பூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள் தொடர்ச்சி

மரபு விக்கி இருந்து

தாவிச் செல்ல: வழிசெலுத்தல், தேடுக

பக்கத் தடவியறி ஓநீநெ, எதிரொலி எழுப்பி, காந்தமானி ஆகியவற்றுடன் 1993 இல் பூம்புகாரில் அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகள்


பக்கத் தடவியறி ஒநீநெ, எதிரொலி எழுப்பி மற்றும் காந்தமானிஆகியவற்றைப் பயன்படுத்தி ஆழித் (marine) தொல்லியல் துருவியகழ்தல்கள் பூம்புகாரில் நிகழ்த்தப்பட்டன, இவை சில மாந்தர்ஆக்கப் பொருள்களையும், கட்டமைப்பு மீதிமிச்சங்களையும், உள்தட்டடுக்கில் (inner shelf) ஒரு கலமுடைவும் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தின. விளக்கமான அகழாய்விற்காக உணர்வைக்கிளறும் பெருந்தளங்கள் பின்வருமாறு அடையாளங் காணப்பட்டன:


தென் காவேரி ஆற்றுக்கரைப் புறக்கடல் (5.5 முதல் 8 மாத்திரி ஆழத்திற்கு இடைப்பட்ட பகுதி)
புதுக்குப்பம் புறக்கடல் (6.5 முதல்10 மாத்திரி ஆழத்திற்கு இடைப்பட்ட பகுதி)
நாயக்கன்குப்பம் புறக்கடல் (8.5 முதல் 9.5 மாத்திரி ஆழத்திற்கு இடைப்பட்ட பகுதி)


வண்டல்படிந்த மண்ணுக்கு அடியில் வேலைப்பாடமைந்த பொருள்கள் திரட்டபட்டதானது மூழ்கியதாக ஐயுறப்படும், வண்டல் படிவுகளுக்கு அடியில் புதையுண்டதாக நம்பப்படும் புகார் நகரத்து மாந்தர் வாழிடம் நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது. சிதைவுற்றுள்ள கட்டமைப்புகள் வண்டல்படிவின் அடியில் 5 மாத்திரி திண்மத்திற்கு (5 meters thickness) அமிழ்ந்திருப்பதால் இந்நிலப் பரப்பின் வண்டல்படிவு தகைவேகம் (rate of sediment) குறித்து அறிய உயர்நேர்த்தியான ஆழமிலா நிலநடுக்க முன்னுந்தி அளக்கை (high resolution shallow seismic propelled survey) தேவைப்படுகின்றது. மேலும், ஒலிப்பதிவுக் கருவி (sonographs) மற்றும் காந்தமானி ஆகியவற்றின் பதிவுகள் 17.5 மாத்திரி நீர் ஆழத்தில் ஒரு கலமுடைவைக் காட்டின. மூழ்குபணிகள் ஒரு கலமுடைவை உறுதிப்படுத்தின.


பக்கத் தடவியறி ஒநீநெ (Side Scan Sonar > [sonar - Sound Navigation and Ranging - ஒலிவழி-நீரடி நெடுக்கமீடு]):


இப்புலனாய்வுகளில் இவ்வினைக்கருவி பெரும் பங்கு ஆற்றுகின்றது. இது கடற்படுக்கைப் படமவரைவில் (mapping) பயனார்ந்ததொரு உயர்நேர்த்தியான கேட்பொலி அமைப்பு (high resolution acoustic system) ஆகும். பக்கத் தடவியறி ஒநீநெ வின் பதிவுகள் ஒலிப்பதிவுகள் என அழைக்கப்படுகின்றன. அவை கடல் தரையைப் படம்பிடிக்கப் பயன்படுத்தப்படுகின்றன, இது வானவொண்படத்தை (aerial photograph) ஒத்தது. இதில் குறிப்பிட்ட சிறப்பியல்புகள் கொண்ட ஒலி அலைகள் நீர் ஊடகம் மூலம் கடற்படுக்கைக்குச் சென்று மீளவும் மேற்பரப்பிற்கு எதிரடிக்கும் அல்லது சிதறித் திரும்பும். அவ்வாறு பெறப்பட்ட இயல்வுக்குறிகள் (signals) ஒரு வரைபடப் பதிவானில் (graphic recorder) பதியப்படுகின்றன. கடல்தரை மேல் கிடக்கும் ஏதொரு இயற்கைக் கட்டமைப்பானாலும் அல்லது மாந்தர் ஆக்கப் பொருளானாலும் இந்த அமைப்பின் உதவியோடு துப்பறிய முடியும். இந்த ஆக்கப்பாடு (advantage) காரணமாகவே இந்த அமைப்பு ஆழித் தொல்லியல் புலனாய்வுகளில் விரிவாகப் பயன்கொள்ளப்படுகின்றது. அளக்கை நேரத்தையும், துருவியகழும் பரப்பைக் குறுக்கி அதன்வழி அளக்கைச் செலவையும் சிறுமையாக்குகின்ற பக்கத் தடவியறி ஒநீநெ அளக்கைகள் தவிர்த்து வேறு எவ்வகை முறையிலும் ஒரு தளத்தை ஆழித் தொல்லியல் துருவியகழ்தலுக்காகத் தெரிவு செய்தல் என்பது மிகக் கடினமானது.


எதிரொலி எழுப்பி (Echo sounder):


எதிரொலி எழுப்பி கடற்படுக்கையின் ஆழத்தைத் தெரிவிக்கின்றது, இதன் மூலம் கடற்படுக்கையின் கண்டறியப்படாத பொருள்களின் உயரம் தீர்மானிக்கப்படுகின்றது. இது அமிழ்ந்துபோன வேலைப்பாடமைந்த பொருள்களைத் துப்பறிய உதவுகின்றது.


காந்தமானி (Magnetometer):


அமிழ்ந்துபோன பொருள்களைத் துப்பறிவதில் நன்கு அறியப்பட்ட விரைவானதும் செலவு குறைந்ததுமான தொல்- நிலப்பூதியல் (archaeo - Geophysical) பயன்முறைகளுள் இவ் வினைக்கருவியும் (Equipment) ஒன்று. காந்த அளக்கைகள் மண்காந்தப் (terro magnetic) பொருள்களைத் துப்பறிவதற்கு பயனார்ந்தவை. மேற்சொன்ன வினைக்கருவிகளிலேயே பக்கத் தடவியறி ஒநீநெ ஒன்றே அடிக்கடல் தொல்லியல் புலனாய்வுகளில் விளைவுறு அமைப்பாக (effective system) உள்ளது ஏனெனில் அதுவே கடல்தரை மேல் கிடக்கும் பொருள்கள் குறித்த நேரடித் தெரிசெய்தியை (information) வழங்குகின்றது. உரோசன்கிராவுட்சு, கிளீன் மற்றும் எட்கர்டன் ஆகியோர் (1972) இவ் வினைக்கருவியை புதிதாய்ப்புனைந்தனர் (invented).


பூம்புகாரில் பக்கத் தடவியறி ஒநீநெ :


முன்னமே சொன்னது போல இவ் அளக்கைகள் (surveys) 1993 ஆம் ஆண்டின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையாலும், தேசிய பேராழியில் நிறுவனத்தாலும் (National Institute of Oceanography) கூட்டாக மேற்கொள்ளப்பட்டன. எதிரொலியெழுப்பியும், பக்கத் தடவியறி ஒநீநெ 260 மாத்தரியும் (Model) அளக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டன. இந்த வினைக்ககருவி இருபக்கங்களிலும் இயக்கங்காட்டி (transducer) தொகுதியை பொருத்திய ஒரு கட்டி இழுக்கும் மீன்பொறி'யையும் (tow fish), ஒரு எஃகுக் கம்பி வடமும் அதோடு ஒரு இரட்டைக் கடற்கால் பதிவானும் (dual channels recorder) பெற்றிருப்பதாக வண்ணிக்கலாம். இந்த அமைப்பை 25 முதல் 600 மாத்திரிகளுக்கு இடைப்பட்ட நெடுக்கத்தில் (range) செயற்படுத்தலாம். வேறு சொற்களால் குறிப்பதானால், ஒரு வட்டார அளக்கைக்காக ஒரே நேரத்தில் பெரும பரவெல்லையாக (maximum swath) 1.2 அயிரி மாத்திரி (Km) வரையான பரப்பை இதனால் உள்ளடக்க இயலும். இந்த அமைப்பு ஒரு அலைபரப்பியின் எதிரொலியைத் (Echo of Transmitter) துப்பறியவும் அதோடு அவற்றை ஒலிப்பதிவுக் கருவி (Sonograph) எனப்படும் நேரோவப் பதிவுருவில் (facsimile record) வழங்கவும் முனைகின்றது. முதல் எதிரொலியே அடிமட்ட எதிரொலி, பிந்திய (subsequent) எதிரொலிகள் கடல், முதலாயவற்றின் குறுக்கே இருந்து எதிரடிப்பன (reflect) ஆகும்.


SIMRAD Ey Echo Sounder:


இந்த அமைப்பு கடலாழவளவியல் (Bathymetry) குறித்த விளக்கங்களைப் பெற அமர்த்தப்படுகின்றது. இந்த முறைமை கடற்படுக்கையின் ஆழத்தையும் இயல்பையும் குறித்த விளக்கங்களை வழங்குகின்றது.


பர்ரிங்கர் புரத்துரான்அச்சுச்சுழலோட்ட காந்தமானி (Barringer Proton Precession Magnetometer):


இவ் அமைப்பு ஒரு எடுத்துச்செல்லத்தக்க உணர்கருவியையும் (portable sensor) குறைவெடை முன்னுந்து வடங்களையும் (tow cables) உள்ளடக்கியது. இது புரத்துரான் அச்சுச்சுழலோட்ட நெறிமுறையில் முழுச் செறிவு அளவீட்டுக்காக ஒரு நீரகக்கரிப் பாய்மத்தில் (hydrocarbon fluid) செயற்படுகின்றது. காந்தமானியின் உள்வாங்கல் தகைவேகம் (reception rate) ஒவ்வொரு 5 நொடிகளுக்கு ஒரு அளவெடுப்பு (reading) என்பதிலிருந்து ஒரு நொடிக்கு 3 முறைகள் என்ற உயர் தகைவேகத்திற்கு தெரிவுறத்தக்கது (selectable). இச் செய்ற்பாட்டில் உயர் உள்வாங்கல் தகைவேகமே அறிவுறுத்தத்தக்கது. பதிவானுக்கான தரவு ஒரு ஒப்புமை வார்ப்பட்டை வரையம் பதிவானில் (analog strip chart recorder) பெறப்பட்டு இலக்கமுறையாக காட்சிப்படுத்தப்படுகின்றது (digitally displayed).


1993 ஆம் ஆண்டுச் செயற்பாடுகளின் போது பெரியவானகிரிக் கோவிலுக்கும் நாயக்கன் குப்பத்திற்கும் இடையே 5 முதல் 10 மாத்திரிகள் நெடுக்கமுடைய நீராழத்தில் ஒலிப்பதிவுக் கருவிகள் ஒரு வட்டாரத்தில் களிமண் வைப்புகளைக் காட்டுகின்ற மாறுபாடற்ற முடிவுகளைப் படமிட்டு விளக்கின.


புதுப்பாக்கம் புறக்கடல் அளக்கை ஒலிப்பதிவுக் கருவியில் 6.5 மாத்திரி நீராழத்தில் விரிந்து பரந்த கலமுடைவின் வெளிதோற்றத்தை வெளிப்படுத்தியது. இந்த பரப்பெல்லையின்(area) எதிரொலி வரையம் (echogram) மீண்டும் ஒரு அமிழ்ந்து போன தொல்கால்வாயைச் சுட்டியது. நாயக்கன் குப்பம் அளக்கைகள் 6.5 மாத்திரி ஆழத்தில் மணற்கூழாங்கற்களுடன் கூடிய கட்டமைப்புகளை வெளிப்படுத்தின.


மூழ்கிகளால் மேற்கொள்ளப்பட்ட பார்வைசார் உண்ணோட்டம் (visual inspection) பேரெண்ணிக்கையான கிளிஞ்சல் சிப்பிகளைச் சுட்டின. இத்தகு சிறப்புக்கூறு நிலத்தின் மேல் அமைந்த ஒரு மண்மேட்டை ஒத்த ஒரு உயரமான இடக்கிடப்பு ஏற்றத்தைச் (topogaphic elevation) சுட்டின.


மேற்கொள்ளப்பட்ட காற்றேற்றச் (airlift) செயற்பாடுகள் ஒருசில பானைச்சில்லுகளையும் கட்டமைப்பு மீதிமிச்சங்களையும் வெளிப்படுத்தின. இஃது கடற்படுக்கைக்கு அடியில் மாந்தர் குடியேற்றத்திற்கான சான்றைச் சுட்டியது.


பூம்புகாருக்கு 6 அயிரி மாத்திரி (Km) தெற்கே கிடக்கின்ற தரங்கம்பாடியில் 1989 இல் நிகழ்த்தப்பட்ட பக்கத் தடவியறி ஒநீநெ அளக்கைகள் ஒரு அமிழ்ந்து போன உறைகிணறு போன்ற கட்டமைப்பு, முதலாயவற்றை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அது போலவே, சின்ன வானகிரி புறக்கடலில் 9 முதல் 11 மாத்திரிக்கு இடைப்பட்ட நீராழத்தில் அரைவட்ட வடிவில் ஏற்படுத்திய கட்டமைப்பின் மீதிமிச்சங்களும் குறிப்பறியப்பட்டன (noticed).


பக்கத் தடவியறி ஒநீநெ அளக்கைகள் பூம்புகார் புறக்கடலில் 16 முதல் 18 மாத்திரிக்கு இடைப்பட்ட ஆழத்தில் 30 X 15 மாத்திரிகள் அளவீடு உள்ள கலமுடைவு ஒன்று நிலைப்பட்டிருப்பதை பதிவு செய்தன. அது 2 முதல் 3 மாத்திரிகள் உயரமுடையதாக இருந்தது. இந்த பரப்பெல்லையில் மேற்கொண்ட மூழ்குசெயற்பாடுகள் ஒரு கலமுடைவு பாதி அமிழ்ந்தும் மற்றொரு பாதி ஆழித் தரையின் மேல் வெளிக்காணத் தோன்றுமாறு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. ஏற்கெனவே கண்டறிந்தது போல் W . Blacket 1972 என்ற ஒரு பொறிப்பு தாங்கிய சில ஈய வார்ப்புக்கட்டிகள் மீட்கப்பட்டன.


புலனாய்வுகளின் முடிவுகள் அமிழ்ந்த நகருடைய கட்டமைப்புகளின் இருப்பு இன்னமும் சிதைந்துபோன புகாரில் 5 மாத்திரிகள் திண்மை உடைய வண்டல்படிவு வரை அடிப்பகுதியில் நன்றாகக் காப்புறுத்தப்பட்டிருக்க (preserved) வேண்டும் என்பதை சுட்டின. அதைமுன்னிட்டு, முறைப்பட்ட உயர்நேர்த்தியான ஆழமிலா நிலநடுக்க அளக்கைகள் (systematic high resoution shallow seismic surveys) பூம்புகார் வட்டார கடற்கரைக்கு அருகில் விளக்கமாக மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், அடிக்கடல் அகழாய்வுகள் அமைதியான கடல் நிலைமையின் போது உயர் அழுத்த காற்றேற்று செயற்பாடுகளின் உதவியோடு விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும். வேற்றுமைப்பாட்டு கோள் இருப்புநிலை முறை (DGPS - Differential Global Positioning system) ஒரு மாத்திரி (1 Km) வரை துல்லிய விளக்கம் தரும். ஆதலால், இந்த முறை புதையுண்ட கட்டமைப்புகளை ஊசிமுள்ளென சுட்டுவதற்கு பயனார்ந்ததாய் இருக்கும்.


சேசாத்தரி



--Geetha Sambasivam 07:22, 24 செப்டெம்பர் 2012 (UTC)

பங்களிப்பாளர்கள்

Geetha Sambasivam

இப்பக்கம் கடைசியாக 24 செப்டெம்பர் 2012, 07:22 மணிக்குத் திருத்தப்பட்டது. இப்பக்கம் 1,573 முறைகள் அணுகப்பட்டது.