பெசரட் தோசையும், எம்.எல்.ஏ. பெசரட்டும்

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

 இதுக்குத் தேவையான பொருட்கள்: பச்சைப் பயறு ஒரு ஆழாக்கு. பச்சரிசி அரை ஆழாக்கு. பச்சை மிளகாய் 4 இஞ்சி ஒரு துண்டு, மிளகு அரை டீஸ்பூன், சீரகம் ஒரு டீஸ்பூன், வெங்காயம் மூன்று பொடிப் பொடியாக நறுக்கியது. கருகப்பிலை, கொத்துமல்லி(தேவையானால்) உப்பு. தோசை வார்க்க எண்ணெய், தோசைக்கல் அல்லது நான் ஸ்டிக் தவா.


ஊறினால் நிறைய ஆகிடும். அதான் இது போதும்னு சொல்றேன். குறைஞ்சது ஆறு மணி நேரம் ஊறணும். . இரண்டையும் சேர்த்தே கூட ஊற வைங்க. இதுக்கு நான் இருவிதமாக சாமான்கள் போடுவேன். ஒண்ணு சோம்பு, கிராம்பு, மிளகு, சீரகம் ஊற வைத்து அரைக்கும்போது சேர்க்கிறது. இன்னொண்ணிலே சோம்பும் கிராம்பும் போடாமல் மிளகு, சீரகம் ஊற வைத்துப் பச்சை மிளகாய், இஞ்சியோடு சேர்த்து அரைக்கிறது. இப்போ நாம் பச்சைமிளகாய் நான்கோடு இஞ்சி ஒரு துண்டையும், அரை டீஸ்பூன், மிளகு, ஒரு டீ ஸ்பூன் சீரகத்தோடு சேர்த்து உப்பும் போட்டுக் கொண்டு பாசிப்பருப்பையும் அரிசி ஊற வைத்ததையும் அரைக்க வேண்டும். ஒரு சிலர் நறுக்கிய வெங்காயத்தில் பாதியையும் அரைக்கையிலேயே சேர்க்கிறார்கள். அது நம்ம இஷ்டம்.


நறுக்கிய வெங்காயத்தைக் கொஞ்சம் வதக்கி வைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு நன்கு தடவி விட்டு மாவை ஊற்றவும். மேலே வதக்கிய வெங்காயத்தைச் சேர்க்கவும். திருப்பிப் போடாமல் அப்படியே மூடி வைத்து வேக வைக்க வேண்டும். பின்னர் தொட்டுக்கொள்ளக் கொத்துமல்லிச் சட்னியோடு சாப்பிடலாம். இது ஒரு வகை.


இன்னொன்று தான் எம் எல்.ஏ பெசரட். அதுக்குக் கோதுமை ரவையில் உப்புமா செய்து கொள்ள வேண்டும். உப்புமா செய்யும் முறை


கோதுமை ரவை ஒரு கிண்ணம், 2 பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி ஒரு துண்டு, உப்பு, கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, தேவையானால் தேங்காய் துருவல், முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது,  தாளிக்க எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்.  உப்புமா வேக வைக்கத் தேவையா நீரைக் கொதிக்க வைத்துக் கொள்ளவும்.



இரண்டு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெயை ஒரு கடாயில் ஊற்றிக் கொண்டு கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, பச்சை மிளகாய், (பெசரட்டில் காரம் சேர்ப்பதால் உப்புமாக் காரம் குறைவாக இருத்தல் நலம்) இஞ்சி சேர்த்து வதக்கி, முட்டைக்கோஸ்தேவையானால் அதையும் வதக்கிக் கொள்ளவும்.  இதிலேயே கோதுமை ரவையைப் போட்டு வறுக்கவும்.  உப்புச் சேர்த்துக் கொண்டு, கொதிக்கும் நீரை ஊற்றி வேக வைக்கவும்.  உப்பு நன்கு வெந்து பொலபொலவென ஆனதும்  அதில் ஒரு கரண்டி எடுத்து பெசரட்டின் நடுவில் வைத்து சமோசா போல் மூடி பெசரட்டைக் கொஞ்சம் அதிகம் நேரம் வேக விடவும்.   உப்புமா வெளியே வந்துவிடாமல் ஜாக்கிரதையாக எடுத்துத் திருப்பிப் போட்டு வேக வைத்துப் பரிமாறவும்.  ஒரு நபர் ஒரு தோசை சாப்பிட்டாலே அதிகம்.  தேங்காய்ச் சட்னி, தக்காளிச் சட்னி, வெங்காயச் சட்னிகளோடு சாப்பிடலாம்.  சென்னை எம்.எல்.ஏ. ஹாஸ்டலில்  ஒரு காலத்தில் இது அதிகம் செய்து கொண்டிருந்ததால் இதற்கு எம்.எல்.ஏ. பெசரட் என்று பெயர்.



--Geetha Sambasivam 06:47, 7 ஜனவரி 2013 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 7 ஜனவரி 2013, 06:47 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,355 முறைகள் அணுகப்பட்டது.