆர்ப்பரித்தார் என்று படித்த ஞாபகம். கவிதை அப்படித்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும். யாரும் பேசாத, சர்ச்சைகளில் இடம்பெறாத, இது கவிதை ஐயா என்று யாரும் சுட்டிக் காட்டாத ஒன்றை, எனக்குக் கவிதை என சட்டென என் உணர்வுகளின் கதவுகளைத் தட்டும் ஒன்றைச் சொல்லலாம். உதாரணத்திற்கு.
பறவையே போகுமிடம் எங்கே என்றேன்
இக்கவிதை நம் சிந்தனைகளை எங்கோ இழுத்துச் செல்கிறது. ஒரு சிறு பொழுதை அதன் சாத்திய எல்லைக்கு நீட்டுச் செல்கிறது. ஜென் பௌத்த கருத்தாக்கத்தில் செயலும் செயலின்மையும் துயிலும் விழிப்பும் நொடியும் எல்லையற்ற காலமும் பேதமற்றுப் போகின்றன.
இதை ஒரு அனுபவமாகச் சொல்லும்போது, ஒரு அனுபவம் இத்தகைய சிந்தனைகளுக்கு இட்டுச் செல்லும்போது, அந்த அனுபவமும் சிந்தனையும் ஒரு (Unspoken rhythm) இசை ஒழுங்கோடு, சொல்லப்படாத, விதிக்கப்படாத இசை ஒழுங்கோடு மாற்றம் பெற்று கவிதையாகின்றது. இத்தகைய அனுபவமும் மொழிமாற்றமும் இசை ஒழுங்கோடு கவிதையாதல் ஸ்ரீரங்கனிடம் சாத்தியமாகியுள்ளன என்று எனக்குத் தோன்றுகிறது. இவ்வாறு இக்கவிதையை நான் புரிந்துகொண்டது எனக்கேயானதாகவும் இருக்கக் கூடும். நுரைப் பெருக்கமாக வார்த்தைகளைக் கொட்டிவிடுவோர் தாம் கவிதை எனச் சொல்லிக் கொண்டாடுவதையெல்லாம் நாம் ஏற்கிறோமா என்ன?
”கட்டடங்கள் நிலையாக நிற்பதில்லை
இரண்டு விஷயங்கள் ஒன்று, தனித்த அனுபவமே பிரபஞ்ச உண்மையாக ( from the Particular to the Universal) விரிகிறது. கட்டிடங்கள் சிதைய, குட்டிச் சுவர்கள் நிலைத்து நிற்கும் இயற்கையின் விடம்பனம். இப்படி ஒரு கருத்து அதன் கருத்தளவில் கவிதையாகாது தான். ஆனால் அது அனுபவமாக நம் கண்முன் நம்மைத் தாக்கி நிற்கும் போது அந்த அனுபவ சித்தரிப்பு கவிதையாகிறது. இம்மாதிரியான் எளிமையான சொல்லாக்கமும், அனுபவங்கள் கனத்த சிந்தனைகளைத் தம்முள் கொண்டிருத்தலும் கவிதைகளில் காண்பது மிக அபூர்வம் தான். ஸ்ரீரங்கனின் கவிதைகளில், அது சாத்தியமாகியுள்ளது.
இவையெல்லாம் கவிஞனாக உலா வருவதற்கு எழுதப்பட்டவை அல்ல. தமிழோ, ஆங்கிலமோ, வடமொழியோ அல்லது ஆங்கிலம் வழி கிடைத்த எம்மொழிக் கவிதையையும் தானே ஈடுபாட்டோடு படித்து வரும்போது தமிழில் எழுதிப் பார்க்கத் தோன்றியது. எழுதி வைத்துக்கொண்டது. மற்ற மொழிக்கவிதைகளையும் தமிழில் கவிதையாக எழுதிப்
“இருப்பதா...இறப்பதா?... இது தான் கேள்வி
சொல்லவேண்டியதில்லை. ஹாம்லெட்டின் புகழ்பெற்ற “தனக்குள்” போதும். இது அந்நாட்களின் குறிப்பேட்டிலிருந்து எடுக்கப்பட்டதாயினும், இது இப்போது தமிழினி வசந்தகுமாரின் தூண்டுதலில் புத்தகமாகத் தொகுக்கப்பட்ட காற்றுகளின் குரல் என்னும் 100 உலகக் கவிதைகளின் தொகுப்பில் சேர்க்கப்படவில்லை. காரணம், ஸ்ரீரங்கம் மோகனரங்கன் இன்று மொழிபெயர்ப்பதாக இருந்தால் வேறுவிதமாகத் தான் எழுதப்பட்டிருக்கும் என்று நினைப்பதால்.
கவிதை பற்றியே பேசும் ஒரு வடமொழிக்கவிதை, ( மோகனரங்கனின் தமிழாக்கத்தில்) சொல்கிறது:
”காற்றில் படபடத்து பட்டுத் துகில் விலகும் ஒரு கணக் காட்சியில்
கவிதை என்கிறார் வல்லணன் என்னும் கவிஞர்.
ஆண்ற்றியாஸ் ஓகோபெங்கோ வின் கவிதை ஒன்று எந்த நாடு என்று தெரியவில்லை. ஆப்பிரிக்காவில் ஏதோ ஒன்றாக இருக்கக் கூடும்.
”தெருவில் அங்கே நீச்சல் குளத்தில் துவட்டும் துணியெனக் கிடக்கிறது வெய்யில் பல கட்டிடங்கள் தாண்டி ஒரு கார் மேயும்
சுட்டெரிக்கும் வெயிலும், வெறித்துக் கிடக்கும் சூழலும் நீண்டு அயர்ந்து கிடக்கும் அமைதியும் கவிதையாகியுள்ளன.
பல்கேரிய நாட்டுப் பாடல் ஒன்று. நம் சங்ககாலப் பாடல்களை நினைவூட்டும்.
”இடையனைக் காதலிக்கும்
யாராய் இருந்தால் என்ன? என்பது அதன் தலைப்பு ”என் பெயர் என் நாடு இவையெல்லாம் உனக்கென்ன?
(பவுலூஸ் ஸைலென்ஷ்யாரியஸ் – இக்கவிஞர் எந்த நாட்டினராக இருந்தால் என்ன?)
எனக்குத் தெரிந்து தினம் கவிதையென எழுதிக்குவித்துக்கொண்டிருக்கும் ஒருவர். தமிழகமே அவர் வாய் முத்து உதிர்வுக்கு ஏங்கிக் கிடக்கிறது. அவரைச் சுற்றிப் பெருங்கவிஞர் கூட்டம். ஆனால் அவரைக் கவிஞர் எனச் சொல்ல அக்கூட்டத்தில் ஒருவரும் இல்லை வியப்பென்ன வெனில் அவருக்கும் சரி அவரைச் சுற்றிய கூட்டத்துக்கும் சரி, கவித்வம் இன்றளவும் கிட்டியபாடில்லை.
கவிஞர் என்று தெரியப்படாத மோகனரங்கனின் கவிதை ஒன்று கடைசியாக.
வெங்கட் சாமிநாதன்/13.4.2010
ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன்; - தமிழினி வெளியீடு, 342 டி.டி.கே சாலை, சென்னை-14
--Ksubashini 11:00, 21 நவம்பர் 2010 (UTC) |